FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 07, 2012, 03:11:06 PM
-
கொளுத்தும் கோடையில் வெளுத்து வாங்கும்
வெப்பத்தின் தாக்கத்தையும் புறந்தள்ளிவிடும்
நெருப்பாய் தகித்தபடி எனக்குள் இருக்கும்
கவிதை கனல்களின் தாக்கம் .
தகிக்கும் தகிப்பினை தணிக்கும் விதமாய்
தரமாய், அரும்பெரும் வரமாய், வரிகளை
தரத்தான், தந்து பெறத்தான் தவிக்கின்றேன்.
தகிக்கும் தணலின் தாக்கம் அணைத்திட
நினைத்தே, பதிக்கின்றேன் பதிப்புகளை
அப்படி பதிக்கும் பதிப்புக்கள் அனைத்திலும்
மட்டுமின்றி அணைப்பிலும் நிறைந்திருப்பது நீ ......
-
பதிப்புகளில் வார்த்தைகளால் .....
பெரும் வித்தைகள் செய்யும் வித்தகன் ...
வார்த்தைகளை அதன் தரம்...
சற்றும் குறையாமல் அழகாய் ..
தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தி...
இயல்பாய் பதிப்புகளை பதித்து ...
தமிழுக்கு பெருமை சேர்க்கும் கவி...
அணைப்பிலும் நீ ..அதன் வார்த்தைகள்...
வார்த்தைகளால் பிணைக்கப்பட்ட வரிகள்...
மிகவும் அருமை...