FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on May 29, 2012, 05:01:07 PM

Title: அடடா ! இது என்ன அதிசயம் ??
Post by: aasaiajiith on May 29, 2012, 05:01:07 PM
அறுபத்தி ஒன்பது அகவையே ஆனாலும்
அழகில்,அறிவில்,அங்க அவயங்களில்
குரலினில் , பேசும் பேச்சினில்
வெளிவிடும் மூச்சினில்
மயக்கும் மனதினில்
இனிக்கும் நினைவினில்
இன்னமும் அப்படியே
பத்தொன்பது வயதை விட்டு
படி தாண்ட மாட்டாளோ ??

அடடா ! இது என்ன அதிசயம் ??

பருவ சக்கரம் பழுதடைந்து விட்டதா ???
புரியவில்லை ???
இல்லை,ஒருவேளை
பாவி அவன் ,கால பகவனும்
அவள் முன் கவிந்துவிட்டானா ??
தலை குப்பிற கவிழ்ந்து கிடக்கும்
இந்த கபோதியை போல் ??
தெரியவில்லை ??......
Title: Re: அடடா ! இது என்ன அதிசயம் ??
Post by: supernatural on May 30, 2012, 07:31:44 PM
அறுபத்தி ஒன்பது அகவையே ஆனாலும்
அழகில்,அறிவில்,அங்க அவயங்களில்
குரலினில் , பேசும் பேச்சினில்
வெளிவிடும் மூச்சினில்
மயக்கும் மனதினில்
இனிக்கும் நினைவினில்
இன்னமும் அப்படியே
பத்தொன்பது வயதை விட்டு
படி தாண்ட மாட்டாளோ ??


enna thaan sollirukeenga??? ;) ;) :P
Title: Re: அடடா ! இது என்ன அதிசயம் ??
Post by: aasaiajiith on May 30, 2012, 07:39:04 PM
வயதேற்றம்  என்ற
ஒன்றே  நேராதா ?  அவளுக்கு  ??

என்ற ஒரு ஆதங்கம் தான் .
அவ்வாதங்கத்தின் வெளிப்ப்பாடே அவ்வரிகள் !