FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Tamil NenjaN on June 09, 2012, 01:11:14 PM

Title: உறுதியிருந்தால் ஜெயித்து விடலாம்
Post by: Tamil NenjaN on June 09, 2012, 01:11:14 PM
எண்ணக்குதிரையை
தட்டிவிடு
வண்ணங்களாய் கனவுகளை
மனதில் வரைந்துவிடு

இலட்சியங்கள் உனக்கு
எழுச்சிகள் தரும்
அலட்சியங்கள் - நீகாட்டினால்
தொலைந்துபோகும் உன்வாழ்க்கை

சோம்பலைத் துரத்து
அதுநமக்கெதிரி
வேதனைகளின் படிப்பினைகள்
நமக்கு போதனைகளானால்
வெற்றி நமக்குறுதி

அல்லும் பகலும்
காலம் நமக்காய் விரித்திருக்கும்
சுருட்டிக் கொள்வதும்
தட்டிச்செல்வதும் நம்
கைகளில் இருக்கும்

துவண்டுகிடந்தால்
துன்பங்கள் ஓயாது
உறுதிகொண்டால் வாழ்வில்
தடைகள் இருக்காது

ஒரு நொடி துணிச்சல்
இறந்துவிடலாம்
ஒவ்வொரு நொடியும்
துணிச்சல் கொண்டால்
வாழ்வில்-நாம்
ஜெயித்துவிடலாம்
Title: Re: உறுதியிருந்தால் ஜெயித்து விடலாம்
Post by: Anu on June 09, 2012, 07:41:49 PM

ஒரு நொடி துணிச்சல்
இறந்துவிடலாம்
ஒவ்வொரு நொடியும்
துணிச்சல் கொண்டால்
வாழ்வில்-நாம்
ஜெயித்துவிடலாம்
nice lines tamil nenjan (F)(F)
Title: Re: உறுதியிருந்தால் ஜெயித்து விடலாம்
Post by: supernatural on June 11, 2012, 12:30:24 PM
இலட்சியங்கள் உனக்கு
எழுச்சிகள் தரும்
அலட்சியங்கள் - நீகாட்டினால்
தொலைந்துபோகும் உன்வாழ்க்கை

சோம்பலைத் துரத்து
அதுநமக்கெதிரி
வேதனைகளின் படிப்பினைகள்
நமக்கு போதனைகளானால்
வெற்றி நமக்குறுதி

அனைவரும் உணர வேண்டிய வரிகள்...


துவண்டுகிடந்தால்
துன்பங்கள் ஓயாது
உறுதிகொண்டால் வாழ்வில்
தடைகள் இருக்காது

ஊக்கம் தரும் வரிகள்...

nalla kavithai varigal...
Title: Re: உறுதியிருந்தால் ஜெயித்து விடலாம்
Post by: Tamil NenjaN on June 12, 2012, 11:57:43 AM
நன்றி அனு..உங்கள் பின்னூட்டம் தொடர்ந்தும் எழுத எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது. நன்றி
Title: Re: உறுதியிருந்தால் ஜெயித்து விடலாம்
Post by: Tamil NenjaN on June 12, 2012, 12:00:18 PM
நன்றி supernatural சகோதரா.. கவிதையை ஆழமாக வாசித்து விமர்சனம் முன்வைத்திருக்கின்றமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்‌.
பாராட்டுக்கள் மட்டுமன்றி என் கவிதையின் குறைகளையும் சுட்டிக்காட்டினீர்கள் என்றால் எனக்கு அதனை திருத்திக் கொள்ள
வாய்ப்பாக இருக்கும்‍.

மீண்டும் நன்றி