FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: kanmani on June 03, 2012, 01:49:18 AM

Title: விதி உந்தன் அடியில் தோழா!
Post by: kanmani on June 03, 2012, 01:49:18 AM
விதி உந்தன் அடியில் தோழா!

முடியும் முடியும் என்றிரு தோழா - எதுவும்
முடியும் விடாதே முயன்றால் தோழா
விடியும் விடியும் ஓர்நாள் விடியும் - தோழா
விழவிழ எழுந்தால் உன்னால் முடியும்!

இடியும் மழையும் இணைந்தே வரினும் - உன்
இதயம் மட்டும் இரும்பா கட்டும்
குழிதேடி ஓடும் தண்ணீர் போல - உன்
குறியொன்றாய் என்றும் இருக்கட்டும் தோழா!!

ஒன்றே நினைவு அது வென்றிடும் கனவு
என்றே இருந்திடு அதில் வெறியாய் இருந்திடு
கொன்றிடு வேண்டா எண்ணத்தை தோழா - என்றும்
எண்ணிடு உன் கொள்கைக் கேற்றதை தோழா!!

பழிப்பவன் அரமென உனை தீட்டிடு அதிலே
வலிமை உரத்தை நெஞ்சில் ஏற்றிடு தோழா
உளி கண்டு நீயும் களிகொள்ளு தோழா - அதனால்
பொலிவாய் நீதான் அழகு சிலையாய் தோழா!

புலரும் பொழுதில் ஒவ்வொரு நொடியும்
உயர்ந்திட நீயும் முயன்றிடு தோழா - கண்
அயர்ந்திட நீயும் மறந்திடு தோழா - உன்
காரியமதிலே கண்ணாய் இருந்திடு தோழா!!

கதிரவன் கூட உனைக்கண்டு வியப்பான்
இரவும் பகலும் உன்புகழ் ஒளிர்வதைக் கண்டு - எல்லாம்
விதி என்ற சொல்லை வென்றவனென்று - அந்த
விதி கூட உந்தன் துதிபாடும் தோழா!!!

written by sme one
Title: Re: விதி உந்தன் அடியில் தோழா!
Post by: ஸ்ருதி on June 03, 2012, 10:05:16 AM

கதிரவன் கூட உனைக்கண்டு வியப்பான்
இரவும் பகலும் உன்புகழ் ஒளிர்வதைக் கண்டு


niceeeeeeeeee
Title: Re: விதி உந்தன் அடியில் தோழா!
Post by: vimal on June 03, 2012, 12:01:32 PM
ஒன்றே நினைவு அது வென்றிடும் கனவு
என்றே இருந்திடு அதில் வெறியாய் இருந்திடு
கொன்றிடு வேண்டா எண்ணத்தை தோழா - என்றும்
எண்ணிடு உன் கொள்கைக் கேற்றதை தோழா!!

kannu super ma  :) :) :)
Title: Re: விதி உந்தன் அடியில் தோழா!
Post by: Tamil NenjaN on June 03, 2012, 04:20:08 PM
சூப்பர் கவிதை கண்மணி.. அதிலும் இந்தக்காலத்தில் பலருக்கு எழுதவே சிரமமாக இருக்கும் மரபுக்கவிதையாகவும் நாலடிக்
கவிதையாகவும் கவிதை வடித்திருப்பதைப் பார்க்கும்போது நீங்கள் ஒரு பெருங்கவிஞர் என்றே தோன்றுகின்றது. உங்களைப்
போன்றவர்கள் இணைந்திருக்கும் நண்பர்கள் சாட் குழுவில் நானும் இணையக் கிடைத்தமை என் பாக்கியமே.. மனமார்ந்த
வாழ்த்துக்கள்  அருமைத் தோழி..
Title: Re: விதி உந்தன் அடியில் தோழா!
Post by: Anu on June 04, 2012, 08:22:28 AM

முடியும் முடியும் என்றிரு தோழா - எதுவும்
முடியும் விடாதே முயன்றால் தோழா
விடியும் விடியும் ஓர்நாள் விடியும் - தோழா
விழவிழ எழுந்தால் உன்னால் முடியும்!

ஒன்றே நினைவு அது வென்றிடும் கனவு
என்றே இருந்திடு அதில் வெறியாய் இருந்திடு
கொன்றிடு வேண்டா எண்ணத்தை தோழா - என்றும்
எண்ணிடு உன் கொள்கைக் கேற்றதை தோழா!!

written by sme one
kanmani tnks for sharing.
super kavithai ah suttu irukinga..
all lines superb.