FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on May 29, 2012, 01:36:52 PM

Title: நான் இருப்பேன் இங்கே..............
Post by: !! AnbaY !! on May 29, 2012, 01:36:52 PM
உனக்கும் எனக்கும் இருப்பது
இங்கே எவருக்கும் புரியாது
எதை நான் சொல்லி
எனை நான் காட்ட
 
எட்டாத தொலைவோடு நீயாம்
தரைமீது இலையாக நானாம்
யுகம் கடந்தாலும் முடியாதாம்
ஆராய்ச்சி முடிவென்று
இதை தான் தந்தார்கள்
பேதைகள் இவர்கள்
 
புன்னகைத்து கொண்டவன் நான்
பதில் சொல்ல துணிந்தேன்
 
“ நீ வந்த திசை பார்த்து
நான் விழி திறந்தேன்
நீ போகும் வழி தானே
நான் போ...கும் வழி என்பேன்
நீ மறையும் இடம் பார்த்தே
நான் மடிந்து போவேன் ”
 
அந்த ஒரு நாள் உன்னோடு
எனக்கு போதும் - அது
மறு நாள் நீ வரும் வரை
மொட்டுக்களாய் மீண்டும்
நான் இருப்பேன் இங்கே