FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on May 29, 2012, 01:38:33 PM

Title: உனக்கு நினைவிருக்கிறதா?
Post by: !! AnbaY !! on May 29, 2012, 01:38:33 PM
இன்று நீ எனக்கு
விடை கொடுத்திருக்கலாம்
என் நினைவுகளுக்கு
தடையும் விதித்திருக்கலாம்
 
உனக்கு நினைவிருக்கிறதா?
நீ எனக்கு
தினமும் எழுதிய கடிதங்களை
 
காலம் தவறாத உன்
தொலைபேசி அழைப்புகளை
 
உன்னை சந்திக்கும் முன்
என்னுடன் இருந்த தோழமையை
நீ கோபம் கொண்டதை
 
உன் அன்பு என்னில் வலுப்பட
காரணமே இல்லாமல்
என்னுடனான உன் சண்டைகளை
 
உனக்காக நான் இழந்த
என் இரவுகளை
 
உனக்காக நான் தொலைத்த
என் உறவுகளை
 
நாம் ஒன்றாய் சந்தித்த
அந்த இனிய தருணங்களை
எளிதாக நீ மறந்ததுதான்
இன்னும் என்னால்
நம்ப முடியவில்லை
 
அமைதியாக இருந்த
என் மனதை உன் வரவால்
சலனப்படுதிவிட்டாய்
 
தென்றலாக
இருந்த என்னை
உன் பிரிவு புயலால்
தத்தளிக்க வைத்து விட்டாய்
 
அன்று என்னை பிடித்ததற்கும்
இன்று என்னை பிரிந்ததற்கும்
உன்னால் காரணம்
கண்டுபிடித்து சொல்ல முடிகிறது
 
நீ என்னை
மறந்ததை உணர்ந்து
என்னையே மறந்து போகிறேன்
 
நான் தவறாய் எழுதிய
என் வாழ்க்கைக் கணக்கில்
விடை மட்டும்
என்ன சரியாக வருமா ?