FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 02, 2012, 11:20:06 AM

Title: அடடா ! அதிசயம் அறிந்தேன் !
Post by: aasaiajiith on June 02, 2012, 11:20:06 AM
எல்லாரும் சந்தைக்கு போனாங்களாம்
நரியும் சந்தைக்கு போச்சாம் "  இதன்
அடிப்படையில் தான் நானும்
என் புனை பெயரை "ஆசை அஜீத் "
தேர்வு செய்திருந்தேன் மன்றத்திற்கென
என் புனை பெயரில் இத்தனை வனப்பா?
வனப்பின் இணைப்பாய் இத்தனை பொலிவா?
பொலிவின் பிணைப்பில் இத்தனை தெளிவா?
தெளிவின் விளிம்பில் இதனை இனிப்பா ??
உச்சரித்து உச்சரித்து இதழகளுக்கு
தேன் பூசி கொண்டேன் இரவு  முழுதும்.
இவை அத்தனையும் நான் உணர்ந்தேன்
நேற்று அறிவிப்பாய் எனக்கு வந்த
ஒரு தனி தகவலில் ....