FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: Dharshini on July 13, 2011, 04:12:33 AM
-
பாலக் ரைஸ்
அரிசி - ஒரு கப்
கீரை - ஒரு கப் [ஸ்பினாச் / அரைக்கீரை / சிறுகீரை]
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
மஞ்சள் தூள் - சிறிது
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
பூண்டு - 3 பல்
சோம்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
காய்கறி கலவை [உருளை, கேரட், காலிஃப்ளவர்]
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
நெய் - 3 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி [விரும்பினால்]
கறிவேப்பிலை
காய்கறிகளை நறுக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும். பூண்டை தோல் நீக்கவும். கீரையை சுத்தம் செய்து வைக்கவும். அரிசியை ஊற வைக்கவும்.
கடாயில் ஒரு தேக்கரண்டி எண்னெய் விட்டு சோம்பு தாளித்து பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கி அதில் கீரையை சேர்த்து நன்றாக வதக்கவும். இதை மிக்ஸியில் அரைக்கவும்.
மீண்டும் மீதம் உள்ள எண்ணெய், நெய் சேர்த்து காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
இதில் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
காய்கள் வதங்கியதும் அரைத்த கீரை விழுதை சேர்த்து கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
கீரை நன்றாக வதங்கி, மசால் வாசம் போனதும் 2 கப் நீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நீர் கொதித்ததும் அதில் எலுமிச்சை சாறு விட்டு அரிசியை சேர்த்து கொதி வந்ததும் சிறுதீயில் மூடி சாதம் வெந்ததும் எடுக்கவும். சுவையான பாலக் ரைஸ் தயார்.
இதில் பாசுமதி அரிசி, சீரக சம்பா அரிசி, புழுங்கல் அரிசி என எதை விரும்பினாலும் சேர்க்கலாம். ஆனால் அரிசிக்கு ஏற்றபடி நீர் அளவு பார்த்து சேர்க்கவும். குழந்தைகளுக்கு என்றால் நெய்யில் வறுத்த முந்திரி, பச்சை பட்டாணி கூட சேர்த்து புலாவ் போல் செய்யலாம்.
-
சிக்கன் பிரியாணி
பாஸ்மதி அரிசி - 4 கப்
சிக்கன் - 3/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 6
காஷ்மீர் மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
தயிர் - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை - அரை கட்டு
புதினா - அரை கட்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
முந்திரிபருப்பு - 10
தேங்காய் பால் - 2 கப்
எலுமிச்சம் பழம் - ஒன்று
சோம்பு - சிறிதளவு
பிரிஞ்சி இலை - 3
ஏலக்காய் - 6
கிராம்பு - 6
பட்டை - 2 துண்டு
நெய் - 3 மேசைக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
கேசரி பவுடர் - சிறிதளவு
ஒரு பாத்திரத்தில் கடுகு எண்ணெய், தயிர், 2 தேக்கரண்டி காஷ்மீர் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். இதில் ஒரு மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள், சிக்கனுக்கு தேவையான அளவு உப்பு, கேசரி பவுடர் சேர்த்து கிளறி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்த சிக்கனை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். ( டீப் ப்ரை பண்ண வேண்டாம்)
ஏலக்காய், கிராம்பு, பட்டை ஆகியவற்றை மிக்ஸியில் பொடித்து வைத்து கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிவைத்துக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் பாதி நெய் சேர்த்து சோம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை பொடி, முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பிறகு பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பிறகு கொத்தமல்லி இலை, புதினா, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து வதக்கவும். இதில் மீதமுள்ள மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூளை சேர்த்து கொள்ளவும். இந்த மசாலாவிற்கு தேவையான அளவு உப்பை சேர்த்து கொள்ளவும். தக்காளி வதங்கியவுடன் சிக்கனை சேர்த்து கிளறி ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து மூடி வைக்கவும்.
இந்த நேரத்தில் ஊற வைத்த அரிசியை தண்ணீர் நீக்கி கடாயில் எண்ணெய் ஊற்றி ஈரப்பதம் போகும் வரை வறுக்கவும்.(அரிசி ஊற வைத்த தண்ணீரை கீழே ஊற்ற வேண்டாம். பிரியாணிக்கு இந்த தண்ணீரை பயன்படுத்தி கொள்ளவும்)
வறுத்த அரிசியை சிக்கன் கலவையுடன் சேர்த்து கிளறி எலுமிச்சம் பழம் சாறை ஊற்றி தேங்காய் பால் மற்றும் 4 கப் தண்ணீர் தேவையான அளவு உப்பு நெய் சேர்த்து கிளறி கொதிக்க விடவும்.(ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர்)
5 நிமிடம் கழித்து கிளறி விட்டு பார்க்கவும். தண்ணீர் மேலே இல்லாமல் இருந்தால் அலுமினிய ஃபாயில் பேப்பரை போட்டு நன்கு மூடி சிம்மில் 10 நிமிடம் வைக்கவும்.
10 நிமிடம் கழித்து கிளறி பாருங்கள் தண்ணீர் இல்லாமல் இருந்தால் இறக்கி விடவும்.
சுவையான சிக்கன் பிரியாணி ரெடி
-
காளான் பிரியாணி
காளான் - 15
பாஸ்மதி அரிசி - 2 கப்
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
முந்திரி - 10
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
தக்காளி - 2
புதினா - 15 இதழ்
மல்லித் தழை - கைப்பிடி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தாளிக்க
நெய் - ஒரு தேக்கரண்டி
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாகவும், பச்சை மிளகாயை நீளமாகவும் நறுக்கிக் கொள்ளவும்.அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் முந்திரி சேர்த்து வறுக்கவும்.
பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும்படி வதக்கவும்.
பின் தக்காளியை சேர்த்து குழையும்படி வதக்கி புதினா மற்றும் மல்லித் தழையை சேர்க்கவும்.
நறுக்கிய காளானை சேர்த்து கிளறி மூடி வைக்கவும்
5 நிமிடம் கழித்து தூள் வகைகளை சேர்த்து தேவையான உப்பை போட்டு 5 நிமிடம் வேக விடவும்.
பின் குக்கர் பாத்திரத்தில் இந்த கலவையையும், அரிசியையும் சேர்த்து, அரை தேக்கரண்டி நெய், ஒரு பட்டை, சிறிதளவு புதினா, மல்லித் தழை போட்டு 3 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
பிரியாணி ஆனதும் அரை தேக்கரண்டி நெய் விட்டு கிளறி எடுக்கவும். சுவையான, ஈஸியாக செய்யக் கூடிய காளான் பிரியாணி தயார்.
-
தேங்காய் சாதம்
தேங்காய் துருவல் - கால் கப்
வடித்த பச்சரிசி சாதம் - 1 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 4 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம் )
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
வேர்கடலை - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு (நறுக்கவும்)
கொத்தமல்லி - சிறிது
பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை, எண்ணெய், நெய் - தாளிக்க
தேங்காய் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு, முந்திரி - தேவைக்கு ஏற்ப
பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய், நெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுத்து பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்கவும்.
தாளித்தவற்றுடன் கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
தட்டில் சாதத்தை கொட்டி பரத்தி உப்பு, தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு ஆற வைக்கவும்.
நன்கு ஆறிய சாதத்தை தாளித்த தேங்காய் கலவையுடன் சேர்த்து கலந்து விடவும்.
சுவையான தேங்காய் சாதம் தயார்.
தேங்காய் எண்ணெய் சுவை பிடிப்பவர்கள் தேங்காய் எண்ணெயிலே செய்யலாம். தேங்காயை சேர்த்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும் மிதமான தீயில் செய்தால் தான் கருகாமல் வரும்.
-
வெஜ் ஃப்ரைட் ரைஸ்
சாதம் - 2 கோப்பையளவு
வெங்காயம் - 1
கேரட் - 2
பீன்ஸ் - 15
முட்டை - 2
சோயா சாஸ் - சிறிது
சிக்கன் க்யூப் - 1
மல்லி இலை - சிறிது
பச்சை மிளகாய் - 1
பச்சை பட்டாணி - 1/2 கோப்பை
எண்ணெய் - 3ஸ்பூன்
உப்பு - தே.அளவு
வெங்காயம்,கேரட்,பீன்ஸை நீளவாக்கில் வெட்டவும்.மல்லியை கழுவி வைக்கவும்.மிளகாயை கீறி வைக்கவும்.
முட்டையை ஒரு கோப்பையில் கலக்கி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,மிளகாயை போட்டு லேசாக வதக்கவும்.
அதனுடன் கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்து பாதி வேகும் அளவு வதக்கவும்.
காய்கள் வதங்கியபின் அதை ஒரு ஓரமாக சட்டியில் ஒதுக்கிவிட்டு முட்டையை ஊற்றவும்.
முட்டை வெந்தபின் அதை கொத்திவிட்டு அதில் பட்டாணி,மல்லி,சிக்கன் க்யூப் சேர்த்து சோயா சாஸ் ஊற்றவும்.
இதில் உதிரியாக வேக வைத்துள்ள சாதத்தை போட்டு பிரட்டி எடுக்கவும்.
இதனுடன் இறால் ஃப்ரை நல்லா இருக்கும்.
Note:
இதில் முட்டை கோசும் சேர்க்கலாம்,எல்லா காய்கறிகளும் அரை வேக்காட்டில்தான் இருக்கனும்,சாதம் உப்பு போட்டு வேக வைக்கவும்.சிக்கன் க்யூப் மற்றும் சோயா சாஸ் சேர்ப்பதால் காய்கறிகளுக்கு உப்பு போட வேண்டாம்.
-
மட்டன் பிரியாணி
ஆட்டுகறி - 1 1/4 கிலோ
பாசுமதி அரிசி - ஒரு கிலோ
வெங்காயம் - கால் கிலோ
தக்காளி - கால் கிலோ
தயிர் - 100 கிராம்
எலுமிச்சை - ஒன்று
பச்சைமிளகாய் - 8
மல்லி இலை, புதினா - கால் கட்டு
கறிவேப்பிலை - சிறிது
ஏலக்காய், கிராம்பு - தலா 3
பட்டை - ஒரு சிறுத்துண்டு
கல்பாசி இலை - சிறிது (அல்லது அன்னாசிபூ 3)
பிரியாணி இலை - 1
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
நெய் - 100 கிராம்
எண்ணெய் - 100 கிராம்
அரைக்க:
இஞ்சி - 75 கிராம்
பூண்டு - 75கிராம்
ஏலக்காய் - 15 எண்ணிக்கை
கிராம்பு - 15 எண்ணிக்கை
பட்டை - 2 (விரல் அளவு)
அரிசியை அரைமணி நேரம் ஊற விடவும். கறியை கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும். அரைக்க கொடுத்தவைகளை அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நான்கு துண்டாக நறுக்கவும். மிளகாயை கீறிக் கொள்ளவும்
குக்கரில் கறி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், நெய் பாதியளவு, கறிக்கு தேவையான உப்பு, தயிர், அரைத்த இஞ்சி பூண்டு விழுது பாதி போட்டு நன்கு கிளறி குக்கரை அடுப்பில் வைத்து கறியை 5 நிமிடம் வேக வைக்கவும்
அடுப்பில் பெரிய குக்கரை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி இலை, பிரியாணி இலை போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு சிவக்க வதக்கவும். பின் தக்காளி, மிளகாய் போட்டு வதக்கி மீதி இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
அதில் தேவையான அளவு தண்ணீர் சாதத்துக்கு தேவையான உப்பு வேக வைத்த கறி தண்ணீரையும் சேர்த்து கொதி வரவும் கழுவிய அரிசியை சேர்க்கவும்.
தண்ணீர் வற்றி அரிசி வெந்து வரவும் வேக வைத்த கறி, லெமன் சாறு, மல்லி இலை, புதினா, நெய் சேர்த்து ஒரு சேர கிளறி விட்டு மூடி வெயிட் போட்டு சிறு தீயில் 5 நிமிடம் வைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து ஆவி அடங்கியவுடன் மூடியை திறந்து ஒரு சேர கிளறி விட்டு பரிமாறவும்.
சுவையான மட்டன் பிரியாணி ரெடி.
-
ஃப்ரைட் ரைஸ்
பாஸ்மதி அரிசி - கால் கிலோ
பீன்ஸ் - 50 கிராம்
கேரட் - 50 கிராம்
முட்டைகோஸ் - 50 கிராம்
குடைமிளகாய் - ஒன்று
உப்பு - தேவைக்கு
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
கிரீன் சில்லி சாஸ் - ஒரு தேக்கரண்டி
வெள்ளைமிளகு தூள் - காரத்திற்கேற்ப
எண்ணெய் - தேவைக்கு
முதலில் காய் வகைகளை ஒரே அளவில் நீள நீளமாக நறுக்கவும்.
பாஸ்மதி அரிசியை உதிர் உதிராக வடித்து ஆற வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பீன்ஸ், கேரட், காய்க்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
அதோடு முட்டைகோஸ், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் உப்பு, சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து லேசாக வதக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு வதக்கிய காய் கலவையில் சாதம், மிளகுதூள் சேர்த்து ஒன்றாக கலக்கவும். பின் மீண்டும் அடுப்பில் 2 நிமிடம் வைத்து கிளறி இறக்கவும்.
சுவையான சைனீஷ் ஃப்ரைட் ரைஸ் ரெடி. இதனுடன் கோழி குருமா, வெஜ் குருமா, ஆனியன் ரைத்தா வைத்து சாப்பிட சுவை அருமையாக இருக்கும்.
சில்லி சாஸ்க்கு பதில் பச்சைமிளகாயை அரைத்தும் சேர்க்கலாம்.
-
புளியோதரை
வடித்த பச்சரிசி சாதம் - 1 1/2 கப்
புளி - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 15 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்)
கடலை பருப்பு - ஒரு பிடி
உளுந்து - ஒரு பிடி
வேர்க்கடலை - ஒரு பிடி
கடுகு - 3 தேக்கரண்டி
சீரகம் - 3 தேக்கரண்டி
மிளகு, வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
தனியா, எள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவைக்கு ஏற்ப
முதலில் மேற் சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
புளியை அதிக நீர் விடாமல் கெட்டியாக கரைத்து வைக்கவும்.
ஒரு தேக்கரண்டி கடலை பருப்பு, வேர்கடலை, உளுந்து சேர்த்து வெறும் வாணலியில் வறுத்து ஆற விடவும்.
ஒரு தேக்கரண்டி கடுகு, சீரகம், வெந்தயம், மிளகு சேர்த்து வெறும் வாணலியில் வறுத்து ஆற விடவும்.
பாதியளவு காய்ந்த மிளகாய், எள் சேர்த்து நிறம் மாறாமல் வெறும் வாணலியில் வறுத்து ஆற விடவும். ஆறிய பொருட்களை கொரகொரப்பாக அரைத்து பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்கவும்.
கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் அடுப்பை குறைத்து உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
சற்று கெட்டியானதும் பொடித்த பொடியை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
சுவையான புளியோதரை செய்ய புளிக்காய்ச்சல் ரெடி.
தட்டில் சாதத்தை கொட்டி பரத்தி உப்பு, எண்ணெய் சேர்த்து நன்கு ஆற வைக்கவும்.
நன்கு ஆறிய சாதத்தில் ஆறிய கலவையை சேர்த்து கலந்து விடவும். சுவையான புளியோதரை தயார்
-
க்ரீன் புலாவ்
பட்டாணி - முக்கால் கப்
அரிசி - 2 1/2 கப்
வெங்காயம் - 250 கிராம்
இஞ்சி - அரை அங்குலத் துண்டு
பூண்டு - 5 பல்
கொத்தமல்லி தழை - 6 கொத்து
புதினா - 4 கொத்து
பச்சை மிளகாய் - 9
தேங்காய் பால் - 5 கப்
தேங்காய் எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் - ஒன்றரை மேசைக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை, புதினா இலைகளை ஆய்ந்து அலசி எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் கொத்தமல்லித்தழை, புதினா, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
அதிலேயே வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். அதில் அரைத்த வெங்காயத்தை போட்டு பச்சை வாசனை போகும் வரை 5 நிமிடம் வதக்கவும்.
பிறகு அரைத்து வைத்திருக்கும் கொத்தமல்லி, பச்சை மிளகாய் விழுதை போட்டு கிளறி விடவும்.
நன்கு வதங்கியதும் அதில் பட்டாணியை போட்டு உப்பு சேர்த்து 3 நிமிடம் கிளறி விடவும்.
அதனுடன் 5 கப் தேங்காய் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு களைந்து தண்ணீரை வடித்து வைக்கவும். கொதித்து நுரைத்து வரும் பொழுது அரிசியை போட்டு கிளறி விட்டு குக்கரை மூடி விசில் போடவும்.
4 விசில் வந்ததும் இறக்கி வைத்து ப்ரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து சாதத்தை உடையாமல் கிளறி விட்டு பரிமாறவும்
-
எலுமிச்சை சாதம்
எலுமிச்சை பழம் - 1 (பெரியது)
வடித்த பச்சரிசி சாதம் - 1 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 4(காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம் )
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
வேர்க்கடலை - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு (நறுக்கவும்)
கொத்தமல்லி - சிறிது
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
ஆல் பர்பஸ் பொடி - 2 தேக்கரண்டி
உப்பு, முந்திரி - தேவைக்கு ஏற்ப
முதலில் எலுமிச்சைபழத்தை பிழிந்து சாறு எடுத்து வைக்கவும் பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, வேர்க்கடலை, பெருங்காயம், முந்திரி, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்கவும்.
அதில் எலுமிச்சை கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் அடுப்பின் தணலை குறைத்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
சற்று கெட்டியானதும் ஆல் பர்பஸ் பொடியை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
தட்டில் சாதத்தை பரத்தி உப்பு, எண்ணெய் சேர்த்து நன்கு ஆற வைக்கவும்.
நன்கு ஆறிய சாதத்தில் ஆறிய கலவையை சேர்த்து கலந்து விடவும். சுவையான எலுமிச்சை சாதம் தயார்
இந்த எலுமிச்சை கரைசலை தண்ணீர் படாமல் மூன்று வாரம் வரை குளிர் சாதன பெட்டியில் வைத்து சாப்பிடலாம். மிதமான தீயில் செய்தால் தான் கருகாமல் வரும்.
-
கார்ன் ரைஸ்
காரன் - 1.2 கப்
பாஸ்மதி அரிசி - 1/4 கப்
வெண்ணை - 3 ஸ்பூன்
மிளகு தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - 1/4 ஸ்பூன்
முதலில் பாஸ்மதி அரிசியை 20 நிமிடம் ஊறவைத்து கழுவி உப்பு சேர்த்து வடிகட்டி கொதிக்க வைத்து சாதமாக வடித்துக் கொள்ளுங்கள்.
சூடான சாதத்துடன் வெண்ணை,மிளகு தூள் மற்றும் கார்ன் சேர்த்து கிளறி விடுங்கள்.
சுவையான கார்ன் ரைஸ் ரெடி
-
தனியா ரைஸ்
கொத்தமல்லி - ஒரு கட்டு
சின்ன வெங்காயம் - 10
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 3
தயிர் - அரை கப்
பாஸ்மதி - 2 டம்ளர்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
முந்திரி - 15
பச்சை மிளகாய் - 3
பூண்டு - ஒன்று
இஞ்சி - 2 துண்டு
நெய் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
பட்டை - ஒன்று
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
அன்னாசி பூ - ஒன்று
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கொத்தமல்லியை சுத்தம் செய்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு சேர்த்து அரைக்கவும். அதனுடன் தக்காளி, சின்ன வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்
பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி, பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசி பூ சேர்த்து வறுக்கவும்.
அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின்னர் அரைத்த கொத்தமல்லி கலவையை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
அதில் மஞ்சள் தூள், சீரகத்தூள், தயிர் சேர்த்து வதக்கி தேவையான நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்கு கொதித்ததும் களைந்த அரிசியை கொட்டி கிளறவும்.
நீர் வற்றும் நேரத்தில் தம்மில் 15 நிமிடம் வைக்கவும்.
தனியா ரைஸ் தயார். வெங்காய ரைத்தாவுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
-
பனீர் பிரியாணி
பாசுமதி அரிசி - 2 டம்ளர்
பனீர் - ஒரு பாக்கெட்
வெங்காயம் - ஒன்று (பெரியது)
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 2
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி (குவியலாக)
பட்டை கிராம்பு ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி
பிரியாணி இலை - ஒன்று
கல்பாசி இலை - சிறிது
ஏலக்காய் கிராம்பு தலா - 3
பட்டை - சிறு துண்டு
எலுமிச்சை - பாதி பழம்
புளிக்காத தயிர் - ஒரு குழிக்கரண்டி
பச்சை பட்டாணி - சிறிது (ஒரு கைப்பிடி அளவு)
மல்லி இலை - சிறிது
புதினா - சிறிது
நெய் - 4 தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
தக்காளி, வெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். மிளகாயை கீறி வைக்கவும். அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பனீரை சிறுத் துண்டுகளாக நறுக்கி கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து வைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி இலை, பிரியாணி இலை போட்டு தாளித்து பின் வெங்காயம், தக்காளி, மிளகாய், பச்சை பட்டாணி போட்டு வதக்கி இஞ்சி பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் தயிர் சேர்த்து கிளறி விட்டு 3 1/2 டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் அரிசியை போட்டு தண்ணீர் வற்றி வரும் பொழுது சிம்மில் வைத்து புதினா, மல்லி இலை, லெமன் சாறு, நெய், பனீர் சேர்த்து மூடியை போட்டு மூடவும். பின்னர் வெய்ட் போட்டு சிறு தீயில் 5 நிமிடம் வைத்திருந்து இறக்கவும்
ஆவி போனதும் மூடியை திறந்து ஒரு முறை அடி வரை கிளறி வைக்கவும்.
சுவையான பனீர் பிரியாணி ரெடி
-
நெய் சோறு
நெய் - விருப்பமான அளவு (கொஞ்சம் அதிகமாவே தேவை )
பாஸ்மதி ரைஸ் - ஒரு டம்ளர் (15 நிமிடம் ஊற வைக்கவும்.)
பால் - 2 டம்ளர் (ஆவின் பால்)
பச்சை பட்டாணி - 100 கிராம்
மீல்மேக்கர் -100 கிராம்
பொடியாக நறுக்கிய பூண்டு -3 பல்
பொடியாக நறுக்கிய இஞ்சி - கொஞ்சம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
பச்சை கொத்தமல்லி - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
பட்டை - 2
கிராம்பு - 2
பிரிஞ்சி இலை - 1
ஏலக்காய் -
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
குக்கரில் நெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து இஞ்சி, பூண்டு பச்சை மிளகாய், பச்சை கொத்தமல்லி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் 2 டம்ளர் பாலை சேர்க்கவும்.
பின் பட்டாணி, மீல் மேக்கர் மற்றும் உப்பு சேர்க்கவும்.
அடுத்து பாஸ்மதி அரிசி சேர்த்து நன்றாக கிளறவும். நெய் கொஞ்சம் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் நிறுத்தவும்.
சூடான சுவையான நெய் சோறு தயார்
-
கேரட் ரைஸ்
துருவிய கேரட் -- ஒரு கப்
கீறிய பச்சை மிளகாய் --3
பொடிசாக நறுக்கிய வெங்காயம் -- அரை கப்
முந்திரி பருப்பு - 8
கறி வேப்பிலை - சிறிதளவு
உப்பு -- தேவையான அளவு
நெய் - ஒரு கரண்டி
உதிராக வடித்தசாதம் -- 3 கப்
கடாயில் நெய் ஊற்றி முந்திரியை சிவக்க வறுக்கவும்.
அதனுடன், துருவிய கேரட், பொடிசாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து சுருள வதக்கவும்.
நன்குசுருண்டு வந்ததும் சாதத்தை அத்துடன் சேர்த்து உப்பு, கொத்தமல்லி தூவி நன்கு கிளறவும்.
-
சீரக சாதம்
அரைக்க :
சீரகம் - ஒரு தேக்கரண்டி
வர மிளகாய் - 2
தாளிக்க :
பெரிய வெங்காயம் - ஒன்று
கடுகு - தாளிக்க
பூண்டு - 5 பல்
வேர்கடலை - சிறிது
உளுத்தம் பருப்பு - சிறிது
கடலை பருப்பு - சிறிது
மல்லி தழை - சிறிது
எண்ணெய் - 1 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
வெங்காயத்தையும், மல்லி தழையையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை கொஞ்சம் பெரியதாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, வேர்கடலை போட்டு வறுக்கவும்.
நன்கு சிவந்தததும், வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து தாளிக்கவும். இதற்கிடையில் அரைக்க கொடுத்தவற்றை நன்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அனைத்தும் நன்றாக வதங்கிய பின் அரைத்த பொடியையும் சிறிது மல்லி தழையையும் சேர்த்து தாளித்து, தேவையான உப்பை சேர்க்கவும்.
நன்கு அனைத்தும் கலவையாகும்படி மிதமான சூட்டில் வதக்கவும். இல்லை எனில் சில சமயம் கருகிய வாசம் வந்துவிடும்.
சூடான சாதத்தை சேர்த்து நன்றாக பிரட்டி எடுக்கவும். மீதமுள்ள மல்லி தழையை தூவவும்.
சூடான சத்தான சீரக சாதம் ரெடி
கறிவேப்பிலையையும் சேர்க்கலாம். நல்லெண்ணெய் கொண்டு செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். உடலுக்கு குளிர்ச்சியான பத்திய வகை சாதம் இது.
-
மட்டன் கோஃப்தா பிரியாணி
கோஃப்தாவிற்கு:
எலும்பில்லா திக்கான மட்டன் - 4 துண்டுகள்
வெங்காயம் - சிறியதாக ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம்மசாலாத்தூள் - கால் தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - பொரித்தெடுக்க
மல்லிதழை - சிறிதளவு
பிரியாணிக்கு:
அரிசி - ஒன்றரை டம்ளர்
வெங்காயம் - இரண்டு
தக்காளி - ஒன்று
பச்சைமிளகாய் - ஒன்று
இஞ்சி,பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
பிரியாணி மசாலா - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
தயிர் - மூன்று தேக்கரண்டி
எலுமிச்சை பழம் - பாதியளவு
மல்லி, புதினா தழை - சிறிதளவு
நெய் - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 50 மிலி
பட்டை - சிறிய விரல் அளவு இரண்டு
ஏலக்காய் - மூன்று
கிராம்பு - இரண்டு
பிரிஞ்சி இலை - பாதியளவு
மட்டனை நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பிரியாணி மசாலா தயார் செய்ய ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்னெய் ஊற்றி சூடு வந்ததும் தாளிக்க கொடுத்தவைகளை போட்டு பொரிந்ததும் நறுக்கின வெங்காயத்தை சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்.
பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு பின் தக்காளி, பச்சைமிளகாயை சேர்த்து மசிய வதக்கவும்.
அவை வதங்குவதற்குள் கோஃப்தாவிற்கு தயார் செய்ய மட்டனை மிக்ஸியில் அரைத்து எடுத்து கொண்டு வெங்காயத்தையும் மல்லியையும் மிகவும் பொடியாக நறுக்கி சேர்த்து அதனுடன் இதர பொருட்களையும் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிறகு அவற்றை சிறு சிறு உருண்டைகளாக்கவும்.
தக்காளி வதங்கியவுடன் கரம் மசாலாவை தவிர்த்து மற்ற தூள்களை சேர்த்து நன்கு வதக்கி விட்டு தயிரும் மல்லி புதினாவில் முக்கால் பகுதியும் நறுக்கி சேர்த்து அதற்கு தேவையான உப்பையும் சேர்த்து நன்கு கிளறி மிதமான தீயிலேயே மூடியை போட்டு பச்சை வாசனை போக வதங்க விடவும்.
அதற்குள் மற்றொரு சிறிய வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடு வந்ததும் மிதமான தீயிலேயே கோஃப்தா உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு நன்கு எண்ணெய் விட்டு பச்சை வாசனை இல்லாமல் மசாலா மணக்கும் போது அடுப்பை அணைத்து விட்டு எலுமிச்சை சாறை பிழிந்து கிளறி விட்டு பொரித்த உருண்டைகளையும் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி வைக்கவும்.
அதன் பின் அரிசியை கழுவி வைத்து விட்டு ஒரு பாத்திரத்தில் அரிசி வேக வைப்பதற்கான அளவு தண்ணீர் விட்டு அதற்கு தேவையான அளவு உப்பும் சேர்த்து கொதி வந்ததும், அரிசியை தண்ணீர் இல்லாமல் போட்டு முக்கால் பாகம் வேக வைத்து வடிக்கட்டி வைக்கவும்.
அடுத்து பாத்திரத்தில் வடிக்கட்டிய சாதத்தையும், மசாலாவையும் லேசாக கலந்து விட்டு மீதமுள்ள மல்லி புதினா தழையை பொடியாக அரிந்து தூவி கரம் மசாலாவையும் தூவி நெய்யும் சேர்த்து விரும்பினால் கலர் பவுடர் சிறு துளி ஒரு பக்கமாக போடவும்.
மூடியில் அலுமினிய ஃபாயில் போட்டு பாத்திரத்தை மூடி அடுப்பில் தம் போடும் ப்ளேட் வைத்து சூடு வந்ததும் இந்த பாத்திரத்தை வைத்து மூடியின் மேல் கனமான பொருளை வைத்து அடுப்பை குறைந்த தீயில் விட்டு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் தம் போடவும். பிறகு மூடியைதிறந்து ஒரு முறை கிளறி விட்டு மூடி மீண்டும் ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
சுவையான மட்டன் கோஃப்தா பிரியாணி ரெடி. வெங்காயம், தயிர் ரைத்தாவோடு பரிமாறலாம்.
கோஃப்தாவிற்கு வெங்காயம் பொடியாக நறுக்க முடியவில்லை என்றால் அரைத்தும் சேர்க்கலாம். ஆனால் தண்ணீர் சேராமல் பார்த்து கொள்ளவும். மட்டன் துண்டாக இல்லாமல் கைமாவிலும் இதேபோல் அரைத்து செய்யலாம்.
-
தக்காளி சாதம்
தக்காளி - அரை கிலோ
வெங்காயம் - கால் கிலோ
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
அரிசி - 2 டம்ளர்
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
தாளிக்க:
வரமிளகாய் - 8
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - கால் தேக்கரண்டி
கடலைபருப்பு - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு
தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அரிசியை கழுவி உதிரியாக வடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை தாளித்துக் கொள்ளவும்
பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக சுருங்கும் வரை வதக்கவும்.
பின்னர் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள் சேர்த்து கிளறவும்.
எண்ணெய் பிரிந்து வரும் போது தக்காளியை சேர்த்து சுருளும் வரை வதக்கவும்.
பின்னர் சாதத்தை கொட்டி நன்கு ஒன்றாக சேரும்படி கிளறி விடவும்.
சுவையான தக்காளி சாதம் ரெடி
-
மீன் பிரியாணி
பெரிய மீன் - இரண்டு கிலோ
பாசுமதி அரிசி - ஏழு கப்
வெங்காயம் - ஐந்து
தக்காளி - ஐந்து
பச்சைமிளகாய்- மூன்று
மல்லி கட்டு - ஒன்று
புதினா கட்டு - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - நான்கு மேசைக்கரண்டி
மிளகாய் பொடி - இரண்டு தேக்கரண்டி
மல்லி பொடி - மூன்று மேசைக்கரண்டி
மீன் பிரியாணி மசாலா - மூன்று மேசைக்கரண்டி
கலர் பவுடர் - சிறிது
மீனில் தடவும் மசாலா செய்ய:
மல்லி பொடி - மூன்று மேசைக்கரண்டி
மிளகாய் பொடி - இரண்டு மேசைக்கரண்டி
சோம்பு - இரண்டு மேசைக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தாளிக்க
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா மூன்
வெங்காயத்தை பொடியாக நீளவாக்கில் நறுக்கவும். தேவையான இஞ்சி பூண்டையும் எடுத்துக் கொள்ளவும். மீனில் தடவ வேண்டிய மசாலா பொருட்களை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
மல்லி தழையை பொடியாக நறுக்கவும், புதினாவையும் அதைப் போல் நறுக்கவும் பச்சைமிளகாயை கீறி வைக்கவும். தக்காளியையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
பின்னர் மீனை சுத்தம் செய்து அரைத்த மசாலாவை அதன் மேல் தடவி அரை மணி நேரம் ஊற விடவும்.
மீன் ஊறியவுடன் ஃப்ரை பேனில் எண்ணெய் ஊற்றி மீனை போடவும். மீன் சிறிது வெந்தவுடன் திருப்பி விடவும். மீனை முறுகலாக வறுக்க கூடாது. சிறிது நேரம் சிவக்கும் வரை வறுத்தால் போதும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து சிறிதளவு வெங்காயத்தை எடுத்து வைத்து கொண்டு மீதமுள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு முறுகலாக வதங்கியவுடன் தக்காளி போட்டு வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் மல்லி, புதினா போட்டு கிளறி விட்டு மல்லி தூள், மிளகாய் தூள், பிரியாணி மசாலா போட்டு உப்பு சிறிது போட்டு கிளறவும்.
வறுத்த மீன் துண்டுகளை அதன் மேல் சிறிது நேரம் வைத்து பின் மீனை எடுத்து விடவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் அரிசியை கொட்டி நீரில் இருபது நிமிடம் ஊற விடவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எடுத்து வைத்திருந்த சிறிது வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வதங்கியதும் அதில் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் வீதம் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அரிசியை போட்டு உப்பு போட்டு முக்கால் பதத்துக்கு வேக வைக்கவும்.
வெந்ததும் வதங்கிய கிரேவி மேல் சாதத்தை கொட்டவும். அதன் மேல் கலர் பொடியை சிறிது நீரில் கரைத்து சுற்றிலும் ஊற்றவும். பின் சாதத்தை கிளறி அதன் மேல் மீன் துண்டுகளை வைத்து அதன் மேல் சாதத்தை போட்டு மூடி அடுப்பை சிம்மில் வைத்து பதினைந்து நிமிடம் தம்மில் போடவும்.
சூடான மீன் பிரியாணி தயாராகி விட்டது. இதற்கு கொஞ்சம் வேலை அதிகம் தான் ஆனால் டேஸ்ட்டும் அதிகம்.
-
பட்டாணி பாத்
1/2 கப் ரவை,
1/2 கப் சேமியா,
3 பச்சை மிளகாய்,
1 மேஜைக் கரண்டி முந்திரி பருப்பு,
1/2 தேக்கரண்டி உளுந்துப் பருப்பு,
1/2 தேக்கரண்டி கடுகு,
1/4தேக்கரண்டி மஞ்சள் தூள்,
5 மேஜைக் கரண்டி பச்சைப் பட்டாணி,
1 மேஜைக் கரண்டி நெய்,
ஒரு எலுமிச்சம் பழம்,
சிறு துண்டு இஞ்சி,
தேவையான அளவு உப்பு,
கறிவேப்பிலை
ரவை, சேமியாவை நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
முந்திரிப்பருப்பு, உளுந்துப் பருப்பு, கடுகு ஆகியவற்றை வாணலியில் நெய்யை ஊற்றித் தாளித்து, பட்டாணி, இஞ்சி, மிளகாயுடன் வதக்கிக் கொள்ளவும். பிறகு தேவையான அளவு நீரை விட்டு உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
கொதித்ததும் ரவை, சேமியா இரண்டையும் போட்டுக் கிளறி, நெய் ஊற்றி, கறிவேப்பிலை, எலுமிச்சம் பழச்சாறு கலக்கவும்.
இதனுடன் கடையில் விற்கும் ரொட்டிகளை வாங்கி துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதை ரவை, சேமியா இருக்கும் வாணலியில் போட்டுக் கிளறவும்.
ரொட்டித் துண்டுகள் சேர்ப்பது உங்கள் விருப்பமே.
-
புதினா புலாவ்
பாசுமதி அரிசி – 200 கிராம்
1. வறுத்து பொடிக்க
மிளகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
பட்டை – ஒரு சின்ன துண்டு
பிரியாணி இலை – இரண்டு
கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
2. வதக்கி அரைக்க
பட்டர் (அ) நெய் – ஒரு ஸ்பூன்
புதினா – 1 கட்டு
வெங்காயம் – 1
பூண்டு – 4 பல்
3. தாளிக்க
எண்ணை + பட்டர் – ஒரு ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
வெங்காயம் – பொடியாக அரிந்த்து ஒரு மேசை கரண்டி
1. அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும்.
2.வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை வறுத்து பொடிக்கவும்.
3. வதக்கி அரைக்க வேண்டியவைகளை வதக்கி அதனுடன் பொடித்த பொடியையும் கலக்கவும்.
4. குக்கரில் எண்ணை + பட்டர் சேர்த்து கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
5. அரைத்த கலவையை சேர்த்து தேவைக்கு உப்பு போட்டு இரண்டு நிமிடம் வதக்கி அரிசி சேர்த்து, அரிசி ஒரு பங்குக்கு ஒன்னறை அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இரக்கவும்.
சுவையான மனமான மின்ட் புலாவ் ரெடி
Note:
புதினா என்றாலே புத்துணர்வு தான்.பிரியாணி , கிரேவி வகைகளுக்கு மணம் தருவதும் புதினா. புதினா துவையல், புதினா டீ புதினா வடை என பல வகையாக தயாரிக்கலாம். அது போல் புதினா புலாவ், இந்த முறை நான் முயற்சி செய்தது, வாசனையாக பக்க உணவு கூட எதுவும் இல்லாமல் அப்படியே பிடிச்சி சாப்பிடலாம்.இதில் தண்ணீருக்கு பதில் தேங்காய் பால் சேர்த்து கொண்டால் இன்னும் பிரமாதமாக இருக்கும்
-
தேங்காய் பால் சாதம்
பாசுமதி அரிசி - ஒரு கப்
தேங்காய் பால் - 1 1/2 கப்
தாளிக்க:
கறிவேப்பிலை - சிறிது
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அரிசியை முப்பது நிமிடம் ஊற வைக்கவும்.
அடுப்பில் சட்டியை வைத்து நெய், எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றை போட்டு தாளிக்கவும்.
பின் ஊற வைத்த அரிசியை போட்டு கிண்டவும்.
அடுத்து தேங்காய்பாலை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விட்டு மிதமான தீயில் வேக விடவும். சாதத்தில் உள்ள பால் வற்றி மேல் சாதம் தெரியும்போது தீயை சிறிதாக்கி பேப்பரை போட்டு மூடி பதினைந்து நிமிடம் தம்மில் விடவும்.
கமகமக்கும் தேங்காய் பால் சாதம் ரெடி
-
பைனாப்பிள் சாதம்
பாசுமதி அரிசி 200 கிராம்
பைனாப்பிள் கூழ் ஒரு கப்
உப்பு தேவையான அளவு
பச்சை பட்டாணி ஒரு கைப்பிடி
பொடியாக நறுக்கிய காரட் ஒரு கைப்பிடி
தாளிக்க
கடுகு
உளுத்தம் பருப்பு சிறிதளவு
கடலை பருப்பு சிறிதளவு
பொடி பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் 2
மஞ்சள் பொடி அரை டீ ஸ்பூன்
கொத்தமல்லி -- பொடியாக நறுக்கியது ஒரு டீ ஸ்பூன்
கருவேப்பிலை ஒரு கொத்து
எண்ணெய் 4 டீ ஸ்பூன்
முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும். பிறகு மீதியுள்ள பொருட்களையும் சேர்த்து பொரித்துக் கொள்ள வேண்டும். பிறகு, பச்சை பட்டாணி, மற்றும் காரட்டைப் போட்டு சிறிது உப்பு போட்டு நன்கு வதக்கவும். ( பெரியவர்களுக்குக் காரம் தேவை பட்டால், சிறிது காஷ்மீர் மிளகாய் பொடியையும் சேர்த்துக் கொள்ளவும்)
கடைசியில் பைனாப்பிள் கூழையும் அதனுடன் சேர்த்து நன்கு கிளறவும்.
உதிர் உதிராக வடிக்கப் பட்டுள்ள பாசுமதி சாதத்தில் இக்கலவையை சிறிது சிறிதாக போட்டு கலந்து மேலே கோத்த மல்ளியைத் தூவவும். சூடாக பரிமாறவும். பச்சை, ஆரஞ்சு என்று கலர்புல்லாக இருப்பதால் குழந்தைகள்
இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். (குழந்தைகளுக்கு சமைக்கும் போது பச்சை மிளகாயை கீறி போடவும். அகற்றுவதற்கு எளிது)
-
குடைமிளகாய் சாதம்
குடைமிளகாய் - 3 சிறியது (சிகப்பு, மஞ்சள், பச்சை)
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
தனியா - ஒரு தேக்கரண்டி
வேர்க்கடலை - 3 தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சாதம் - 2 கப்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி [விரும்பினால்
எண்ணெய் இல்லாமல் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், தனியா, வேர்க்கடலை மற்றும் மிளகை வறுத்து எடுக்கவும். குடைமிளகாயை நறுக்கி வைக்கவும்.
வறுத்த பொருட்களை கொரகொரப்பாக பொடித்து கரம் மசாலா சேர்த்து கலந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். 3 நிமிடம் வதக்கி உப்பு மற்றும் மசாலா பொடியை சேர்த்து வதக்கவும்.
குடைமிளகாய் முக்கால் பாகம் வெந்ததும் இறக்கி சாதத்துடன் கலந்து 10 நிமிடம் மூடி வைக்கவும்.
விரும்பினால் கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து எடுக்கலாம். வடை, ரைத்தா போன்றவையுடன் சூடாக பரிமாறலாம்.
-
கோவை அரிசிபருப்பு சாதம்
பொன்னி அரிசி - 2 கப்
துவரம்பருப்பு - 3/4 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
கடுகு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 2 ஆர்க்கு
குருமிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வரமல்லிவிதை - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 3 எண்ணம்
பூண்டு - 5 பல்
தேங்காய் - 1 கீற்று
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 5 கப்
அரிசியை,பருப்பு நன்கு கலைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
வெங்காயம், தக்காளி அரிந்து வைக்கவும்.
பூண்டு தோல் உரித்து வைக்கவும்.
தேங்காய் பொடியாக அரிந்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, குருமிளகு, சீரகம், வரமல்லிவிதை, வரமிளகாய், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
இதனுடன் பூண்டு, வெங்காயம்,தேங்காய், தக்காளி சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து களைந்த அரிசி பருப்பு சேர்த்து 3 விசில் விடவும்.
கொத்துமல்லி இழை தூவி கிளறவும்.
சுவையான கோவை அரிசிபருப்பு சாதம் தயார்.
Note:
பொரித்த அப்பளத்துடன் சூடான சாதத்தின் மேல் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட சுவையை அள்ளும். ( சாதம் வைக்க தேவையான அளவு தண்ணீர் ஊற்றினாலே போதும் பருப்புக்கு என்று தனியாக தண்ணீர் சேர்க்க தேவையில்லை )
-
சன்னா ரைஸ்
சன்னா- 1 கப் (வேக வைத்தது)
பாஸ்மதி அரிசி- 2 டம்ளர்
வெங்காயம்- 3
தக்காளி-2
தயிர்- 1/2 கப்
பிரியாணி மசாலா (அ) புலாவ் மசாலா பொடி- 2 ஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது-2 ஸ்பூன்
கொத்தமல்லி,புதினா- 1 கைப்பிடி
முந்திரி-10
நெய்- 2 மேசை கரண்டி
பச்சை மிளகாய்- 2
மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
உப்பு- தேவைக்கு
எலுமிச்சை -2
சன்னாவை 8 மணி நேரம் ஊறவைத்து வேக வைத்துக்கொள்ளவும்.
தக்காளியை அரைத்துக்கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்.
பாத்திரத்தில் நெய் சேர்த்து மிளகாய்,முந்திரி வறுக்கவும்.
பின் அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அதில் புதினா,கொத்தமல்லி சேர்த்து வதக்கிய பின் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.
பின் தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
அதில் தயிர்,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,சன்னா சேர்த்து 5 நிமிடம் வதக்கி பின் தேவையான அளவு தண்ணீர் (4 டம்ளர்),உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்த பின் அரிசியை கொட்டி வேக விடவும்.
தண்ணீர் வற்றும் சமயத்தில் சிறுதீயில் வைத்து 15 நிமிடம் தம்மில் போடவும்.
பின் கீழிறக்கி எலுமிச்சை சாறு பிழிந்து மீண்டும் கிளறி மூடிவிட்டு 15 நிமிடத்திற்கு பிறகு பரிமாறவும்.
Note:
சன்னா ஊற வைக்கும் சமயத்தில் 8 முறையாவது தண்ணீரை மாற்றவும். அதனால் வாயு பிரச்சனை நீங்கும். எலுமிச்சை சாறு பிழியும் போது அதிகமாக கசக்கி பிழியாமல் லேசாக பிழிந்து வரும் சாறு மட்டும் உபயோகிக்கவும். இதனால் கசப்பு சுவை வராது. வீணாக்க விருப்பமில்லை எனில் மீதி இருக்கும் சாற்றில் ஜூஸ் தயார் செய்யலாம். அல்லது ரைத்தா செய்யும் போது பிழிந்துவிடலாம். தயிர் சேர்ப்பதால் ரைத்தாவில் கசப்பு தெரியாது. விதைகள கண்டிப்பாக சேர்க்க வேண்டாம். இதற்கு ரைத்தா, தாளிச்சா நல்ல காம்பினேஷன்.
-
கோபி புலாவ்
பாஸ்மதி அரிசி - ஒரு கப்
காலிப்ளவர் - 1 (பெரிதாக உதிர்த்து சுத்தபடுத்தி வைக்கவும்)
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்)
பூண்டு - 5 பல்
நெய் - 3 மேசைக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ - தலா 2
பிரிஞ்சி இலை - 2
புதினா - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லி, புதினாவை ஆய்ந்து நறுக்கி வைக்கவும்.
குக்கரில் நெய்யை ஊற்றி சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரிஞ்சி இலை சேர்க்கவும்.
அவை பொரிந்து வரும் போது வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, புதினா சேர்த்து வதக்கவும். பின்பு காலிப்ளவர் சேர்த்து லேசாக வதக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்கும் போது உப்பு மற்றும் அரிசி சேர்க்கவும்.
கொதி நன்கு வரும் போது, கொத்தமல்லி சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
ஆவி அடங்கியதும் திறந்து பார்த்தால் புலாவ் தயாராகி விடும். தயிர் பச்சடி, டல்மா, கிராவியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்
-
திண்டுக்கல் பிரியாணி
பாஸ்மதி அரிசி - 4 டம்ளர் (1 கிலோ)
கோழி - 1 கிலோ
தேங்காய் பால் - 2 டம்ளர்
தண்ணீர் - 5 டம்ளர்
நாட்டு தக்காளி - 4 (நான்கு நான்காக நறுக்கவும்)
வெங்காயம் - 2
சின்ன வெங்காயம் விழுது - அரை கப்
இஞ்சி, பூண்டு விழுது - 4 தேக்கரண்டி
புதினா - 1 கட்டு
கொத்தமல்லி - 1 கட்டு
பச்சை மிளகாய் - 6
நெய் - 100 மில்லி
எண்ணெய் - 100 மில்லி(விரும்பினால்)
தயிர் - அரை கப்
எலுமிச்சை - 3
தரமான மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
பட்டை, ஏலக்காய், கிராம்பு (வாசனை தூள்) - 1 தேக்கரண்டி
முந்திரி - 10
உப்பு - தேவைக்கு
வாசனை பொருட்கள்:
பட்டை - 1
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
பிரிஞ்சி - 2
அன்னாசி பூ - 2
சிக்கனை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். புதினா கொத்தமல்லியை ஆய்ந்து அலசி நறுக்கி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிரியாணி செய்யப்போகும் பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி முந்திரி, வாசனைப்பொருட்கள் சேர்த்து கிளறவும். நறுக்கிய கொத்தமல்லி, புதினா, மிளகாய் சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
மல்லி, புதினா சுருள வதங்கிய பின்பு, இஞ்சி பூண்டு விழுது, வெங்காய விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
அதனுடன் மிளகாய்த்தூள் மற்றும் வாசனை தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் அத்துடன் தயிர் சேர்த்து கிளறவும்.
பின்பு நன்கு சுத்தம் செய்து நறுக்கிய கோழி துண்டுகள் சேர்த்து அத்துடன் உப்பு சேர்க்கவும். மசாலா கோழித் துண்டுகளில் ஒட்டும் படி பிரட்டி விடவும். பின்னர் மூடி விடவும்.
தேங்காய்ப்பாலை விடவும். கோழித்துண்டுகள் அரைவேக்காடாக வெந்ததும், தண்ணீர் சேர்க்கவும், உப்பு சரி பார்த்து கொள்ளவும்.
கொதி வரவும் கழுவிய அரிசியை சேர்க்கவும். தண்ணீர் வற்றி சோறு வெந்து வரும். கால் வாசி தண்ணீர் இருக்கும் பொழுது எலுமிச்சைபழம் பிழிந்து விடவும். திரும்ப மெதுவாக ஒரு சேர பிரட்டி விடவும்.
தம் போட பிரியாணி பாத்திரத்தின் அடியில் தோசைக்கல்லை வைத்து சூடேறியதும் அடுப்பை சிம்மில் வைக்கவும். பாத்திரத்தை அலுமினியம் ஃபாயில் கொண்டு மூடி திரும்ப மூடி போட்டு மூடவும். அல்லது ஆவி போகாமல் தம் ஆக மேலே கனமான பாத்திரத்தில் தண்ணீர் வைக்கலாம்.15-20 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்.
உடனே திறக்காமல், மீண்டும் கால் மணி நேரம் கழித்து திறந்து, பிரட்டி விட்டு பரிமாறவும்.
சூடான சுவையான திண்டுக்கல் சிக்கன் பிரியாணி ரெடி.
-
பட்டாணி கோஸ் சாதம்
முட்டை கோஸ் - ஒரு கப்
பச்சை பட்டாணி - அரை கப்
சின்ன வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 3
உளுந்து, கடலை பருப்பு, வேர்க்கடலை - சிறிது
கடுகு, சீரகம், கறிவேப்பிலை - தாளிக்க
மிளகாய் தூள், மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
கொத்தமல்லி - சிறிது
சாதம் - ஒரு கப்
முட்டைகோஸை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தையும் துண்டுகளாக நறுக்கவும்.
பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின்பு பருப்புகள், நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதில் கோஸ் மற்றும் பட்டாணி சேர்த்து வதக்கவும்.
மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.
தண்ணீர் நன்கு சுண்டியதும், சாதத்தை சேர்க்கவும்.
மசாலா மற்றும் காய்களுடன் சேரும்படி உடையாமல் கிண்டி எடுக்கவும்.
கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும். சுவையான பட்டாணி கோஸ் சாதம் ரெடி
-
மேதி ரைஸ்
பாசுமதி அரிசி - ஒரு ஆழாக்கு (200 கி)
வெந்தயக்கீரை - ஒரு கைப்பிடி
வெங்காயம் - ஒன்று (பெரியது)
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3 அல்லது 4
பட்டை, லவங்கம் - தாளிக்க
ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எலுமிச்சம் பழம் - அரை மூடி
வெந்தயக் கீரையை அலசி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாசுமதி அரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின்னர் வெந்தயக் கீரை சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வதக்கவும்.
இப்போது ஊற வைத்திருக்கும் அரிசியை சேர்த்து ஒரு கிளறு கிளறி, அதனுடன் ரசப் பொடியை சேர்க்கவும்.
பின்னர் 1 1/4 டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். ஒரு விசில் வந்ததும் 2 நிமிடங்கள் சிம்மில் வைத்து குக்கரை நிறுத்தவும். சமைக்கும் நேரம் குக்கரைப் பொறுத்து மாறுபடும்.
ஆவி அடங்கியதும் அரை மூடி எலுமிச்சம் பழம் சேர்த்து கிளறி பரிமாறவும். மேதி ரைஸ் தயார். இதனுடன் குருமா, ரைத்தா, பனீர் பட்டர் மசாலா நன்றாக இருக்கும்.
-
ப்ரவுன்ரைஸ் பிசிபேளாபாத்
துவரம் பருப்பு - அரை கப்
ப்ரவுன் ரைஸ் - ஒரு கப்
மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி
பூண்டு - 2
பரங்கிக்காய் - ஒரு துண்டு
கத்திரிக்காய் - 4
பட்டாணி - ஒரு கப்
உருளை - ஒன்று
ஜுசினி - 2
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
புளி - சிறிதளவு
கடுக, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயம், முந்திரி, வெண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவைக்கு ஏற்ப
சாம்பார்பொடி - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
காய்கறிகளை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் பருப்பு, பூண்டு,மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளாவும்.
அதே குக்கரில் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
காய்கள் நன்கு வெந்ததும் ப்ரவுன் ரைஸ், பருப்பு, உப்பு, தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
அதன் பின்னர் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விடவும்.
வாணலியில் வெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பில்லை, முந்திரி சேர்த்து தாளிக்கவும்.
தாளித்தவற்றை சாதத்துடன் சேர்த்து கிளறி விட்டு சூடாக பரிமாறவும்.
மேலே கொத்தமல்லி தூவவும். சுவையான ப்ரவுன் ரைஸ் பிளிபேளாபாத் ரெடி.
-
புளியோதரை (இஸ்லாமிய முறை
புழுங்கல் அரிசி - 400 கிராம்
புளி - பெரிய எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் - 100- 150 மில்லி
மிளகாய் வற்றல் - 4
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
எள் - ஒரு டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - 4 இணுக்கு
பெருங்காயம் - சிறிய துண்டு
தக்காளி - ஒன்று சிறியது
உப்பு - தேவைக்கு
சாதம் உதிரியாக வடித்து ஆற வைக்கவும். புளியை சிறிது உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.
3 மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு, கடலைபருப்பு, எள், கறிவேப்பிலை, பெருங்காயம் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து எடுக்கவும்.
வறுத்தவற்றுடன், தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து தூள் செய்யவும். அதனுடன் ஒரு தக்காளியை நறுக்கி சேர்த்து அரைத்து எடுக்கவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, கடுகு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து புளிக்கரைசலை விடவும். நன்கு கொதி வந்ததும் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும். அடுப்பை சிம்மில் வைக்கவும்.
எண்ணெய் தெளியவும் சாதம் போட்டு கிளறி ஆற வைக்கவும். உதிரியாக இல்லாமல் சாதம் சேர்ந்தாற்போல் இருக்கும். ஆற வைத்து சாதம் கட்டிக்கொடுக்கவும்.சுவையான புளியோதரை ரெடி. இதற்கு சுருட்டு கறி பொருத்தமான காம்பினேஷன்.
-
குஸ்கா
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
வெங்காயம் - ஒரு கைப்பிடி
பூண்டு - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2 அல்லது 3 காரத்திற்கேற்ப
புதினா - 10 இலைகள் (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
தக்காளி - ஒரு சின்ன பழம்
கெட்டியான தயிர் - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை - அரை பழம் (சிறியது)
நெய் - ஒரு பெரிய ஸ்பூன் அளவு
எண்ணெய் - ஒரு பெரிய ஸ்பூன் அளவு
உப்பு - தேவையான அளவு
பாசுமதி அரிசி - அரை கிலோ அல்லது 2 கப்
தண்ணீர் - ஒரு கப் அரிசிக்கு 1 3 /4 கப் தண்ணீர் (இங்கே கொடுத்துள்ள அளவுக்கு 3 1 /2 கப் தண்ணீர் சேர்க்கவும்)
வெங்காயத்தை மெல்லியதாக நீளமாக நறுக்கவும். தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பச்சைமிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். அரிசியை தண்ணீரில் களைந்து ஊற வைத்துக் கொள்ளவும். மற்ற பொருட்களை தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நெய், எண்ணெய் விட்டு சூடேறியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். அதில் நறுக்கின வெங்காயத்தை சேர்த்து லேசான பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை அடிப்பிடிக்காமல் கிளறவும். பிறகு பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி இலைகள் சேர்த்து ஒரு முறை வதக்கிய பின் நறுக்கின தக்காளி மற்றும் தயிர் சேர்த்து கிளறவும். தக்காளியை மசிய வதக்கக் கூடாது.
வதக்கிய பொருட்களிலிருந்து எண்ணெய் பிரிய தொடங்கியதும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு எலுமிச்சைச்சாறு, உப்பு மற்றும் ஊற வைத்த அரிசியை சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்கும் போது மூடி வைத்தால் சீக்கிரம் தண்ணீர் வற்றி விடும்.
கரண்டியால் கிளறும் போது தண்ணீர் அதிகம் இல்லாமல் குறைவாக இருந்தால் அடுப்பை சிம்மில் வைக்கவும்.
பிறகு அந்த பாத்திரத்தின் மேல் அலுமினியம் பாயில் அல்லது நியூஸ் பேப்பரை வைத்து மேலே பாத்திரத்துக்கு தகுந்தாற்போல் தட்டு வைக்கவும். அதன் மேல் மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைக்கவும்
5 நிமிடம் கழித்து கவனமாக அலுமினியம் பாயிலை எடுத்து சாதத்தை அடியிலிருந்து கிளறாமல் மேலாக கிளறி, முன்பு மூடி வைத்தது போல் வைத்து 5 நிமிடம் தம்மில் விடவும். பிறகு மீண்டும் கவனமாக அலுமினியம் பாயிலை எடுத்து சாதத்தை அடியிலிருந்து கிளறாமல் மேலாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
சுவையான குஸ்கா ரெடி. குஸ்கா கொஞ்சம் மைல்டாக இருப்பதால் தாளிச்சா, ஏதாவது ஒரு கிரேவி அல்லது மட்டன் அல்லது சிக்கன் குருமாவுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும். வேண்டுமானால் முந்திரியை நெய்யில் வறுத்து இறுதியில் சேர்க்கலாம். நெய் இன்னும் அதிகமாக விரும்புவோர் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். அறுசுவை நேயர்களுக்காக திருமதி. ரிஸ்வானா ஷானுகான் அவர்கள் இந்த குறிப்பினை வழங்கியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்து கொள்ளவும்
-
டோஃபு புலாவ்
டோஃபு (சோயா பனீர்) - 250 கிராம்
பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி, புதினா
பட்டை
லவங்கம் - 5
ஏலக்காய் - 5
பச்சை பட்டாணி - 100 கிராம்
கேரட், பீன்ஸ் - 100 கிராம்
நெய் + எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
தேங்காய் பால் - 2 கப் (விரும்பினால்)
அரிசி கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும். பச்சை மிளகாய் நசுக்கி வைக்கவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பீன்ஸ், கேரட்டை நறுக்கவும்.
டோஃபு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் + நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் புதினா, கொத்தமல்லி, காய்கறிகள், பட்டாணி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி கடைசியாக பனீர், ஊற வைத்த அரிசி சேர்த்து வதக்கவும்.
தேங்காய் பாலுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து அரிசியில் ஊற்றி உப்பு சேர்த்து வேக விடவும். (தேங்காய் பால் சேர்க்காதவர்கள் 4 கப் தண்ணீர் ஊற்றவும்)
-
மலேசியன் ப்ரைட் ரைஸ்
பாசுமதி அரிசி - ஒரு கப்
துருவிய காரட் - கால் கப்
நறுக்கிய வெங்காயம் - ஒன்று
வெள்ளரிக்காய் - கால் கப்
மாங்காய் - கால் கப்
அன்னாசிப்பழம் - கால் கப்
தேங்காய் பால் - 2 கப்
சிகப்பு மிளகாய் - 4
ஏலக்காய் - 4
கிராம்பு - 4
சீரகம் - ஒரு தேக்கரண்டி
முந்திரி - 10
நெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் மற்றும் சிகப்பு மிளகாய் இரண்டையும் கொரகொரப்பாக அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.
காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். நெய் சூடானதும் முந்திரி, சீரகம், ஏலக்காய், கிராம்பு வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும்.
அதே நெய்யில் பாசுமதி அரிசியை வறுத்து தேங்காய் பால் சேர்த்து அரைத்த விழுதையும் மற்றும் உப்பு சேர்த்து முக்கால் பாகம் வேக வைக்கவும்.
பிறகு நறுக்கிய காய்கறிகளை சேர்த்து ஒரு ஸ்டீம் வேக விடவும்.
தாளித்தவைகளை கொட்டி கிளறி இறக்கினால் சுவையான மலேசியன் ப்ரைட் ரைஸ் ரெடி.
-
முட்டை புலாவ்
முட்டை - ஒன்று
சாதம் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 10
உப்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
நெய் - அரை மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
அதில் நறுக்கின வெங்காயத்தை போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பிரட்டி விடவும்.
அதனுடன் வடித்து வைத்திருக்கும் சாதத்தை போட்டு உப்பு சேர்த்து கிளறி விடவும்.
சாதத்துடன் முட்டை சேர்ந்து பொலபொலவென்று வந்ததும் மேலே நெய் ஊற்றி கிளறி இறக்கி விடவும். சுவையான முட்டை புலாவ் ரெடி
-
பீட்ரூட் பிரியாணி
சுத்தம் செய்த பீட்ரூட் - 200 கிராம்
பாசுமதி அரிசி - 200 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
நெய் - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி, புதினா இலைகள் - ஒரு கைப்பிடி(ஒவ்வொன்றிலும் 15 இலைகள்)
பட்டை - 2 துண்டுகள்
கிராம்பு, ஏலக்காய் - தலா 4
அரிசியை தண்ணீரில் போட்டு 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். வெங்காத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பீட்ரூட்டை துருவலாக துருவிக் கொள்ளவும், அல்லது மிகவும் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
நாண்ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் துருவிய பீட்ரூட்டை சேர்த்து வதக்கவும்.
பின்னர் கொத்தமல்லி, புதினா இலைகளை போட்டு வதக்கி விடவும்.
அதில் ஊற்றிய அரிசி, உப்பு, 450 மி.லி தண்ணீர் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு மிதமான தீயில் வைத்து மூடி வேக விடவும்.
இடையிடையே மூடியை திறந்து கிளறி விடவும். பிரியாணிப் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்
-
கேரட் சாதம்
வடித்த சாதம் - இருவருக்கான அளவு
பெரிய கேரட் - 3
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
தேங்காய் துருவல் - 3/4 கப்
பச்சைமிளகாய் - 2 அல்லது 3
தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கேரட்டை துருவிக் கொள்ளவும். தேங்காயையும், பச்சை மிளகாயையும் தண்ணீரில்லாமல் அரைத்துக் கொள்ளவும்.
தேங்காய் எண்ணெய் காயவைத்து அதில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் கேரட்டை கொட்டி உப்பு அரை ஸ்பூன் சேர்த்து கிளறி 3 நிமிடம் குறைந்த தீயில் இடையில் ஒரு முறை கிளறி விட எளிதில் வெந்து விடும்.
பின் அரைத்த தேங்காயை கேரட்டுடன் கொட்டி ஒரு கிளறு கிளறி இறக்கவும். அதனுடன் சாதத்தை கலந்து பரிமாறவும்.
-
வல்லாரை கீரை சாதம்
1) ஆய்ந்த வல்லாரை கீரை - 1 கப்
2) உதிரியாக வடித்த சாதம் - 3 கப் அளவு
3) பெரிய வெங்காயம் - 1
4) பச்சை மிளகாய் - 3
5) இஞ்சி - ஒரு சிறிய துண்டு
6) மசாலாத்தூள் - 1/4 டீஸ்பூன்
7) உப்பு - தேவைக்கேற்ப
8) எண்ணெய் - தேவைக்கேற்ப
9) கடுகு - 1/2 டீஸ்பூன்
கீரை, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை விழுதாக அரைக்கவும்.
வெங்காயத்தைப் பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
மேலும் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அரைத்த விழுதையும் சேர்த்து கிளறவும்.
பின் உப்பு, மசாலாத்தூள், வதக்கிய வெங்காயத்தைப் போட்டுக் கிளறவும்.
இதனுடன் சாதத்தையும் சேர்த்து கலக்கவும்.
சுவையான சத்தான வல்லாரை கீரை சாதம் ரெடி.
-
மீல்மேக்கர் பிரியாணி
மீல்மேக்கர் - ஒரு கப்
அரிசி - 250 கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
காரட் - ஒன்று
பீன்ஸ் - 25 கிராம்
பச்சை பட்டாணி - 25 கிராம்
பச்சை மிளகாய் - ஒன்று
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
பட்டை - ஒரு சிறிய துண்டு
லவங்கம் - 4
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
நெய்/வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மீல்மேக்கருடன் உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளி, காரட், பீன்ஸ், பச்சை மிளகாயை பொடியாக நறுக்க வேண்டும்.
எண்ணெய் சூடானதும் பட்டை, லவங்கம் போட்டு தாளிக்க வேண்டும். பின்பு பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்கு சிவந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் போகும் வரை வதக்கவும்.
பின்பு தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி அரிசியை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். அதனுடன் 4 கப் தண்ணீர் மற்றும் நெய்/வெண்ணெய் சேர்த்து 15 நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
பின்பு மூடியை திறந்து வேகவைத்த மீல்மேக்கர், நறுக்கிய காரட், பீன்ஸ், பட்டாணி அனைத்து பொடிகள் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு மீண்டும் வேக வைக்க வேண்டும். வெந்ததும் ரைத்தாவுடன் பரிமாறவும்.
-
சோயா புலவு
சோயா உருண்டைகள்- 1 கப்
பிரியாணி அரிசி- 2 1/2 கப்
பெரிய வெங்காயம்-3
கீறிய பச்சை மிலகாய்-4
மிளகாய்த்தூள்-அரை ஸ்பூன்
இஞ்சி விழுது- 1 ஸ்பூன்
சிறிய பூண்டு பற்கள்-15
தேவையான உப்பு
எண்ணெய்-2 மேசைக்கரண்டி
நெய்- 3 மேசைக்கரண்டி
கொத்தமல்லி-அரை கப்
புதினா இலைகள்- அரை கப்
மஞ்சள் தூள்- அரை தேக்கரண்டி
தேங்காய்த்துருவல்- அரை கப்
முந்திரிப்பருப்பு-8
சோம்பு- 1 ஸ்பூன்
கிராம்பு-1
ஏலம்-1
பட்டை- 1 துண்டு
அரிசியைக் கழுவி போதுமான நீரில் ஊறவைக்கவும்.
சோயா உருண்டைகளை 4 கப் வென்னீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து, பிறகு தண்ணீரை வடித்து குளிர்ந்த நீரிலும் 10 நிமிடங்கள் போட்டு வைத்து, சோயா உருண்டைகளிலுள்ள தண்ணீரைப் பிழிந்து எடுக்கவும்.
தேங்காயை முந்திரிப்பருப்பு சேர்த்து மையாக அரைக்கவும்.
கிராம்பு, ஏலம், பட்டை, சோம்பைப் பொடிக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணையையும் நெய்யையும் ஊற்றி சூடாக்கவும்.
வெங்காயைத்தை மெல்லியதாக அரிந்து சேர்த்து வதக்கவும்.
கீறிய பச்சை மிளகாய், இஞ்சி விழுது, பூண்டு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
புதினா இலைகள்,பொடித்த மசாலா, மிளகாய்த்தூள், கொத்தமல்லி சேர்த்து சில வினாடிகள் வதக்கவும்.
அரைத்த தேங்காய்க்கலவையைச் சேர்த்து, சோயா உருண்டைகள், உப்பு சேர்த்து மெல்லிய தீயில் வதக்கவும். வெந்ததும் அதைத் தனியே எடுத்து வைக்கவும்..
அதே பாத்திரத்தில் 7 கப் நீரை ஊற்றி கொதி வந்ததும் அரிசியைப் போட்டு மிதமான தீயில் சமைக்கவும்.
அரிசி முக்கால் பதம் வெந்ததும் உப்பைச் சேர்க்கவும்.
தண்ணிர் முழுவதுமாகச் சுண்டியதும் சோயா மசாலாவை மேலே பரப்பி சாதத்தை ‘தம்’மில் வைக்கவும்.
சுவையான சோயா பிரியாணி தயார்!!!
-
பீர்க்கங்காய் ரைஸ்
உதிரியாக வடித்த சாதம் - 1 கப்
பீர்க்கங்காய்(கசப்பில்லாதது) - 1
தக்காளி - 1
வெங்காயம் - 1
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
வேகவைத்த பட்டாணி - 1/4 கப்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
பீர்க்கங்காயை கழுவி, தோல் நீக்கி பின் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். தக்காளி, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். பின் எண்ணெயில் முதலில் பீர்க்கங்காய் துண்டுகளை நன்கு பொன்னிறமாக வதக்கி எடுத்து தனியே வைக்கவும்.
பின் அதே எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு போட்டு வறுத்து பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதில் தக்காளி விழுது, வதக்கிய பீர்க்கங்காய் துண்டுகள் போட்டு நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் அதை வடித்த சாதத்தில் கொட்டி கலக்கவும். கடைசியாக வேகவைத்த பட்டாணி சேர்த்து நன்கு கலக்கவும்
-
சிம்பிள் ப்ரைட் ரைஸ்(உணவகங்களில் செய்யும் முறை)
வடித்த சாதம் - ஒரு கப்
காரட், பீன்ஸ் - ஒரு கப்
குடை மிளகாய் - கால் கப்
கோஸ் - கால் கப்
சைனீஸ் சால்ட் - ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்)
பச்சை மிளகாய் - ஏழு நம்பர்
வெள்ளை மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
நறுக்கிய கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
ஆலிவ் ஆயில் - ஒரு டேபிள்ஸ்பூன்
காரட் மற்றும் பீன்ஸை நீளமாக மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை லேசாக இடித்துக் கொள்ளவும்.
மிளகை ஒன்றும் பாதியுமாக பொடி செய்து கொள்ளவும்.
கோஸை மிக மெலிதாக நீளமாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் கடாயை காய வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து காய்கறிகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பின்பு இடித்த பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் ஒரு நிமிடம் சிறு தீயில் வதக்கவும்.
மிளகுத் தூள் மற்றும் சைனீஸ் சால்ட் சேர்த்து ஒரு தரம் பிரட்டி சாதத்தில் கொட்டி கிளறவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து நறுக்கிய கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.
ப்ரைட் ரைஸ் தயார்.
-
கிட்ஸ் கேரட் புலாவ்
பாஸ்மதி அரிசி - 2 கப்
காரட் துருவல் – 4 கப்
தேங்காய்பால் – 2 கப்
வெங்காயம் - 2
புதினா இலைகள் - 10
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
தயிர் - 2 தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - ஒரு மேசைக்கரண்டி
பூண்டுப்பல் - 4
பச்சைமிளகாய் - 4 கீறியது (குழந்தையின் காரத்திற்கேற்ப)
பட்டை - 2
இலவங்கம் - 2
ஏலக்காய் - 2
பிரியாணிஇலை - 1
சீரகம் - ஒரு தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 10
நெய் அல்லது எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
பாசுமதி அரிசியை 2 கப் தண்ணீரில் ஊற வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும். பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி சீரகம், பட்டை, இலவங்கம் மற்றும் ஏலக்காய் போட்டு பொரிய விடவும்.
அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதன் பின்னர் புதினா இலைகள் மற்றும் துருவிய கேரட்டை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி விடவும்.
வதங்கியதும் பாசுமதி அரிசியை ஊற வைத்திருந்த தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் அதில் அர்சியை சேர்த்து கிளறி விடவும்.
பிறகு 2 கப் தேங்காய்பாலை ஊற்றி கிளறவும். மேற்கூறியவற்றை மிதமானத் தீயிலேயே செய்யவும்.
அரிசி பாதியளவு வெந்ததும் அதில் எலுமிச்சை சாறை ஊற்றி கொத்தமல்லித் தழை போட்டு, நன்றாக கிளறி தீயை குறைத்து அதை ஒரு குக்கரில் கொட்டி மூடி விசில் போடவும்.
10 நிமிடங்கள் சிறுதீயிலேயே வேக விடவும். வெந்ததும் திறந்து சிறிது நேரம் சூடு ஆறவிடவும்.
ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் நெய்யில் வறுத்த முந்திரி பருப்புகளைப் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.
-
பகாளா பாத்
பச்சரிசி - 1 கப்
பால் - 4 கப்
உப்பு - சுவைக்கு
தயிர் - 1டீஸ்பூன்
கேரட் - 1
மல்லி இலை - சிறிது
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
மோர்மிளகாய்
பச்சைமிளகாய்
இஞ்சி
கறிவேப்பிலை
சாதத்தை உப்பு சேர்த்து குழைவாக வேக வைத்து குழிக்கரண்டியால் மசிக்கவும்.
காய்ச்சிய பால், தயிர் சேர்க்கவும்.
கலந்த சூடான சாதத்தை கரண்டியால் எடுத்து ஊற்றினால் தோசை மாவு பதத்திற்கு இருந்தால்தான் ஆறியதும் சரியான பதத்திற்கு வரும்.
கேரட்டை துருவி சாதத்தில் சேர்க்கவும்
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்களை தாளிதம் செய்து சாதத்தில் கலந்து பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி 1- 2மணி நேரம் சென்று சாப்பிடவும்.
-
கவாபட் ரைஸ்
பாசுமதி அரிசி - 5 குவளை
தக்காளி - 7
வெங்காயம் பெரியது - 2
பூண்டு - 10பல்
பச்சை மிளகாய் - 3
நெய் +எண்ணெய் - 50கிராம்
சோயாசாஸ் - 3 கரண்டி
வினிகர் - 2 கரண்டி
மிளகுத்தூள் - 1 கரண்டி
எழுமிச்சைபழம் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
முட்டை - இரண்டு
மல்லிக்கீரை - ஒரு சிறிய கட்டு
அரிசியை உதிர் உதிராக வடிக்கவும். பூண்டை பொடியாக வெட்டி வைக்கவும்
தக்காளியை அரைத்து வைக்கவும் பச்சை மிளகாயை விதையை நீக்கி இரண்டாக கீறி வைக்கவும் வெங்காயத்தை வெட்டி வைக்கவும்
சட்டியில் எண்ணெய்+நெய் ஊற்றி வெங்காயத்தை போட்டி வதக்கவும் பாதி வெந்ததும் அதில் அரைத்த தக்காளியை ஊற்றி மூன்று நிமிடம் கிளறி அதில் பொடியாக நறுக்கிய பூண்டு விதை நீக்கிய பச்சை மிளகாய் சோயா சாஸ், மிளகுத்தூள், எ.பழம், வினிகர் அனைத்தையும் சேர்த்து நன்கு ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்.
பின் அதில் சோற்றை சேர்த்து கிளறி பத்து நிமிடம் தம்மில் போடவும் கடைசியில் முட்டையை கொத்திவிட்டு பொரித்து மேலே தூவி மல்லிக்கீரையை தூவி சூடாக பரிமாறவும்.
-
சீரக புலவு
பிரியாணி அரிசி- 2 கப்
தேங்காய்ப்பால்- 1 கப்
சீரகம்- 1 மேசைக்கரண்டி
பட்டை-1
கிராம்பு-1
ஏலம்-1
கறிவேப்பிலை- 1 கைப்பிடி
நெய்- 2 மேசைக்கரண்டி
எண்னெய்- 1 மேசைக்கரண்டி
இஞ்சி விழுது- அரை ஸ்பூன்
சிறிய பூண்டிதழ்கள்- 10
மெல்லியதாக அரிந்த வெங்காயம்- 1 கப்
தேவையான உப்பு
அரிசியைக் கழுவி அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் நெய்யும் எண்ணெயும் ஊற்றி சூடு செய்யவும்.
சீரகம், பட்டை, கிராம்பு, ஏலம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் வெங்காயம், பூண்டு சேர்த்து சிறிய தீயில் வதக்கவும்.
தேங்காய்ப்பால், 3 கப் நீர் சேர்க்கவும்.
உடனேயே அரிசியையும் சேர்க்கவும்.
அரிசி பாதி வெந்ததும் தேவையான உப்பைச் சேர்க்கவும்.
அரிசி முக்கால்வாசி வெந்ததும் நீரெல்லாம் சுண்டியதும் புலவு சாதத்தை ‘தம்’ மில் வைத்து 20 நிமிடங்கள் வேக வைக்கவும்.
-
மஞ்ச சோறு
தரமான வெள்ளைப்பொன்னி புழுங்கல் அரிசி - 2 கப்
தேங்காய் - 1
தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
பூண்டு - 4 பற்கள்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்பொடி - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
ரம்பை இலை - 1
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு - 4
ஏலம் - 3
தேங்காயைத்துருவிக்கொள்ளவும். 1/4 கப் அளவு தேங்காய்த்துருவலை தனியாக எடுத்து வைக்கவும்.
மீதமுள்ள தேங்காயை மிக்ஸியில் அரைத்து 6 டம்ளர் அளவு பால் எடுத்துக்கொள்ளவும்.
அரிசியை களைந்து நீரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
1/4கப் தேங்காய்த்துருவலில் சோம்பு, மஞ்சள்பொடி சேர்த்து சன்னமாக நீர் சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும்.
ரம்பை இலையை அனலில் காட்டி வாசனை வந்ததும் நறுக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலம், ரம்பை இலை தாளித்து நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து தனியாக வைக்கவும்.
தேங்காய்ப்பாலை பெரிய பாத்திரம் அல்லது எலெக்ட்ரிக் குக்கர் ஏதாவது ஒன்றில் வைத்து அரைத்த மஞ்சள்நிற தேங்காய் விழுது வெந்தயம், இரண்டாக நறுக்கிய பூண்டுபற்கள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்து வரும் பொழுது ஊறிய அரிசியை சேர்க்கவும்.
மேலும் கொதித்து வரும் பொழுது தாளித்தவற்றை சேர்த்து கிளறி விடவும்,
அரிசி வேகும் வரை குறைந்தது 2, 3 முறையாவது கம்பால் கிளறி விட வேண்டும்.
சாதம் சமைத்ததும், மேலும் 10 நிமிடம் சிம்மில் வைத்து அல்லது எலெக்ட்ரிக் குக்கர் என்றால் தம்மில் வைத்து பரிமாறவும்
-
மட்டன் தம் பிரியாணி (குக்கர் முறை)
தரமான பாஸ்மதி அரிசி - அரை கிலோ
மட்டன் எலும்புடன் - 400 கிராம்
பழுத்த தக்காளி - நான்கு
வெங்காயம் - நான்கு
பச்சை மிளகாய் - நான்கு
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு தூள் - 2 1/2 தேக்கரண்டி
தயிர் - கால் கப்
கொத்தமல்லி தழை - அரை கைப்பிடி
புதினா இலை - கால் கைப்பிடி
எண்ணெய் - அரை டம்ளர்
நெய் - இரண்டு தேக்கரண்டி
பட்டை - இரண்டு அங்குலம் அளவு ஒன்று
கிராம்பு - இரண்டு
ஏலக்காய் - இரண்டு
பிரிஞ்சி இலை - இரண்டு
ஷாஜீரா - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - இரண்டு மேசைக்கரண்டி
பாதாம் - ஐந்து (அரைத்தது)
சஃப்ரான் - ஐந்து இதழ் (பாலில் ஊற வைத்தது)
அரிசியை களைந்து ஊற வைக்கவும். வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாதாமை அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். சஃப்ரானை ஒரு மேசைக்கரண்டி சூடான பாலில் கரைத்து வைக்கவும். மட்டனை சுத்தம் செய்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, ஏலம், பிரிஞ்சி இலை, ஷாஜீரா, கிராம்பு ஆகியவற்றை போடவும். லேசாக பொரிந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு சுருங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதன் பிறகு சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டன் மற்றும் பச்சை மிளகாயை போட்டு நன்கு வதக்கவும்.
குக்கரை மூடி தீயை மிதமாக வைத்து 5 நிமிடம் மட்டனை வேக விடவும்
இப்போது மட்டன் லேசாக வெந்து சுருண்டு இருக்கும். அதனுடன் தக்காளி, கொத்தமல்லி தழை மற்றும் புதினாவை சேர்த்து கிளறவும்.
தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும். அதன் பின்னர் தயிர், பாதாம் விழுது, பாலுடன் கரைத்து வைத்திருக்கும் சஃப்ரான் ஆகியவற்றை சேர்த்து கிளறி விடவும்.
எல்லாவற்றையும் சேர்த்த பின்னர் நன்கு கிளறி விட்டு கொதிக்க விடவும். அப்படியே ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து வேக விடவும்.
பின்னர் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கிளறவும். தண்ணீர் சேர்த்து, பின்னர் ஒரு கொதி வந்ததும் களைந்து வைத்திருக்கும் அரிசியை சேர்க்கவும்.
அரிசியை சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்க வைக்கவும்.
கொதித்ததும் குக்கரை மூடி வெய்ட் போட்டு தீயை மிதமாக வைத்து இரண்டு விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கவும்.
ஆவி அடங்கியதும் மூடியை திறந்து சாதத்தை பிரட்டி விட்டு உடனே வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விடவும். அப்படியே விட்டால் கட்டி பிடித்து விடும்.
சுவையான மட்டன் பிரியாணி ரெடி.
-
புடலங்காய் முட்டை சாதம்
அரிசி - 2 கப்
புடலங்காய் - 500 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 4 பல்
முட்டை - 2
எண்ணெய்
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
முதலில் அரிசியைப் போட்டு சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளுங்கள்.
புடலங்காயை பொடியாக நறுக்கவும்.
வெங்காயம், தக்காளி, பூண்டை நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு அது வெடித்ததும் வெங்காயம், மிளகாய், பெருஞ்சீரகம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளியைப் போட்டு வதக்கவும்.
பின்பு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
புடலங்காயைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். உப்பு சேர்த்து கிளறி மூடி வேகவிடவும்.
பின்பு முட்டையை உடைத்து ஊற்றி வதக்கி உதிரியாக வரும் வரை கிளறி விடவும்.
சாதத்தின் மேல் கொட்டி கிளறி விடவும். சுவையான புடலங்காய் முட்டை சாதம் தயார்.
இதை குழம்புடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
-
பகாறா கானா
தரமான பாசுமதி அரிசி - ஒரு படி (எட்டு டம்ளர்)
எண்ணெய் - ஒரு டம்ளர் (200 மில்லி)
வெங்காயம் - கால் கிலோ
தயிர் - 175 மில்லி
பச்சைமிளகாய் - 8
எலுமிச்சை - ஒன்று
பழுத்த தக்காளி - ஒன்று
பட்டை - 2 அங்குல துண்டு இரண்டு
கிராம்பு - ஆறு
ஏலம் - நான்கு
நெய் (அ) டால்டா - 25 மில்லி
இஞ்சி பூண்டு விழுது - 8 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - ஒரு சிறிய கட்டு (கைக்கு இரண்டு கைப்பிடி)
புதினா - சிறிய அரை கட்டு (கைக்கு ஒரு கைப்பிடி)
உப்பு - எட்டு தேக்கரண்டி (அ) தேவையான அளவு
அரிசியை களைந்து 20 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லி மற்றும் புதினாவை ஆய்ந்து மண்ணில்லாமல் கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும். தக்காளியை இரண்டாக நறுக்கி வைக்கவும்.
ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெயை காய வைத்து அதில் பட்டை, ஏலம், கிராம்பு போட்டு வெடித்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கி மூடி போட்டு தீயை மிதமாக வைத்து வேக விடவும்.
வெங்காயம் சிவந்து விட கூடாது, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி மூன்று நிமிடம் அடுப்பை குறைத்து வைக்கவும் இதுவும் சிவற கூடாது.
இஞ்சி பூண்டு விழுது வதங்கியதும் கொத்தமல்லி, புதினா, பச்சைமிளகாய், தயிர் அனைத்தையும் சேர்க்கவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கருகவிடாமல் தீயை மிதமாக வைத்து வேக விடவும்.
அதன் பிறகு ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்றரை + ஒன்று ஊற்றி கொதிக்க விடவும்.
பின்னர் ஊற வைத்திருக்கும் அரிசியை தண்ணீரை வடித்து விட்டு இந்த கலவையில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
அதனுடன் பாதியாக நறுக்கின தக்காளி, நெய், உப்பு மற்றும் எலுமிச்சை சாறை பிழிந்து மீண்டும் கிளறி விடவும்.
தீயை அதிகமாக வைத்து கொதிக்க விடவும். முக்கால் பதம் தண்ணீர் வற்றும் போது தீயை குறைத்து வைக்கவும்.
பிறகு அடுப்பின் மேல் தம் போடும் கருவி (அ) தோசை தவ்வா (அ) டின் மூடி வைத்து சட்டியை அதன் மேல் வைத்து சரியான மூடி போட்டு அதன் மேல் வெயிட் (அ) சூடான குழம்பு உள்ள சட்டியை வைத்து 20 நிமிடம் தம்மில் போடவும்.
சட்டியை திறந்து லேசாக பிரட்டி விட்டு மற்றொரு பவுளில் எடுத்து வைக்கவும்
-
நவரத்தின புலாவ்
பாஸ்மதி அரிசி - கால் கிலோ(2கப்),
பெரிய வெங்காயம் - 3,
பனீர் - 200 கிராம்,
பச்சை பட்டாணி - 200 கிராம்,
காலிஃப்ளவர் - 200 கிராம்,
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
இஞ்சி - சிறிது,
பூண்டு - 5 பல்,
பட்டை - சிறிது,
கிராம்பு - 2,
ஏலக்காய் - 2,
பாதாம் -10,
பிஸ்தா - 10,
முந்திரி - 10,
உலர்ந்த திராட்சை - 20,
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி,
உப்பு - தேவைக்கேற்ப.
அரிசியை கழுவி, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயத்தை நீளமாக, சன்னமாக நறுக்கவும்.
காலிஃப்ளவரை சிறியதாக நறுக்கி வைக்கவும்.
இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கவும்.
பனீரை சிறிய துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து வைக்கவும். அதே எண்ணெயில் பாதாமையும் வறுத்து எடுக்கவும்.
மீதி எண்ணெயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் காலிஃப்ளவர், பட்டாணி சேர்த்து வதக்கி இறக்கவும்.
வேறொரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
கொதித்ததும் மஞ்சள் தூள், அரிசியை போட்டு வேக விடவும்.
முக்கால் பதம் வெந்ததும் உப்பு, வதக்கிய காய்கள், பொரித்த பனீர், வறுத்த பாதாம், பிஸ்தா, திராட்சை,வெண்ணெய் சேர்த்து சாதம் உடையாமல் கலக்கி சிறிது நேரம் தம்மில் வைத்து பரிமாறவும்.
Note:
ரைஸ் குக்கரிலும் செய்யலாம். தொட்டுக்கொள்ள காரமான சிக்கன் கிரேவி நன்றாக இருக்கும்.
-
ஸ்ரீலங்கன் ஃப்ரைட் ரைஸ்
பாஸ்மதி அரிசி - 3 கப்
பட்டர் - தேவையானளவு
நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்
நறுக்கிய பச்சைமிளகாய் - அரை கப்
சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
நறுக்கிய பீன்ஸ் - 2 கப்
உள்ளி (பூண்டு) - 3 பல்
இஞ்சி நறுக்கியது - ஒரு தேக்கரண்டி
தக்காளி நறுக்கியது - ஒரு கப்
கோவா (முட்டைகோஸ்) நறுக்கியது - 2 கப்
முட்டை (அவித்து, சிறுதுண்டுகள்) - 2
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
கோழி இறைச்சி(பொரித்த) - 2 கப்
உருளைக்கிழங்கு (சிறியதுண்டுகள்,பொரித்த) - ஒரு கப்
அஜினோமோட்டோ - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
லீக்ஸ் - 2 கப்
இறால் (சுத்தமாக்கி, பொரித்த ) - 2 கப்
கத்தரிக்காய் (சிறியதுண்டுகள், பொரித்த) - ஒரு கப்
பாஸ்மதி அரிசியை கழுவி துப்பிரவு செய்யவும். பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை) வைத்து சூடாக்கிய பின்பு பட்டர், கழுவி துப்பிரவு செய்த பாஸ்மதி அரிசி ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.
பின்பு அடுப்பிலிருந்து தாட்சியை இறக்கி வறுத்த அரிசியை வேறு ஒரு பாத்திரத்தில் போடவும்.
அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து அதில் முக்கால் பகுதி தண்ணீர் விட்டு அதனை கொதிக்க விடவும்.
அடுப்பிலுள்ள தண்ணீர் கொதித்ததும் அதில் கழுவி வறுத்த அரிசியை போட்டு அவியவிடவும்.
அரிசி அவிந்து சோறு(சாதம்) ஆகியதும் அதிலுள்ள கஞ்சியை வடித்து விட்டு அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு பாத்திரத்தில் போட்டு ஆற வைக்கவும்.
பின்பு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து அதில் முக்கால் பகுதி தண்ணீர் விட்டு அதனை கொதிக்க விடவும்.
அடுப்பிலுள்ள தண்ணீர் கொதித்ததும் அதில் கழுவி வறுத்த அரிசியை போட்டு அவியவிடவும்.
அரிசி அவிந்து சோறு(சாதம்) ஆகியதும் அதிலுள்ள கஞ்சியை வடித்து விட்டு அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு பாத்திரத்தில் போட்டு ஆற வைக்கவும்.
அதன் பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கிய பின்பு அதில் எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் வெங்காயம், பச்சைமிளகாய், உள்ளி(பூண்டு), இஞ்சி போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பொன்னிறமாக வதக்கிய பின்பு அதில் நறுக்கிய பீன்ஸ் போட்டு வதக்கவும். பீன்ஸ் வதக்கிய பின்பு அதில் நறுக்கிய காரட் போட்டு வதக்கவும்.
காரட் வதக்கிய பின்பு அதில் நறுக்கிய கோவா(முட்டைகோஸ்) போட்டு வதக்கவும்.
கோவா(முட்டைகோஸ்) போட்டு வதக்கிய பின்பு அதில் நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும்.
தக்காளி போட்டு வதக்கிய பின்பு அதில் பொரித்த உருளைக்கிழங்கு போட்டு வதக்கவும்.
உருளைக்கிழங்கு போட்டு வதக்கிய பின்பு அதில் நறுக்கிய லீக்ஸ் போட்டு வதக்கவும்.
பின்பு அதில் பொரித்த கத்தரிக்காய் போட்டு வதக்கவும். பின்பு பொரித்த இறால் போட்டு வதக்கவும்.
பொரித்த இறால் போட்டு வதக்கிய பின்பு அதில் பொரித்த கோழி இறைச்சி போட்டு வதக்கவும்.
இவையாவும் நன்றாக வதங்கியதும் அவித்தமுட்டை, உப்பு, அஜினோமோட்டோ, மிளகுத்தூள், கறிவேப்பிலை, தேசிக்காய்(எலுமிச்சம்பழ)சாறு, சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
அதன் பின்பு சோற்றையும்(சாதத்தையும்) சேர்த்து நன்றாக கலக்கவும். கலந்த ஒரு நிமிடத்தின் பின்பு சுவையான ஃப்ரைட்ரைஸ் தயாராகி விடும்.
அதன் பின்பு அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தட்டில் ஸ்ரீலங்கன் ஃப்ரைட் ரைஸ் வைத்து இதனுடன் கறிவேப்பிலை துவையல் அல்லது இஞ்சித்துவையல் அல்லது வேறு ஏதாவது துவையலுடன் பரிமாறவும்.
-
சைனீஸ் ஃப்ரைட் ரைஸ்
பாஸ்மதி அரிசி(ஊறவைத்தது) - 2 கப்
காரட் நறுக்கியது - 200 கிராம்
பீன்ஸ் நறுக்கியது - 200 கிராம்
கறிமிளகாய்(குடைமிளகாய்) நறுக்கியது - 200 கிராம்
பச்சைமிளகாய் கீறியது - 8
சோயா சோஸ் - 2 மேசைக்கரண்டி
லீக்ஸ் - ஒரு பிடி
செலரி - ஒரு பிடி
பட்டர் - தேவையானளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் நறுக்கியது - ஒரு கப் (200 கிராம்)
பாஸ்மதி அரிசியை கழுவி துப்பிரவு செய்யவும். பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கியபின்பு அதில் பட்டர், கழுவி துப்பிரவு செய்த பாஸ்மதி அரிசி ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.
அதன் பின்பு அடுப்பிலிருந்து தாட்சியை இறக்கி வறுத்த அரிசியை வேறு ஒரு பாத்திரத்தில் போடவும்.
பின்பு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து அதில் முக்கால் பகுதி தண்ணீர் விட்டு அதனை கொதிக்க விடவும்.
அடுப்பிலுள்ள தண்ணீர் கொதித்ததும் அதில் கழுவி வறுத்த அரிசியை போட்டு அவியவிடவும்.
அரிசி அவிந்து சோறு(சாதம்) ஆகியதும் அதிலுள்ள கஞ்சியை வடித்து விட்டு அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு பாத்திரத்தில் போட்டு ஆற வைக்கவும்.
அதன் பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கிய பின்பு அதில் எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பொன்னிறமாக வதக்கிய பின்பு அதில் நறுக்கிய பீன்ஸ் போட்டு வதக்கவும்.
பீன்ஸ் வதக்கிய பின்பு அதில் நறுக்கிய காரட் போட்டு வதக்கவும். காரட் வதக்கியதில் நறுக்கிய கறிமிளகாய் (குடைமிளகாய்) போட்டு வதக்கவும்.
கறிமிளகாய்(குடைமிளகாய்) வதக்கிய பின்பு அதில் சோயாசாஸ், லீக்ஸ், செலரி, உப்பு ஆகியவற்றையும் போட்டு பாத்திரத்தை டைட்டாக மூடி மெல்லிய நெருப்பில்(தீயில்) வேகவிடவும் .
வெந்த பின்பு இதனுடன் சோற்றை(சாதத்தை) போட்டு நன்றாக கலந்தால் தாளிப்போ அல்லது கரம்மசாலாவோ இல்லாத சைனீஸ்ஃப்ரைட் ரைஸ் தயாராகிவிடும்.
பின்பு ஒரு தட்டில் சைனீஸ் ஃப்ரைட் ரைஸை வைத்து இதனுடன் கறிவேப்பிலை துவையல் அல்லது இஞ்சித்துவையல் அல்லது வேறு ஏதாவது துவையலுடன் பரிமாறவும்.
-
தாய் ஃப்ரைட் ரைஸ்
பாஸ்மதி அரிசி (ஊறவைத்தது) - 250 கிராம்
பட்டர் - ஒரு தேக்கரண்டி
கோவா(முட்டைகோஸ்) நறுக்கியது - 2 கப்
காரட் (நறுக்கியது) - ஒரு கப்
கறிமிளகாய்(குடைமிளகாய்)நறுக்கியது - ஒரு கப்
வெங்காயம் (நறுக்கியது) - ஒரு கப்
தக்காளிப்பழம் (நறுக்கியது) - ஒரு கப்
வெங்காயத்தாள் - 2
பேபிக்கான் - 4
துளசி இலை - ஒரு கட்டு
இஞ்சி நறுக்கியது - ஒரு தேக்கரண்டி
உள்ளி(பூண்டு)நறுக்கியது - 8 பல்
பச்சைமிளகாய் நறுக்கியது - 10
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
அஜினோமோட்டோ - தேவையானளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வறுத்தகச்சான்(இரண்டாக உடைத்தது) - சிறிதளவு
கறிவேப்பிலை நறுக்கியது - சிறிதளவு
தேசிக்காய்(எலுமிச்சம்பழ)சாறு - சிறிதளவு
பாஸ்மதி அரிசியை கழுவி துப்பிரவு செய்த பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து சூடாக்கிய பின்பு அதில் போட்டு வறுக்கவும்.
வறுத்த பின்பு அடுப்பிலிருந்து தாட்சியை (வாணலியை) இறக்கி வறுத்த அரிசியை வேறு ஒரு பாத்திரத்தில் போடவும்.
பின்பு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து அதில் முக்கால்பகுதி தண்ணீர் விட்டு அதனை கொதிக்க விடவும்.
அடுப்பிலுள்ள தண்ணீர் கொதித்ததும் அதில் கழுவி வறுத்த அரிசியை போட்டு அவியவிடவும்.
அரிசிஅவிந்து சோறு(சாதம்) ஆகியதும் அதிலுள்ள கஞ்சியை வடித்து விட்டு அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.
அதன் பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கியபின்பு எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் வெங்காயம், பச்சைமிளகாய், உள்ளி(பூண்டு), இஞ்சி, வெங்காயத்தாள் போட்டு வதக்கவும்.
இவையாவும் வதங்கியபின் இதனுடன் கறிமிளகாய்(குடைமிளகாய்), கோவா(முட்டைகோஸ்), காரட், துளசி யிலை ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும்.
இவையாவும் வதங்கிய பின்பு இதனுடன் தக்காளிப்பழம், பேபிக்கானையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதங்கிய பின்பு அஜினோமோட்டோ, மிளகுத்துள், கறிவேப்பிலை, தேசிக்காய்(எலுமிச்சம்பழ)சாறு, பட்டர் சேர்த்து நன்றாக கலந்து ஒரு நிமிடத்தின் பின்பு அடுப்பிலிருந்து இறக்கவும்.
அதன் பின்பு வாயகன்ற பாத்திரத்தில் சோற்றையும்(சாதத்தையும்) வதக்கிய காய்கறிகளையும் மாறிமாறி போட்டு நன்றாக கலந்து அதன் மேல் வறுத்து இரண்டாக உடைத்த கச்சானை (வேர்கடலையை) போட்டு அலங்கரிக்கரித்த பின்பு சுவையான தாய் ஃப்ரைட் ரைஸ் தயாராகிவிடும். அதன் பின்பு அதை பரிமாறவும்.
-
நெல்லை தம் பிரியாணி
மட்டன் - 1 1/4 கிலோ
பிரியாணி அரிசி - ஒரு கிலோ
எண்ணெய் - 150 மில்லி
நெய் - 150 மில்லி
இஞ்சி பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி
ஏலம் - 3
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு (கரம் மசாலா பவுடர் போடுவதால், விரும்பினால் சேர்க்கவும்)
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி (ஏலம், பட்டை, கிராம்பு பொடி)
பச்சை மிளகாய் - 6
சில்லி பவுடர் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 300 கிராம்
பழுத்த தக்காளி - 400 கிராம்
தயிர் - 200 மில்லி
எலுமிச்சை - 2(சிறியது)
புதினா - சிறிய கட்டு
மல்லி - சிறிய கட்டு
ஆரஞ்ச் ரெட், லெமன் யெல்லோ கலர் - ஒரு பின்ச்
உப்பு - தேவைக்கு
வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். மல்லி, புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிரியாணி அரிசியை தண்ணீரில் ஊற வைக்கவும்.
கறியை சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிகட்டி அதில் தயிர், ஒரு மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, ஒரு தேக்கரண்டி சில்லி பவுடர், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
அதன் பிறகு குக்கரில் ஊற வைத்திருக்கும் கறியை போட்டு 3 விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கவும்.
கறி வெந்த பின்பு எடுத்து தனியாக வைக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் 150 மில்லி எண்ணெய், 100 மில்லி நெய் விட்டு காய்ந்ததும் ஏலம், பட்டை, கிராம்பு தாளித்து நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் முழுவதையும் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கி சிவந்ததும், மீதமுள்ள 2 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா போட்டு பிரட்டவும். சிம்மில் வைத்து சிறிது நேரம் மூடி திறக்கவும்.
பின்பு அதில் தக்காளி, மிளகாய், மல்லி, புதினா, ஒரு தேக்கரண்டி சில்லி பவுடர், சிறிது உப்பு போட்டு பிரட்டி மூடி போட்டு மசிய விடவும்.
மசிந்ததும் வேக வைத்த மட்டனை சேர்க்கவும். சிறிது நேரம் தீயை மிதமாக வைத்து மூடி வைக்கவும். மட்டன் மூழ்கும் அளவு கிரேவி இருக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் தாராளமாக ஊற்றி கொதி வந்தவுடன் ஊற வைத்த அரிசியை போட்டு முக்கால் அளவு வெந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பின்பு மட்டன் மசாலா உள்ள பாத்திரத்தில் வடித்த சாதத்தை கொட்டி சமப்படுத்தி, ஆரஞ்ச் ரெட், லெமன் யெல்லொ கலரை சிறிது நீரில் கரைத்து சாதம் மேல் ஊற்றி விடவும். மீதி உள்ள 50 மில்லி நெய்யை சாதம் மேல் ஊற்றவும்.
பின்பு தம் போடுவதற்கு அலுமினியம் ஃபாயிலை போட்டு பாத்திரத்தில் மூடி அதன் மேல் தட்டு வைத்து மூடி போடவும். சிம்மில் கால் மணி நேரம் வைக்கவும். பாத்திரத்தின் அடியில் பழைய தோசைக்கல் அல்லது ஹீட் டிஃப்யுசர் இருந்தால் வைத்து கால் மணி நேரம் சிம்மில் வைத்திருக்கவும்.
அடுப்பை அணைத்து கால் மணி நேரம் கழித்து திறந்து ஒன்று போல் பிரட்டவும். சாதம் மட்டனுடன் சேர்ந்து வருமாறு பிரட்டவும். சாதம் உடையக்கூடாது. தம் போடுவதால் மட்டனில் உள்ள கிரேவி எல்லாம் சாதம் இழுத்து கொண்டு விடும்.
-
மூலிகை சாதம்
உதிராக வடித்த சாதம் - 2 கப்,
கற்பூர வெற்றிலை (வெள்ளை வெற்றிலை) - 10,
வெள்ளை துளசி - ஒரு கைப்பிடி,
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி,
புதினா - ஒரு கைப்பிடி,
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,
சீரகம் - 1 தேக்கரண்டி,
மிளகு - 1 தேக்கரண்டி,
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
எல்லா இலைகளையும் நன்கு கழுவி, மிகவும் பொடியாக நறுக்கி, தனித்தனியே வைக்கவும்.
சீரகம், மிளகை வெறும் வாணலியில் வறுத்து நைசாக பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, முதலில் நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பிறகு புதினா, அடுத்து கொத்தமல்லி, அதற்கடுத்து துளசி, கடைசியாக வெற்றிலை சேர்த்து கிளறவும்.
வெற்றிலை சேர்த்த பிறகு அதிகம் கிளறாமல், உதிராக வடித்து, ஆற வைத்த சாதம், பொடித்த சீரக-மிளகு பொடி, உப்பு சேர்த்து, நன்கு கிளறி இறக்கவும்.
Note:
ஓரளவு சூட்டுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
-
நவரத்தின புலாவ்
பாஸ்மதி அரிசி - கால் கிலோ(2கப்),
பெரிய வெங்காயம் - 3,
பனீர் - 200 கிராம்,
பச்சை பட்டாணி - 200 கிராம்,
காலிஃப்ளவர் - 200 கிராம்,
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
இஞ்சி - சிறிது,
பூண்டு - 5 பல்,
பட்டை - சிறிது,
கிராம்பு - 2,
ஏலக்காய் - 2,
பாதாம் -10,
பிஸ்தா - 10,
முந்திரி - 10,
உலர்ந்த திராட்சை - 20,
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி,
உப்பு - தேவைக்கேற்ப.
அரிசியை கழுவி, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயத்தை நீளமாக, சன்னமாக நறுக்கவும்.
காலிஃப்ளவரை சிறியதாக நறுக்கி வைக்கவும்.
இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கவும்.
பனீரை சிறிய துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து வைக்கவும். அதே எண்ணெயில் பாதாமையும் வறுத்து எடுக்கவும்.
மீதி எண்ணெயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் காலிஃப்ளவர், பட்டாணி சேர்த்து வதக்கி இறக்கவும்.
வேறொரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
கொதித்ததும் மஞ்சள் தூள், அரிசியை போட்டு வேக விடவும்.
முக்கால் பதம் வெந்ததும் உப்பு, வதக்கிய காய்கள், பொரித்த பனீர், வறுத்த பாதாம், பிஸ்தா, திராட்சை,வெண்ணெய் சேர்த்து சாதம் உடையாமல் கலக்கி சிறிது நேரம் தம்மில் வைத்து பரிமாறவும்.
Note:
ரைஸ் குக்கரிலும் செய்யலாம். தொட்டுக்கொள்ள காரமான சிக்கன் கிரேவி நன்றாக இருக்கும்.
-
ஈஸி வெஜிடபிள் புலாவ்
பாஸ்மதி அரிசி - கால் கிலோ (2 கப்),
பெரிய வெங்காயம் - 2,
காரட் - 1,
பச்சை பட்டாணி - 100 கிராம்,
பீன்ஸ் - 10,
காலிஃப்ளவர் - 100 கிராம்,
பச்சை மிளகாய் - 2,
சீரகம் - 1/2 தேக்கரண்டி,
இஞ்சி - சிறிது,
பூண்டு - 10 பல்,
பட்டை - சிறிது,
கிராம்பு - 2,
ஏலக்காய் - 2,
பிரிஞ்சி இலை - சிறிது,
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி,
உப்பு - தேவைக்கேற்ப.
அரிசியை கழுவி, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயத்தை நீளமாக, சன்னமாக நறுக்கவும்.
காரட், பீன்ஸை அரை அங்குல சன்ன துண்டுகளாக நறுக்கவும்.
காலிஃப்ளவரை சிறியதாக நறுக்கி வைக்கவும்.
இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாயை நைசாக அரைக்கவும்.
ரைஸ் குக்கர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெயை ஊற்றி பிரிஞ்சி இலை தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அரைத்த மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
காய்கள் சேர்த்து ஒரு கிளறு கிளறி (வதக்க வேண்டாம்) அரிசி சேர்த்து கிளறி, 4 கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
பாத்திரத்தை ரைஸ் குக்கரில் வைத்து ஆன் செய்யவும்.
5 நிமிடம் கழித்து உப்பு சேர்த்து கலக்கி மூடவும்.
தானாக வார்மர் நிலைக்கு வந்ததும் 10 நிமிடம் கழித்து திறந்து, சாதம் உடையாமல் கலக்கி பரிமாறவும். வெள்ளை வெளேரென்று பார்க்க அழகாக இருக்கும்.
Note:
குக்கரிலும், தனியாகவும் கூட இந்த முறையில் செய்யலாம். தொட்டுக்கொள்ள சிக்கன் குருமா, மட்டன் குருமா, உருளைக்கிழங்கு-பட்டாணி குருமா, ராய்த்தா நன்றாக இருக்கும்.
-
கறிவேப்பிலை துவையல் சாதம்
சாதம் - ஒரு கப்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
புளி - ஒரு சிறு உருண்டை
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுந்து - அரை தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலையை ஆய்ந்து சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, தேங்காய் துருவல், புளி, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி கடுகு, உளுந்து போட்டு தாளித்துக் கொள்ளவும்.
அதில் அரைத்த கறிவேப்பிலை விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
சாப்பிடும் போது துவையலை சாதத்துடன் சேர்த்து கலந்து பரிமாறவும். சுவையான கறிவேப்பிலை துவையல் சாதம் ரெடி
-
சமையல்:கறிவேப்பிலை சாதம்
ஒரேமாதிரியான சாப்பாட்டை சாப்பிட்டு சாப்பிட்டு போரடிக்குதா...இதோ ஒங்களுக்காகதான் இந்த கறிவேப்பிலை சாதம்! கறிவேப்பிலையில் நிறைய இரும்புச்சத்து இருப்பதால் உடலுக்கு ரொம்ப நல்லது. கறிவேப்பிலையை உணவில் நிறைய சேர்த்துக்கொண்டால் தலைமுடி நன்கு கருகருவென்று வளரும்... கறிவேப்பிலையை தனியாக சாப்பிட முடியலையென்றால் அடிக்கடி கறிவேப்பிலை சாதம் செஞ்சு சாப்பிடுங்க.... சுவையுடன் நல்ல பலனும் கிடைக்கும்!
தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப்
கறிவேப்பிலை - ஒரு கப்
நல்லெண்ணை - 1 டீ ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டீ ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீ ஸ்பூன்
கடுகு - 1/2 டீ ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
மிளகுத்தூள் - 1/2 டீ ஸ்பூன்
வர மிளகாய் - 3
பெருங்காயம் - 1 சிட்டிகை
முந்திரி - 5
எலுமிச்சை - 1/4 பழம்
நெய் - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* சிறிதளவு நெய்யில் கறிவேப்பிலையை மொறுகலாக வறுத்து, மைய பொடித்துக்கொள்ளவும்.
* பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
* அரிசியை சாதமாக வடித்து உதிரி உதிரியாக ஒரு அகன்ற பாத்திரத்தில் வைக்கவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு சிவந்ததும், வர மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும்.
* பிறகு நறுக்கிய வெங்காயம் பெருங்காயத்தூள் சேர்த்து சிவக்க வதக்கவும்.
* பிறகு பொடித்த கறிவேப்பிலையைப் போட்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.
* அதனுடன் எலுமிச்சம்பழத்தை பிழிந்து சேர்க்கவும்.
* பின்னர் அதனுடன் மிளகுத்தூள், நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறவும்.
* பிறகு ஆற வைத்த உதிரியாக உள்ள சாதத்தைச் சேர்த்து சாதம் குழையாமல் நன்றாகக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.
குறிப்பு:
* இதில் சிறிது இஞ்சி துருவலைச் சேர்த்து வதக்கினால் இன்னும் வாசனையாக இருக்கும்.
* முந்திரிக்குப் பதிலாக, வறுத்த நிலக்கடலை, வறுத்த பொட்டுக்கடலை போன்றவையும் சேர்க்கலாம்