FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Tamil NenjaN on June 12, 2012, 11:11:58 AM
-
பின்தொடர ஏதுமின்றி
வெறுமையான மனதும்
வெறுத்துப்போன வாழ்வுமாய்
ஏதோ ஒன்று மட்டும்
என்னைப் பின்தொடர்வதாய்
நடந்து கொண்டிருக்கிறேன்
ஆதரவுக்கரம் நீட்டவும்
ஆறுதல் வார்த்தை பேசவும்
யாருமில்லை இங்கே
செல்லும் வழியறிந்து
பின்தொடர யாருமின்றி
துன்பங்களைப் பின்தொடர்வதாய்
என் வாழ்க்கை
காலம் என்னைக் கடக்குமுன்
காலத்தைக் கடந்து விடவேண்டும்
என் லட்சியமிது.
உயிர்த்திருப்பதற்கு
எதிர்காலம் உதவாது
கடந்த காலமோ
வாழ்விற்கு போதனைகளாய்...
மனம் முழுக்க வேதனைகளாய்
அறிமுகமற்ற மனித முகங்களும்
அண்ணாந்து பார்த்தால் விரிந்திருக்கும்
ஆகாயப் பரப்பும் என் முன்னால்
எங்கு செல்வது...
என்ன செய்வது
திகைப்பு மட்டுமே எனக்குள் தோன்றும்
அந்த நொடிகளில்
இறந்த காலத்தின் வேதனைகள்
உந்தித் தள்ளும் என்னை
எதிர்காலத்தை வெற்றிகொள்ள
வீழ்ந்துவிட்ட போதிலும்
என்னிலட்சியங்கள்
தோற்றுவிடவில்லை இன்னும்
வாழ்வின் வெற்றிக்காய்
அணையாமல் எரியும்-என்னுள்
இலட்சிய வேள்வித் தீ
தரையோடு அழுந்திப் போகமுன்
வெற்றி கொண்டாக வேண்டும்
வாழ்வை-நான்
சோகங்கள் துறந்து
வண்ணத்துப் பூச்சியாய்
சிறகடித்துப் பறப்பேன்
களிப்பாய்-ஒருநாள்
தோற்றுவிட்டதாயெண்ணி
தூர ஓடிப்போன என் நட்புக்கள்
வீழ்ந்து விட்டதாய் கருதி
விலகிப் போன உறவுகள்
மீண்டும் நாடிவரும்
ஒருநாள் வரும்
காற்றோடு மறைந்து போகும்
வாழ்வின் பொழுதுகளில்
ஒரு நொடிபோதும்-வெற்றிக்கு
இழந்த வாழ்வை மீட்டெடுத்திடுவேன்.
நாட்கள் நகர்ந்து,
வருடங்கள் கடந்தும் -ஓட்டமாய்
ஓடிக் கொண்டிருக்கிறேன்
அந்த நொடியைத் தேடி
மீண்டும் வெல்வேன் ஒருநாள்.
நம்பிக்கை மட்டும்
என் துணையாய்
-
வீழ்ந்துவிட்ட போதிலும்
என்னிலட்சியங்கள்
தோற்றுவிடவில்லை இன்னும்
வாழ்வின் வெற்றிக்காய்
அணையாமல் எரியும்-என்னுள்
இலட்சிய வேள்வித் தீ
தோற்றுவிட்டதாயெண்ணி
தூர ஓடிப்போன என் நட்புக்கள்
வீழ்ந்து விட்டதாய் கருதி
விலகிப் போன உறவுகள்
மீண்டும் நாடிவரும்
ஒருநாள் வரும்
மீண்டும் வெல்வேன் ஒருநாள்.
நம்பிக்கை மட்டும்
என் துணையாய்
romba inspiring ah iruku unga kavithaigal tamil nenjan.
periyavanga solvanga..
kozhambina kuttiyila meen pidika mudiyathu endru..
unga mana nilaiya thelivaa vachitu amaithiya yosicha
enna seiyanumnu solution varum.
nambikai thaan vaazkai.
adhu irundaa podhum periya malai kooda siru kaduku mathiri.
ungal ennangal eederi unga latchiyathai seekirame adaiya vaazthukkal tamil nenjan..
-
thanks anu
always you encouraging me to write more and more, i shall be thankful to you if any mistakes in my poems, mention it and give me your valuable advice to increase my intrest,pls
-
உயிர்த்திருப்பதற்கு
எதிர்காலம் உதவாது
கடந்த காலமோ
வாழ்விற்கு போதனைகளாய்...
மனம் முழுக்க வேதனைகளாய்
அனுபவபூர்வமான வரிகள் ... கடந்து போனவைகள் வேதனைகள் வேண்டாதவை என்று ஒதுக்கவும் முடியவில்லை .. வேண்டும் என்று நெருங்க முடியாதவையும் கூட நன்று கவிதை தமிழ் .....