FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on June 11, 2012, 01:59:35 PM
-
குளிரூட்டும் வெண்ணிலவும்
உனைக் காண ஓடி வரும்
சிலிர்ப்பூட்டும் தென்றலும்
உனைத் தொட்டு பெருமை கொள்ளும்
மிரண்டோடும் கடலலையும்
உன் பாதம் பட்டு மோட்சம் பெறும்
என்னுள்ளே காதல் மட்டும்
உனைக் கண்டு தலை தூக்கும்