FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on June 01, 2012, 11:40:19 AM

Title: வாழ்க்கையெனும் ஓடம் வழங்குகின்ற பாடம்
Post by: Anu on June 01, 2012, 11:40:19 AM
நம்மை
இழுத்துச் செல்லும் ஓட்டுனர்.....
நம் வண்டியில்
நாம் மட்டுமே பயணி....
துயரமோ..இன்பமோ.....
எதுவாகினும்.....
ஓட்டுனர் நிற்பதில்லை ...
போரிட்டு எதிர்ப்பவர்கள்
கூடவே பயணிப்பர்.....
முடியாதவர் பின்னால் ஓடுவர் ,
விட்டதை எடுத்தும் ,
விடுபட்டதை பொறுக்கிக் கொண்டும்......
பெரும்பாலோனோர் அப்படித்தான்.....
இலக்கு தெரியாமலே பயணம்
தொடரும்.....
ஓட்டுனருக்கு அது வேலையில்லை....
நம்மை கூட்டிச்செல்லுவது
அவர் கடமை......
வாழ்க்கைப் பயணத்தில சாதித்தவர்
மட்டுமே பயணிப்பர்..இறந்தாலும்.!!!!!
பின்னால் வருபவர்
முந்தினால் கூட.....
பயணத்தில் அவர்கள் பெயர்
உச்சரிக்கும் வரை.....பயணம் தொடரும்.....
ஆம்...சாதித்தவர்களை
சரித்திரம் படைத்திட்டோரை
இப்பவும்
நினைவு கொள்கிறோமே.....
ஆக அவர்கள் பயணம்
தொடர்வது உண்மைதானே...
பயணத்தில் நொடிகளே
சக்கரம்....
நிமிடங்கள் மூக்கணாங்கயிறு...
ஓட்டுனர் காலம்....
வளைவோ நெளிவோ இல்லை ....
நேர்கோடுதான் பாதை .....
யாருக்காகவும்
மூக்கனாங்கயிரை மட்டும் இழுப்பதேயில்லை.....!!!!
பின்னால் வருவோரையும்,
இன்னும் வருவோரையும்
நம் பெயர்
உச்சரிக்கும் வரை
தொடரவைப்போமா......
இல்லை காலபெட்டியில்
பெயரே இல்லாமல்
நம் பயணம் தொடருமா......!!!!
Title: Re: வாழ்க்கையெனும் ஓடம் வழங்குகின்ற பாடம்
Post by: !! AnbaY !! on June 01, 2012, 11:44:30 AM
akka super....
Title: Re: வாழ்க்கையெனும் ஓடம் வழங்குகின்ற பாடம்
Post by: ஸ்ருதி on June 03, 2012, 10:09:06 AM
பின்னால் வருவோரையும்,
இன்னும் வருவோரையும்
நம் பெயர்
உச்சரிக்கும் வரை
தொடரவைப்போமா......
இல்லை காலபெட்டியில்
பெயரே இல்லாமல்
நம் பயணம் தொடருமா....

நம் பயணம் தொடருமா.... ;) ;) ;)
Title: Re: வாழ்க்கையெனும் ஓடம் வழங்குகின்ற பாடம்
Post by: Anu on June 04, 2012, 08:33:02 AM
பின்னால் வருவோரையும்,
இன்னும் வருவோரையும்
நம் பெயர்
உச்சரிக்கும் வரை
தொடரவைப்போமா......
இல்லை காலபெட்டியில்
பெயரே இல்லாமல்
நம் பயணம் தொடருமா....

நம் பயணம் தொடருமா.... ;) ;) ;)
kelvi kettute irundaa eppadi thodarum cuty  :-*
muyarchi udaiyaar igaizchi adaiyaar :)