FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on May 29, 2012, 01:57:36 PM

Title: நீ என்னை மறக்கும் தோறும் உன் நினைவுகள் என் நெஞ்சில் உயிர்த்தெழுந்து கொண்டேயிருக்கும்
Post by: !! AnbaY !! on May 29, 2012, 01:57:36 PM
என் உள்ளத்தின்
காயங்களை எல்லாம்
உன்னிடம்
சொல்லத் துடிக்கிறேன்
 
நான் காத்திருந்தாலும்
கவனிக்காததுபோல்
என்னை காயப்படுத்திச்
செல்கிறாய்!
 
நீ என்னை
வெறுத்து போகும்
ஒவ்வொரு கணமும்
கடலாய் கண்ணீர் வடிக்கிறேன்!
 
நீ என்னை தவிர்ப்பதை
உணர்ந்து
உயிர் தவித்து போகிறேன்
 
நாம் ஒன்றாகப் பயணித்த
நம் பாதச் சுவடுகள்
இன்றும் என் மனதில்
ஒன்றாகவே இருக்கின்றன
 
நீ எனக்குள் இத்தனை
வலிகளை தந்தபோதும்
உன் நினைவுகள் எதையும்
நான் அழிக்கவில்லை
 
என்னுயிரை நானே
எப்படி அழிக்க முடியும்
 
நீ என்னை மறக்கும் தோறும்
உன் நினைவுகள் என் நெஞ்சில்
உயிர்த்தெழுந்து கொண்டேயிருக்கும்