FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on July 31, 2011, 08:12:09 PM

Title: ஒற்றைச் சிறகு
Post by: Dharshini on July 31, 2011, 08:12:09 PM
சுதந்திர இளைஞனே!
சூரியனே!
உன்னை
சுழல்காற்று சூழ்ந்தாலும்
சூழ்ச்சிகள் சுட்டாலும்
சுடர் ஒளிக்கதிராய் நீ..
சூட்சுமம் கொல்!
சுதந்திரம் வெல்!
செப்பனிட்ட பாதையிலே
சுயமாய் முன் செல்!
சிறகுகள் வலிப்பதாய் நீ
சிந்தனை கொண்டால்
உன் உயரிய கனவு
சீக்கிரத்தில் சிதையும்
சதிகளால் வதையும்!
சந்ததி பார்க்காத..
சரித்திரம் படைக்காத..
மனம் சஞ்சலத்தில் உழலும்!
ஒற்றைச் சிறகோடு நீ
உழல்வதாய் போனாலும்
மெழுகாய் உருகாதே
உறுதியிழந்து மருகாதே!
அறிவு தெளிந்து
உன் ஆற்றல் அறிந்து
உறுதி கொண்டு
நீ ஓயாது உழைத்தால்
வேர்வை விளைத்தால்
உயரும் வேளை வரும்
உன்னத வெற்றி நிச்சயம் பூக்கும்!
Title: Re: ஒற்றைச் சிறகு
Post by: Global Angel on July 31, 2011, 08:35:00 PM
muyarchi theruvinai akaum .. nice ;)