FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on May 29, 2012, 05:03:48 PM

Title: தக்காளி ப்ரெட் டோஸ்ட்
Post by: kanmani on May 29, 2012, 05:03:48 PM
தக்காளி ப்ரெட் டோஸ்ட்

    ப்ரெட் - 4 ஸ்லைஸ்
    தக்காளி - 4
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    வெண்ணெய்(ஆப்ஷனல்)
    எண்ணெய்

தக்காளி, மிளகாய்தூள், உப்பு மூன்றையும் மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.

அரைத்த விழுதினை பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பிரட்டின் 2 புறமும் வெண்ணெய் தடவி அதன் மீது தக்காளி கலவையை சீராக பரப்பவும்

தோசைக்கல்லை சூடாக்கி தக்காளி கலவை தடவிய பிரட்டை லேசாக எண்ணெய் விட்டு டோஸ்ட் செய்யவும்.

சுவையான தக்காளி ப்ரெட் டோஸ்ட் ரெடி.