FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on June 07, 2012, 06:38:21 AM

Title: கண்ணழகா
Post by: ஸ்ருதி on June 07, 2012, 06:38:21 AM
கண்கள் ஆயிரம் கதைகள் பேச
கதை பேசும்
கண்களின் மொழி அறியாமல்
உன் கண்பார்த்து பேசமுடியாமல்
தவிக்கும் பாவை நான்...

காதல் என்ற வார்த்தைக்கு
அர்த்தம் கற்பித்தவன் நீ..
காதலை காதலாக தந்து
காவியம் எழுத
என் இதயத்தை ஏடாக்கி
காத்திருக்கிறேன்..

என்னை உணராது
போயினும்
உன்னை
உனக்கு புரியவைக்க
ஒரு நொடிபோதும்

இதயத்தை களவாடி
என்னை ரணமாக்கி
கலங்கியபோதும்
இமைக்காமல் பார்த்திருக்கிறேன்
என்னவனே
உன் வருகைகாக ...

உன்னை நினைத்து
உருகும் நெஞ்சம்
உன்னை வந்து சேர
ஒரு வழி சொல்வாயோ...
Title: Re: கண்ணழகா
Post by: Dharshini on June 07, 2012, 02:51:16 PM
arumaiyana kavithai kaathalal thavikara manasa azhaga eduthu soli iruka really nice
Title: Re: கண்ணழகா
Post by: ஸ்ருதி on June 07, 2012, 04:31:06 PM
Nadrigal darchu