FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on May 31, 2012, 03:26:47 PM
-
விழிகளில் நீயும் கண்ணீர் கொண்டால்..
விடைகள் கிடைத்திடுமோ?
தனிமையில் நீயும் தலை கவிழ்த்திருந்தால்..
தடைகளும் விலகிடுமோ?
நடையினில் நீயும் தளர்ந்தே போனால்..
சுமைகளும் குறைந்திடுமோ?
பிரிந்து இருந்தால் அன்பின் ஆழம் புரியுமாம்
இப்பொழுது நீயும் புரிந்து இருப்பாய்
உனக்கே தெரியாமல் நான் உன்னை
ஆட்சி செய்து இருக்கிறேன் என்று
இனி நமக்குள் பிரிவென்பது
வராமல் அந்த வார்த்தையை
தமிழ் அகராதியில் இருந்து
நீக்கி விடுவோம்
-
அபாரமான யோசனை ! அற்புதமான யோசனை !
ஒரு வார்த்தையினை பொது அகராதியில்
இருந்து நீக்குவது எத்தனை சாத்தியமோ ??
சத்தியமாய் எனக்கு தெரியாது .இருந்தும்,
குறைந்தது என் அகராதியில் இருந்து
பிரிவு எனும் ஒரு வார்த்தையை மட்டுமாவது
தூக்கிலிட்டு தூக்கிவிடுவது என தீர்மானித்தே விட்டேன் .
தூயவளே உன் யோசனைக்கு பின் .
-
பிரிந்து இருந்தால் அன்பின் ஆழம் புரியுமாம்
unmaiyana varigal dharshini...
இப்பொழுது நீயும் புரிந்து இருப்பாய்
உனக்கே தெரியாமல் நான் உன்னை
ஆட்சி செய்து இருக்கிறேன் என்று
naam ariyamaala nam manam anbirku adimaiyaagividum...
nalla varigal...
-
பிரிந்து இருந்தால் அன்பின் ஆழம் புரியுமாம்
இப்பொழுது நீயும் புரிந்து இருப்பாய்
உனக்கே தெரியாமல் நான் உன்னை
ஆட்சி செய்து இருக்கிறேன் என்று
romba nalla iruku kavidhai dharshu ma .
nidharshana maana unmai ah azhagaa solli irukinga..