FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on May 31, 2012, 10:52:18 AM

Title: துறவரம்
Post by: thamilan on May 31, 2012, 10:52:18 AM
மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை
இவை மூன்றையும் துறப்பதே
துறவரம்

இன்றோ
இவை மூன்றையும் அனுபவிக்க‌
காவியுடை அணிவதே
துறவரம்

துறவரம் என்பது
ஒரு போர்
காவி உடை போர்க்கொடி
உல‌க‌ இன்ப‌ங்க‌ளுக்கு எதிராக‌
போரிடும் போராளிக‌ள் அவ‌ர்க‌ள்

ஆனால் இன்றைய‌ துற‌விக‌ள்?.......

ப‌ல்லில் உண்டாகும் க‌ரையை
காவிக்க‌றை என்பார்க‌ள்
இன்றைய‌ துற‌வ‌ர‌ம்
வெள்ளை நிற‌ப் ப‌ற்க‌ளில்
உண்டான‌ காவிக்க‌றையைப் போன்றே
அசுத்த‌ம் ஆகிவிட்ட‌து

அன்றைய‌ துற‌விக‌ள்
எல்லாம் துற‌ந்து
காடுக‌ளில் ம‌லைக‌ளில் வாழ்ந்தார்க‌ள்
இன்றைய‌ துற‌விக‌ள்
ஏசி ப‌ங்க‌ளாக்க‌ளில் வாழ்கிறார்க‌ள்

பெரும் செல்வ‌ங்க‌ளை சும‌ந்து
திருவோடு சும‌ந்து
பிச்சை எடுத்து வாழ்ந்தார்க‌ள்
அன்றைய‌ துற‌விக‌ள்

திருவோடு ஏந்திய‌ துற‌விக‌ள்
கால‌ம் போய்
'திரு'வோடு வாழ‌
துற‌விக‌ளான‌வ‌ர்க‌ளே அதிக‌ம்
Title: Re: துறவரம்
Post by: ஸ்ருதி on June 03, 2012, 10:15:03 AM
திருவோடு ஏந்திய‌ துற‌விக‌ள்
கால‌ம் போய்
'திரு'வோடு வாழ‌
துற‌விக‌ளான‌வ‌ர்க‌ளே அதிக‌ம்


NIjamana ondru
Title: Re: துறவரம்
Post by: Anu on June 04, 2012, 08:27:45 AM
மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை
இவை மூன்றையும் துறப்பதே
துறவரம்

இன்றோ
இவை மூன்றையும் அனுபவிக்க‌
காவியுடை அணிவதே
துறவரம்

nalla oppittu irukinga andha kaalathu thuravaiyum indha kaalathu thuravaiyum.
very nice thamilan. romba naal kalichi unga kavithai parkiren. nandri nandri..