FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on May 29, 2012, 07:25:11 PM
-
யாரைத் தேடுகின்றன
கார்மேகங்கள்.
மழையை பிரசவிக்க
குளிர் தென்றலையா?
இருளை பிரசவிக்க
மேற்கு வானையா?
எப்படியாயினும்
தேடல் சுகமானதுதான்.
தனக்கு உற்றவரை
தேடும் போது.
-
உவமானங்கள் அருமை விமல் !
இன்னும் கொஞ்சம் எளிமையா சொல்லலாமே !
-
மனிதனின் வாழ்வில் எத்தனை
தேடல்கள்
தேடல் இல்ல வாழ்க்கை நீர்
ஓடுகின்ற ஓடம் போல
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு
பின்னால் பரிசளிக்கிறது தேடல்
தேடலை நோக்கி செல் நிச்சயம்
வெற்றி உனக்கு
பிறர் தேடலுக்கு வெற்றியாய்
உனது வாழ்க்கை வழிகாட்டி!!!