FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on June 01, 2012, 11:13:13 AM

Title: உன் நினைவுகள்
Post by: !! AnbaY !! on June 01, 2012, 11:13:13 AM
மீண்டுமொருமுறை
உன்னை
நினைவுப் படுத்தாதேயென்று
எச்சரிக்கும் கணங்களிலும்
உள்நெஞ்சுக்குள்
உதித்தெழுகிறது
உன்முகம்...!

உறக்கம் வராத
நள்ளிரவு நேரமெங்கும்
உன்னை மறக்க துடித்தும்
என் இதயம் வழியே
நினைவை உமிழ்ந்து
உதடுகளும் உச்சரிக்கிறது
உன் பெயரை...!

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...