FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on May 29, 2012, 01:58:35 PM

Title: என் உயிரை விட மேலானது.!!!!
Post by: !! AnbaY !! on May 29, 2012, 01:58:35 PM
என் உயிரின் ஒவ்வொரு துளியில்
கண்ணீராய் வாழும் என் உயிரே
 
ஏன் என்னை வெறுக்குறாய்
நான் மௌனமாய் திரும்பி அழுகிறேன்
எனக்கு வேறொன்றும் செய்வதற்கில்லை
 
என்னை நீ எப்படி வேண்டுமானாலும்
வெறுத்துக்கொள்
ஆனால் என் இதயம் தொடும்
தூரத்திலேயே இரு
 
எனக்குள் உன் அன்பை
ஆழமாக புதைத்தவள் நீதானே
 
நெஞ்சில் எனக்கான அத்தனை
அன்பையும் வைத்துக்கொண்டு
வெறுப்பதாய் ஏன் உதடுகளால் நடிக்கிறாய்
 
உன் மீதான என் அன்பு என்பது
என் உயிரை விட மேலானது
என்பது உனக்கு தெரியாதா?