FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Anu on May 29, 2012, 08:52:20 AM
-
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை.
மேலும் தண்ணீர் பல மருத்துவ குணங்களை தனகத்தே கொண்டுள்ளது. தண்ணீரில் இருக்கும் நற்குணமே நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை தரும் ...
தண்ணீரை மருந்தாக ( வாட்டர் தெரஃபி )பயன்படுத்தும் முறை.
தினமும் காலையில் தூங்கி எழுந்தவுடன் வெறும் வயிற்றில், பல் கூட விளக்காமல் சுமார் 1.50 லிட்டர் தண்ணீர் அல்லது 6 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும். முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் ஆனால் போக போக சரியாகிவிடும்,
இந்த முறையை செய்யும் முன்பும், செய்த பின்பும் ஒரு மணி நேரத்திற்கு எதையும் குடிக்கவோ மற்றும் சாப்பிடவோ கூடாது. முன்தின இரவு எந்த வகையான போதை பொருல்களையும் பயன்படுத்தி இருக்க கூடாது
முதலில் 1.50 லிட்டர் தண்ணீர் அருந்த முடியாதவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக, அதே நேரத்தில் சிறிய இடைவெளி விட்டும் குடிக்கலாம்.
தண்ணீர் மருத்துவத்தின் ( வாட்டர் தெரஃபி ) சில நன்மைகள்;
இதை சரியாக நாம் பின்பற்றினால்
1,முகம் பொழிவுபெரும்
2, உடலில் கொழுப்புகள் நீங்கி உடலின் எடை குறையும்
3, உடல் புத்துணர்வு பெரும்
4, ஜீரணசக்தி அதிகரிக்கும்
5, நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்
6, இரத்த அழுத்தம் நோய் நீங்கும்
7, சர்க்கரை வியாதி சரியாகும் மேலும் பல நன்மைகள் இதில் உண்டு