FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on May 29, 2012, 07:49:14 PM

Title: மாறாதது மறையாதது
Post by: vimal on May 29, 2012, 07:49:14 PM
அவள் !

உணர்வுகளை
எனக்குள் புகுத்தி
என் உள்ளம் எனும்
உறைவிடத்தை
உறையச் செய்தவள்

நினைவுகளை
எனக்குள் விடுத்து
என் சிந்தனைகளை 
சிதைத்தவள்

என் உள்ளம் உறைந்தாலும்
சிந்தனை சிதைந்தாலும்

காற்றோடு கலந்துவிட்ட பூக்களின்
வாசம் போல - உன்னோடு
கலந்துவிட்ட என் பாசம்
என்றும் "மாறாதது மறையாதது"
Title: Re: மாறாதது மறையாதது
Post by: aasaiajiith on May 29, 2012, 07:52:51 PM
ஆத்மார்த்தமான வரிகள் !

வாழ்த்துக்கள் !!
Title: Re: மாறாதது மறையாதது
Post by: vimal on May 31, 2012, 02:23:48 AM
என் அன்பை உன்னிடம் வெளிப்படுத்த
காத்திருக்கிறேன் இறவு,பகலாய்
நீ ! வருவாய் என!

என் காதலை உன்னிடம் வெளிப்படுத்த
நீ போகும் வழியெல்லாம் என்
பாத சுவடுகள் உன் பின்னால்!

என் பாத சுவடுகள் தேய்ந்தபோதும்
என் காதலை நீ ஏற்கவில்லை!

எனக்கோ அவள் மீது கோபம்
கேட்டுவிட்டேன் அவளிடம்
உனக்கு இதயம் இல்லையா !

இருக்கிறது என்றால் பெற்றோர்களை
காட்டி !- இவர்கள் என் மீது கொண்ட
காதல் மாறாதது மறையாதது !