FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on May 28, 2012, 08:32:54 PM

Title: கவிக்குள் கவி
Post by: ஸ்ருதி on May 28, 2012, 08:32:54 PM
கண்ணோடு கண்வைத்து
காதல் மொழி பேசி
காலம் மறக்க ஆசை..
கனவில் உன் முகம்
காணும் பொழுதில்
கலையாத கனவாய்
காலம் முடியாமல்
கலையாது தொடர ஆசை
கவி பேசும் காதல்மொழி
கண்ணாலன் அறிந்து
கவியின் கவியில்
கலந்திட ஆசை..
காதல் இலக்கணம்
காதில் உரைக்க
காதல்கவியை பிழையில்லாமல்
காதலோடு கற்க ஆசை ..
காணும் இடமெல்லாம்
கண்ணாலன் உன்முகமாய்
கவிக்கு மட்டுமே தெரிய ஆசை..
கவியின் வரிகளில்
கவியாய் நீ வர
கவிக்குள் கவியாய் உன்னுள்
காலம் முழுதும்
காதலோடு வாழ ஆசை..
காத்திருக்கும் கண்களுக்கு
கண்ணாளனே
காதல் முகம்
காட்டிவிடு...
கண்கள் அயர்ந்த போது
கனவில் வந்து
காதல் செய்து
கலக்கம் தந்து
கண்ணீரோடு தவிக்கவிட்டு
காதல் நோயை தந்து
கண்மறைந்து
கவியை கலங்க வைக்காதே...
Title: Re: கவிக்குள் கவி
Post by: கார்க்கி on May 28, 2012, 08:47:51 PM
ஐ ஐ இது யாருக்கு டி?
Quote
கண்ணாலன் அறிந்து
கவியின் கவியில்
கலந்திட ஆசை..
ஆசை தோச அப்பள வடை  ;D ;D
Quote
கண்ணாலன் உன்முகமாய்
கவிக்கு மட்டுமே தெரிய ஆசை..
கவியின் வரிகளில்
கவியாய் நீ வர
கவிக்குள் கவியாய் உன்னுள்
காலம் முழுதும்
காதலோடு வாழ ஆசை..
கவிதாயினி கவிதாயினி கவிதாயினி (அபிராமி அபிராமி அந்த ஸ்டைல்  ;D ;D)
Quote
கண்கள் அயர்ந்த போது
கனவில் வந்து
காதல் செய்து
கலக்கம் தந்து
ஒரே குஜால்ஸ் தான் போ  ;) ;) ;D

Quote
காதல் நோயை தந்து
கண்மறைந்து
கவியை கலங்க வைக்காதே...
வாசன் ஐ கேர் - நாங்க இருக்கோம்  ;D ;D
Title: Re: கவிக்குள் கவி
Post by: suthar on May 28, 2012, 08:50:16 PM
nalla iruku shruthi.....
Title: Re: கவிக்குள் கவி
Post by: ஸ்ருதி on May 28, 2012, 08:52:58 PM
ஐ ஐ இது யாருக்கு டி?
Quote
கண்ணாலன் அறிந்து
கவியின் கவியில்
கலந்திட ஆசை..
ஆசை தோச அப்பள வடை  ;D ;D
Quote
கண்ணாலன் உன்முகமாய்
கவிக்கு மட்டுமே தெரிய ஆசை..
கவியின் வரிகளில்
கவியாய் நீ வர
கவிக்குள் கவியாய் உன்னுள்
காலம் முழுதும்
காதலோடு வாழ ஆசை..
கவிதாயினி கவிதாயினி கவிதாயினி (அபிராமி அபிராமி அந்த ஸ்டைல்  ;D ;D)
Quote
கண்கள் அயர்ந்த போது
கனவில் வந்து
காதல் செய்து
கலக்கம் தந்து
ஒரே குஜால்ஸ் தான் போ  ;) ;) ;D

Quote
காதல் நோயை தந்து
கண்மறைந்து
கவியை கலங்க வைக்காதே...
வாசன் ஐ கேர் - நாங்க இருக்கோம்  ;D ;D

அடியே நிம்மதியா கவிதை எழுத விடுறிய டி நீ  :D:D:D
Title: Re: கவிக்குள் கவி
Post by: ஸ்ருதி on May 28, 2012, 09:17:15 PM
nalla iruku shruthi.....

Nandrigal
Title: Re: கவிக்குள் கவி
Post by: vimal on May 28, 2012, 09:45:36 PM
காலை எழுந்து
காபி குடித்து என்
கண்ணை
கலங்கரையாக வைத்து
காத்துக் கிடக்கின்றேன்,
காண வழிமேல் விழி வைத்து உன்
கவிதைகளை !!!

shruthi miga nanru varigal anaithum thodarungal
Title: Re: கவிக்குள் கவி
Post by: ஸ்ருதி on June 03, 2012, 10:16:35 AM
Nandrigal vimal