FTC Forum
தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: RemO on May 27, 2012, 05:21:46 PM
-
குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன்.
குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.
‘‘தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?’’ என்று கேட்டான்.
‘‘வருமே...’’ என்றான் சிறுவன்.
‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’
‘‘மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம். வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும்’’ என்றான்.
சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு குதிரை வண்டிக்காரனுக்குக் கோபம். ‘‘என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?’’ என்று கேட்டான்.
‘‘போய்த்தான் பாருங்களேன்’’ என்று சிறுவன் சொன்னதும், அவன் வண்டியை வேகமாக விரட்டி சென்றான்.
சிறிது தூரம் போனதுமே சாலை முழுவதும் கற்கள் கொட்டி இருந்தது. வண்டி தடுமாறிக் கவிழ்ந்தது. தேங்காய்கள் சிதறின. வண்டியை நிமிர்த்தி கீழே சிதறிய தேங்காய்களை பொறுக்கி எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. வண்டிக்காரனுக்கு சிறுவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.
கற்பிப்பவன் எவனாயினும் கல்வி என்பது பெறுமதியானது தானே?
-
கற்பிப்பவன் எவனாயினும் கல்வி என்பது பெறுமதியானது தானே?
nice story.
moral super remo..
tnks for sharing.
-
கற்பிப்பவன் எவனாயினும் கல்வி என்பது பெறுமதியானது தானே?
nice remoo
-
Anu thanks :|
akkoi thanks :D ipalam padikuriinga pola
-
remo romba vegam aabathu nu solra.... gud thinking.....
-
Thanks suthar
ithu naan eluthinathu ila naan padichathu share paniruken machi
-
nice oneeeeeeeeeeeeeeeeeee