FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on June 01, 2012, 11:05:23 AM
-
ஓர் சந்தோசப் பூங்காவை
என் நெஞ்சோடு நான் வளர்க்க
அதில் உன் பிரிவு தீயை மூட்டி
எனை விட்டு விலகி சென்றுவிட்டாய்
நம் உண்மைகள் எல்லாம்
உன்னால் இல்லை என்று ஆனபோது
வார்த்தை தீர்ந்த ஓர் ஊமைபோல்
ஊனமாகி உடைந்து போனேன்
அழுதழுது களைத்து விட்டேன்
அழுவதற்கு இனி கண்ணீருமில்லை
இழந்து விட்டேன் எல்லாம்
இனி இழப்பதற்கு என்று ஏதுமில்லை!
நான் என்பதே
என்னுடன் நீயிருக்கும் வரைதான்
இனி நீ இல்லை என்றானபோது
நான் மட்டும் எதற்காக…?