FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Tamil NenjaN on June 03, 2012, 06:53:58 PM
-
எரிந்து போன மேய்ச்சல்
நிலமாய் - நான்..
நண்பர்களின் கணிப்பு
எட்ட விலகியே போனது
அவர்களின் உறவு
எரிந்து போன நிலத்திலும்
புற்கள் துளிர்க்கும்..
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் நான்..
நான் கட்டும் கோட்டைகள்..
நிலம் தொட்டுத்தான்
வானளாவ உயர்ந்தது..
இனியும் உயரப்போகிறது..
என் வெற்றிக் கோட்டைகளை
தகர்த்தவர்கள்
இன்று ஆடலாம்..
ஆடிப்பாடலாம்....
ஆனாலும்
களைத்துப் போவார்கள்
ஒருநாள்..
புதிய சகாப்தமொன்றை
எழுதுவதற்காய்
நான் காத்திருக்கிறேன்
முனைப்புடன்..
முன்னிலும் கூர்மையாய்..
சுயவிமர்சனங்கள்
என்னைப் புடம்போட..
உறவுகள் எனக்காய்
பரிந்து வர..
புதிய மனிதனாகி விட்டேன்
நான்
எரிக்கப்பட்ட நிலத்தின்
எஞ்சிய வேர்களிலிருந்து..
மீண்டும் துளிர்க்கும்
ஆசையில்....
எல்லோரும் தம்மிஷ்டம்போல
கலைத்துப் போட..
நானொன்றும்
மணல் கோட்டையில்லை..
தீப்பட்ட இரும்பென..
விடியலின் செந்நிறமாய்
எனக்குள்ளும் தகிக்கும்
இலட்சிய வேட்கை
நாளைய பொழுதில்
அது வெல்லும்
நிச்சயமாய்...
காட்டுத்தீயாய் ..
என்வாழ்வின் துயரங்கள்
அணைந்து போகும்
ஒருநாள்..
பூத்துக்குலுங்கும்
புல்வெளியாய்..
புதுவாழ்வு காண்பேன்
அந்நாள்...
காத்திருக்கிறேன்
எதிர்பார்ப்புகளோடு...
-
எல்லோரும் தம்மிஷ்டம்போல
கலைத்துப் போட..
நானொன்றும்
மணல் கோட்டையில்லை..
என் மன நிலைக்கு ஏற்ற கவிதை :'( :'( :'( :'(
-
நன்றி ஸ்ருதி
-
என் வெற்றிக் கோட்டைகளை
தகர்த்தவர்கள்
இன்று ஆடலாம்..
ஆடிப்பாடலாம்....
ஆனாலும்
களைத்துப் போவார்கள்
ஒருநாள்..
புதிய சகாப்தமொன்றை
எழுதுவதற்காய்
நான் காத்திருக்கிறேன்
முனைப்புடன்..
முன்னிலும் கூர்மையாய்..
ஒவ்வொரு வரியிலும் அர்த்தங்கள் பல. இந்த கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது சகோதரர் தமிழ் நெஞ்சன். நிச்சயம் ஒரு நாள் நம்மை ஏளனம் செய்தவர்கள் முன்னிலையில் ஒரு புதிய சகாப்தம் ஒன்றை படைப்போம்.
நன்றி!
-
நன்றி சகோதரர் யூசுப்..செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்ததே என்பதுதான் இஸ்லாத்தின் போதனை அல்லவா சகோதரரே..அதனைப் போல நம் எண்ணங்கள் நல்லதாக இருக்கும்போது வெற்றியும் சாத்தியம் தானே...காத்திருப்போம்..
நன்றி
-
நான் கட்டும் கோட்டைகள்..
நிலம் தொட்டுத்தான்
வானளாவ உயர்ந்தது..
இனியும் உயரப்போகிறது..
புதிய சகாப்தமொன்றை
எழுதுவதற்காய்
நான் காத்திருக்கிறேன்
முனைப்புடன்..
முன்னிலும் கூர்மையாய்..
சுயவிமர்சனங்கள்
என்னைப் புடம்போட..
உறவுகள் எனக்காய்
பரிந்து வர..
புதிய மனிதனாகி விட்டேன்
நான்
எரிக்கப்பட்ட நிலத்தின்
எஞ்சிய வேர்களிலிருந்து..
மீண்டும் துளிர்க்கும்
ஆசையில்....
எல்லோரும் தம்மிஷ்டம்போல
கலைத்துப் போட..
நானொன்றும்
மணல் கோட்டையில்லை..
நாளைய பொழுதில்
அது வெல்லும்
நிச்சயமாய்...
காத்திருக்கிறேன்
எதிர்பார்ப்புகளோடு...
superb tamil nenjan.
unga ovvoru variyum nalla oru inspiration ah iruku..
ovvoru variyilum positive ah irukum.
unga ennangal ederaa en manamaarndha vaazthukkal.
-
எரிந்து போன நிலத்திலும்
புற்கள் துளிர்க்கும்..
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் நான்..(intha nambikai pothum life la ellame kidaika vazhi seium
எல்லோரும் தம்மிஷ்டம்போல
கலைத்துப் போட..
நானொன்றும்
மணல் கோட்டையில்லை.( antha kalaiththa kottaiyai irumbu kottaiya matra mudiume namal nichayam oru naal athu niraiverum
-
நன்றி அனு.. பாராட்டுக்கு நன்றிகள்
-
நன்றி தர்சினி,
-
எரிந்து போன நிலத்திலும்
புற்கள் துளிர்க்கும்..
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் நான்.
intha varigala nenachi dhaan lifeae travelagitu iruku
-
வாழ்க்கையே நம்பிக்கைதான் கண்மணி..வெற்றியின் அடிப்படையும் நம்பிக்கைதான்...வாழ்வு ஒருநாள் மாறும். அது நிச்சயமாய் வெற்றியின் அழைப்பாய் கேட்கும்...