FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vedhalam on July 30, 2011, 07:33:22 PM

Title: கவிதை
Post by: vedhalam on July 30, 2011, 07:33:22 PM
கடவுளின் அபிஷேகத்தை போல எண்ணற்ற அடுக்குகள் கொண்டு இருக்கிறது குழந்தையின் குளியலும்.!!!

மனிதன் படைத்த வண்ணங்கள் எண்ணற்ற மனிதனின் வண்ணம் இரண்டு மட்டுமே # கருப்பு வெள்ளை

வார்த்தைகளின் கீழ் ரத்தம் வழியும் எனது பிளேடும் கிடக்கிறது. இழந்த குழந்தையை மனதில் சுமந்தலையும் தாயில் வாழ்க்கைதானே காதெலென்பதுவும்...

மழை நாளிலெல்லாம் உன் யோசனை.மழை நின்ற பின் உன் வாசனை...

தேவதைகள் அனைத்திற்கும் வெள்ளை உடைதான் #  யூனிஃபார்மா?

மழை போன்றது எனதன்பு ,நனைவதும் ஒதுங்குவதும் உங்கள் விருப்பம் ,எனினும் உங்களுக்கும் சேர்த்தே பெய்கிறது மழை....

உன் ஒப்பற்ற கருணையால் ஒன்றே ஒன்று செய் என்னை நிரந்தரமாக பிரிந்து செல்கையில் நான் அழுகிறேனா என்று திரும்பி பார்த்துக்கொண்டு செல்லாதே...

தடம் மாறாத பூக்கள் #உன் கண்கள்

நானும் மகிழ்ச்சியாக இருந்துள்ளேன் என்பதற்கு என் பழைய புகைப்படங்கள் சிலவே சாட்சியாக உள்ளன...

பயமாயிருக்கிறதென்று கதவு, ஜன்னல்களை மூடி வைத்திருந்தேன். வெளியில் செல்ல வழியில்லாமல் என்னுடனே தங்கிவிட்டது பயம்!

உன்னை நோக்கி நீளும் எனது தார் சாலைகள்..... நெருங்கும் வேளையில் சோலைகள்!

கடைசிவரை உன்னை புரிந்துகொள்ளவே வேண்டாம் , ஆரம்ப பிரம்மிப்பே போதும்.

நீ என்னை என்ன செய்தாலும் , அடுத்தது என்ன என்று சிந்திப்பதை தவிர்க்க முடிவதில்லை.

சமையல் செய்யும்போது உன்னை தொந்தரவு செய்யும்போதெல்லாம் சமையலில் ருசி கூடிவிடுகிறது.

எனக்கும் உனக்குமான சண்டை கட்டிலில் முடியவில்லை…தொடருகிறது.

உணர்ச்சிவசப்பட வேண்டாம் , பெண்கள் யார் முத்தமிட்டாலும் கண்களை மூடிக்கொள்வார்கள்.

இவ்வளவு அழகாக பிரிந்து கூடப் போக முடிகிறது உன்னால். பின்னால் வருவதைத் தவிர என்ன செய்வேன்

உன் வார்த்தைகள் மனப்பாடம். மெளனங்கள் மனப் பாரம்

கவிதை எழுதி காட்டினேன்,புரியவில்லை என்றாள்.பரவாயில்லை, அவளை மட்டும் புரிந்தா காதலிக்கிறேன்?

உன்னை நினைக்கையில் நான் அணியும் புன்முறுவலை விட.... விலைமதிப்பில்லாத அணிகலன் என்னிடம் எதுவுமில்லை!

தாவணி அணிந்திடும் பெண்களில் அவள் மட்டும் தேவதையின் மகள் என்று தெரியும் அதுவும் எங்கே உனக்கு புரியும்.

தமிழ் தவிர பிற மொழிகள் மீது பற்றிருக்கவில்லை.... உன் விழி மொழியும், புன்னகை மொழியும் அறியும் வரை!

எதிர்பார்ப்புகள் எதுவும் எனக்கிங்கு இல்லை.... உன்னை என் கண் எதிர் (ரே) பார்த்துக்கொண்டே இருக் க வேண்டும் என்பதைத் தவிர!

காதலில் தூண்டில் போடுபவரை விட வலை வீசுபவரிடம்தான் பெண்கள் மாட்டுகின்றனர்.

கையளவு உலகம் # உன் இதயம்
Title: Re: கவிதை
Post by: Global Angel on July 30, 2011, 09:41:35 PM
mika inimayana kathal kavithai.....and others...nice one keep it up ;)
Title: Re: கவிதை
Post by: kanmani on July 31, 2011, 03:37:13 PM
Hi vedhaa unga kavithaiya paartha romba anubavichi neengalae  eluthinimathiri thaan iruku  ethuva irunthaalum nice nice  ;) ;)
then 8)
kavithaiku  antha  squirrel  background  music poduthu pola  :D
Title: Re: கவிதை
Post by: Yousuf on July 31, 2011, 03:43:43 PM
நல்ல கவிதை வேதாளம் மச்சி...!!!

தொடரட்டும் உங்கள் பதிவுகள்...!!!