FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on June 05, 2012, 02:17:37 PM
-
விரல்களால் பேசும்
வித்தகன் நீ......
விழிமூடி ரசிக்கும்
சிறு பிள்ளை நான் .....
சிரிக்க வைத்தே
சிலிர்க்க வைக்கும்
சிறுபிள்ளை நீ .....
சிறகை போலே
பறந்து செல்லும்
தென்றலாய் நான்....
என் மணித்துளிகளை
பனித்துளிகளாக்கி
விளையாடும்
வெண்புறா நீ ....
உன் வார்த்தைகளுக்கு மட்டும்
தலையசைக்கும்
தஞ்சாவூர் பதுமை
நான்.....
என் அகராதி
வார்த்தைக்கெல்லாம்
அர்த்தமாய் நீ ....
உன் மனமெல்லாம்
சுற்றித்திரியும்
சிறு பெண்ணாய் நான்...
என் சிணுங்கள்களுக்கெல்லாம்
சிம்பனியாய் நீ...
உன் இதழ்களுக்கு
மட்டும் சங்கீதமாய்
நான்....
நம் இதயமெல்லாம்
பரவிச்செல்லும்
இன்பமான
எதிரொலியாய் நாம்...
-
உன் இதழ்களுக்கு
மட்டும் சங்கீதமாய்
நான்.... ;)
-
அடேங்கப்பா!
ஒரு இடைவேளை எடுத்து வந்தால்
எழுதும் எழுத்துக்களில், கூறும் கருத்துகளில்
இப்படியும் ஒரு இனிமை கூடுமா?
யதார்த்தமாய் சோதித்து பார்க்கவே
எழுத்துக்கள் எதுவும் எழுதாது
இதோ நானும் ஒரு இடைவேளையில் .....
வாழ்த்துக்கள் !
அபார மெருகேற்றம் தர்ஷு !
-
kavignare epavum 2 days namaku pudichavagala parkama irunthu partha namaku vithiyasam therium athu pola than nanum konjam idaiveli eduthen athu ungaluku epdi theriuthu niga yen idaiveli viduriga oluga kavithai poduga
-
நம் இதயமெல்லாம்
பரவிச்செல்லும்
இன்பமான
எதிரொலியாய் நாம் !!!!
Ethiroliya illa inbamana valiyaa ??