FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on May 29, 2012, 12:42:30 AM
-
பொன் அந்தி பொழுதில்.....
ஜன்னல் அருகே நான் இருக்க..
மடிக்கணினி மடியில் சாய்ந்து இருக்க...
தென்றல் வந்து வருடி செல்ல...
சில வரிகள் கிறுக்க எண்ணம் தோன்ற...
கவிதைக்கு கரு தேடி மனம் அலைய...
நட்சத்திர கூட்டம் அது..
கண்சிமிட்டி எனை அழைக்க ...
அரைமதியாய் நிலவுமகள்...
வானம் அதை அலங்கரிக்க...
எழில் பொங்கும் இனிமையும் ...
பிறை அவள் அழகும்...
இரவு அதன் இதமும்...
மனதில் பதமாய் அமர்ந்து...
கவிதைக்கு கருவாய் ...
வந்த வரிகள் இவையே...
என்னவன் அவனுடன்...
நிலவிற்கு ஒரு சிறு பயணம் சென்று..
பூமியில் வெவ்வேறு திசையில் இருந்து ...
நிலவை ரசித்த மனங்கள்..
கொஞ்சம் நிலவில் ஒரே திசையில் அமர்ந்து...
பூமியை ரசித்தால் என்ன??
மண்ணில் கலக்காத காதல்...
அது விண்ணில் கலக்கட்டுமே...!!!!
-
விண்ணில் கலந்த காதல் மண்ணிலும் கலக்கட்டுமே
ஏனெனில் நாம் இறந்த பின்பு நம் உடல் இம்மன்னில்தான்
மறையப்போகிறது எரித்தாலும் சரி புதைத்தாலும் சரி !!!
super"natural" ungal peyarai polave ungal kavithayum naturalagave iruku
-
nice lines natural...........
-
பாராட்டுகளுக்கு நன்றிகள் ....!!!! :) :)
-
நன்றி
நன்றி
நன்றி
மூன்று நன்றி எதற்கு ??
கேள்வி எழுவது இயற்கை தான் இயற்கையே !
முதல் நன்றி ,
அழகழகான , அற்புதமான ,
அமைதியான அமர்களமாய்
அதிரடியான அகிம்சையாய்
அடி மனதை தொடும்படியான
பதிப்பினை அளித்ததற்கு .
இரண்டாம் நன்றி ,
அழகழகான , அற்புதமான ,
அமைதியான அமர்களமாய் ,
அதிரடியான அகிம்சையாய்
அடி மனதை தொடும்படியான
பதிப்பினையும் அளித்து
பதிப்பினில் எங்குமே பயன்படா
ஒரு வார்த்தையினை (ஆசை)
தலைப்பாய் கொடுத்து
அறிந்தோ அறியாமலோ
தெரிந்தோ தெரியாமலோ
புரிந்தோ புரியாமலோ
பதிப்பின் மதிப்போடு
என் மதிப்பையும் உயர்த்திவிட்டதற்கு .
மூன்றாம் நன்றி,
இப்போதைக்கு சொல்வதாய் இல்லை .
ஆனால் நிச்சயம் சொல்வேன் !
வாழ்த்துக்கள் ! தொடர்ந்து பதிக்கவும் !