FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on July 31, 2011, 08:11:03 PM

Title: கண்டேன்...!
Post by: Dharshini on July 31, 2011, 08:11:03 PM
அதிகாலை
சூரியன் உறங்கி
சோம்பலை முறித்து
வானத்தின் ஜன்னலில்
எட்டி பார்க்கும் நேரம்
சூரியனை எழுப்புவதாக
நினைத்து சேவல் கனவுகளை கலைத்தது
ஆலமரத்தில் பறவைகளின் சத்தம்
அலாரம் அடித்ததில் கரைந்துபோனது
கதவை திறந்தேன்
காலைத் தென்றல் வீச
வாலை ஆட்டும் நாய் வாசலில்
எப்பொழுதும் லாவகமாய்
நியூஸ் பேப்பர் பந்து வீசி
வாசல்கேட்டை விக்கெட் எடுப்பவன்
பேப்பரை கையில் திணித்து
குட்மார்னிங் சொன்னான்
 
அலுவலகம் கிளம்பினேன்
மாடி வீட்டு மாமிகள் வீசும்
குப்பை குளியல் இல்லை
தெருவெங்கும்
கைபேசி அலராத
வைப்ரேஷன் அமைதி
துலக்கி வைத்த வெள்ளி
குத்துவிளக்காய் வீதிகள்
டீ கடையின் பெஞ்ச்
பிணம் தூக்கியாய் மாறின
பாலிதீன் குப்பைகள் காணவில்லை
பாதாள சாக்கடை
தூர்வார அவசியமில்லை
மீண்டும் மஞ்சள் பைகள்
பஸ் நிறுத்தம்
எச்சில் படாத தூண்
நிறுத்தம் தாண்டா பேருந்து
சில்லறை கேட்டும்
சத்தம்போடா நடத்துனர்
செல்பேசி பேசாமல்
ஸ்கூல் வேனை முந்தாமல்
ஆம்புலன்சுக்கு வழிவிட்டு
சீராக ஓட்டும் ஓட்டுனர்
ஹெல்மெட் அணிந்த
இரு சக்கர சிறுத்தை ஓட்டிகள்
சீட்பெல்ட் அணிந்த
நவீன தேரோட்டி கண்ணன்கள்
சம்திங் வாங்காத டிராபிக் காவலர்கள்
சாலை விதிகளை மீறா பாதசாரிகள்
வியாபாரிகள் இல்லாத பாதைஓரம்
சாலை ஓரங்கள் சோலைவனமாய்
எப்பொழும் மூடா ரேஷன் கடைகள்
தப்பேதும் நடக்காத அளவுகளில்
தரமான பொருட்கள்
பிறப்பு சான்றிதழ் இறப்பு சான்றிதழ்
மருத்துவமனையிலும் இடுகாட்டிலும்
இலவசமாய் கொடுக்க கண்டேன்
வேலைக்கு பதிவு செய்ய ஆளில்லாததால் 
வேறு துறைக்கு மாறும் அலுவலர்கள்
விசா வாங்க ஆளில்லாத அமெரிக்க
தூதரகம் - மூடும் யோசனை
பரிசீலனையில்
மனித கழிவுகளை இயந்திரம் அள்ள
இலவசம் கொடுக்காத அரசாங்கம்
ஊழல் செய்யாத அரசியல்வாதிகள்
லஞ்சம் வாங்காத அரசு அலுவலர்கள்
கட்ட பஞ்சாயத்து நடக்காத காவல்நிலையம் 
டொனேஷன் வாங்காத கல்விநிலையங்கள்
காப்பிடேஷன் வாங்காத கல்லூரிகள்
இந்தியாவா இது அதிசயப்பட்டேன்
என்னை கிள்ளி பார்த்தேன்
அலாரம் அடித்தது துள்ளி எழுந்தேன்
இதுவரை கண்டது கனவா - இறைவா
இது நனவாக வேண்டிக்கொண்டேன்.
Title: Re: கண்டேன்...!
Post by: Global Angel on July 31, 2011, 08:34:27 PM
>:( >:( >:( :o :o :o overa kanavu kandu usera vaangura nee