FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on June 01, 2012, 11:08:26 AM

Title: கொல்லாதே..!
Post by: !! AnbaY !! on June 01, 2012, 11:08:26 AM
நான் பிறந்த பிறப்பின் பயனை
முதன்முதலில் உனைச் சந்தித்த
போதுதான் தெரிந்தது..!
அழகென்பது முகத்தில் இல்லை
அகத்தில்தான் இருக்கிறது என்பதே
உன்னுடன் பழகிய போதுதான் தெரிந்தது..!
பிரிவென்பது கொடும் நோயென்று
எனை விட்டு நீ பிரிந்த போதுதான் தெரிந்தது..!
ஆதலால் அன்பே…
எனை விட்டுச் செல்லாதே…
பிரிந்து சென்றெனைக் கொல்லாதே..!