FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: கார்க்கி on May 28, 2012, 08:52:36 PM

Title: பிரார்த்தனைகளின் நடுவில்..
Post by: கார்க்கி on May 28, 2012, 08:52:36 PM
பிரார்த்தனைகளின் நடுவில்..

ஓரக்கண்ணால் உன்னை பார்த்தபடி
அம்மனுக்கு அடிப்பிரதட்சனம் செய்து கொண்டிருந்தேன்.
நீயோ என்னை விழிப்பிரதட்சனம் செய்து கொண்டிருந்தாய்.
அந்த கணத்திலிருந்துதான் நான்
வரம் தரும் பக்தையாய் மாறிக்கொண்டிருந்தேன்.

 :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D

சாமிக்கு பூ தொடுத்துக்கொண்டிருந்தேன்.
திடீரென வந்து ரோஜாப்பூக்கள் நீட்டினாய்.
“இன்னிக்கு ரோஜாக்காப்பு இல்லையே?”.
ஒன்றும் பேசாமல் போய்விட்டாய்.
இன்னுமோர் முறை யாககுண்டத்து காசுகளை
“உனக்காகவே தேடிக்கொண்டுவந்தேன்”,என்கிறாய்.
“இத வச்சிருந்தா படிப்பு நல்லா வருமா?”,கேட்டேன்.
“உனக்கு எக்காலத்துலயும் அறிவு வராது”.
சொல்லிவிட்டுத் தலையில் அடித்துக்கொண்டாய்.
அந்த நொடி நான் காதலோதயம் அடைந்தேன்.

 :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D

அம்மா மண்டபத்தில் கிழக்குப்பக்க தூணருகே
தோள் சாய அனுமதி கேட்டாய்.
சந்நிதானத்து சாமி பேரெல்லாம்
சொன்னால்தான் சாத்தியமென்றேன்.
அதற்கென்ன என்றபடி
தொண்டையை செருமிக்கொண்டு
அமர்த்தலாக சொல்கிறாய்
திரும்ப திரும்ப என் பெயர்.
“சாமிக்குத்தம்” என வாய் பொத்தினால் ,
“சாமிக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா?”,கேட்கிறாய்
திருவிளையாடலையும்,மாம்பழத்தையும் சுட்டிக்காட்டி.
“சீ போ அழுகுணி” என்றேன்,
“ஆனாலும் அழகு நீ”,என்கிறாய்.
எனக்கப்போதே தெரியும்
 நீ அண்டபுளுகன்,
அடங்காத கவிஞனென்று.

 :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D

“யார்பேர்ல அர்ச்சன?”
“சாமி பேர்ல”,என்றாய்.
திரும்பிய அர்ச்சகரை திருப்பி நிறுத்தி
உன் பேரில் செய்யச் சொன்னேன்.
அப்போது ஒரு முறை முறைத்தாய்.
கோவில்விட்டு வெளியேறினதும்
நீ தரவிருந்த அர்ச்சனைக்காக
என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது!

 :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D
Title: Re: பிரார்த்தனைகளின் நடுவில்..
Post by: ஸ்ருதி on May 28, 2012, 09:06:38 PM
நீயோ என்னை விழிப்பிரதட்சனம் செய்து கொண்டிருந்தாய்.
அந்த கணத்திலிருந்துதான் நான்
வரம் தரும் பக்தையாய் மாறிக்கொண்டிருந்தேன்.


 ;) ;) ;)சூப்பர் வரிகள்
Title: Re: பிரார்த்தனைகளின் நடுவில்..
Post by: கார்க்கி on May 28, 2012, 09:26:08 PM
டி உனக்கான Special லைன்
Quote
இத வச்சிருந்தா படிப்பு நல்லா வருமா?”,கேட்டேன்.
“உனக்கு எக்காலத்துலயும் அறிவு வராது”.
[/color]

 ;D ;D ;D
Title: Re: பிரார்த்தனைகளின் நடுவில்..
Post by: ஸ்ருதி on May 28, 2012, 09:29:01 PM
டி உனக்கான Special லைன்
Quote
இத வச்சிருந்தா படிப்பு நல்லா வருமா?”,கேட்டேன்.
“உனக்கு எக்காலத்துலயும் அறிவு வராது”.
[/color]

 ;D ;D ;D

8 mark nee pesuriyaaaaaaaaaaa di :D:D:D
Title: Re: பிரார்த்தனைகளின் நடுவில்..
Post by: vimal on May 28, 2012, 09:34:06 PM
உன் வரிகளின் வலிமையை
வைத்து என்னை வளைத்து விட்டாய்
எனவேதான் எலிப்பொறியை தேடிச்செல்லும்
எலியை போல நானும் உன் கவிதையை நாடி !!!


kaarki neenga eludhura ella kavidhayum romba casuala iruku thodaravum
Title: Re: பிரார்த்தனைகளின் நடுவில்..
Post by: கார்க்கி on May 29, 2012, 12:58:10 AM
Quote
எனவேதான் எலிப்பொறியை தேடிச்செல்லும்
எலியை போல நானும் உன் கவிதையை நாடி !!!

என்ன விமல் உவமானம்லாம் பலமா இருக்கு  ;D

நன்றி நன்றி
Title: Re: பிரார்த்தனைகளின் நடுவில்..
Post by: vimal on May 29, 2012, 01:08:01 AM
tin2  ;D ;D apdiyavadhu unna santhosa paduthalamnuthan ;D ;D
Title: Re: பிரார்த்தனைகளின் நடுவில்..
Post by: suthar on May 29, 2012, 08:48:18 AM
Quote
நீ தரவிருந்த அர்ச்சனைக்காக
என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது!
nee tharavirukkum archanaikaaga..... nice lines gargy....