FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on May 29, 2012, 01:40:40 PM

Title: உன் நினைவுகள் என்னில்..!!!
Post by: !! AnbaY !! on May 29, 2012, 01:40:40 PM
உன்னை பிரிந்தால்
உயிர் பிரியும் நிலையில்
நானிருப்பேன் என்று தெரிந்தும்
நீ பிரிந்து சென்று விட்டாய்
 
நாளை சரியாகிவிடும்
என்று எண்ணியே தினமும்
என் இரவை சந்திக்கிறேன்
 
எல்லாம் முடிந்துவிட்டது என்பதை
ஏன் தான் ஏற்க மறுக்கிறது
என் அறியா மனம்
 
எவ்வளவோ முயன்றும்
தூக்கம் தொலைகிறேன்
உன் நினைவுகளில்
 
நான் பேசிய வார்த்தைகள்
உன்னில்
அழிந்து போகலாம்
 
நாம் பழகிய நாட்கள்
உன்னில்
இறந்து போகலாம்
 
உன் சத்தியங்கள்
உன்னில்
மறைந்து போகலாம்
 
இந்த உலகமே
உன்னைப் போல்
உருமாறிப் போனாலும்
 
உன் நினைவுகள் என்னில்
என்றும் உயிர் வாழ்ந்து
கொண்டேயிருக்கும்