FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on May 30, 2012, 12:36:06 AM

Title: ***பார்வை,பாதம்,கை,வாசிப்பு ***
Post by: vimal on May 30, 2012, 12:36:06 AM
உன் பார்வை பட்டால் முள் கூட
முல்லை மலராகும்!

உன் பாதம் பட்டால் பல்லக்கு கூட
கீழிறங்கும் உனை ஏற்ற !

உன் கை பட்டால் பாறை கூட
நீரை வார்க்கும்!

உன் வாசிப்பால் வரிகள் கூட
வரிசையில் நிற்கும் கவிதையாக !

பெண்ணே எப்பொழுது
பார்வையை என் பக்கம் திருப்பி
பாதத்தால் அடிவைத்து எனை நோக்கி
கைகளால் எனை வருடி
வார்த்தை வாசிப்பால் சொல்லப்போகிறாய்
அந்த மூன்றெழுத்தை!

மூன்றெழுத்தை கேட்டபின்
முல்லை மலர் தூவி-நாம்
பல்லக்கில் ஏறி -காதல்
எனும் அமுத நீரை உண்டு
வரிசையில் நிற்போம்
கவிதையாக அல்ல
காதலர்களாக!!!
 
Title: Re: ***பார்வை,பாதம்,கை,வாசிப்பு ***
Post by: suthar on May 30, 2012, 08:06:14 AM
nice vimal
ennama feelings koturaaan en thambi.. kalakudaa...
Title: Re: ***பார்வை,பாதம்,கை,வாசிப்பு ***
Post by: vimal on May 30, 2012, 10:24:30 AM
anna nanrigal aayiram en kavithaiku reply enum uyir koduththamaikku