FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on May 27, 2012, 03:15:37 PM
-
நித்தம் நித்தம் சத்தம் இன்றி
மன்றம் வந்து பார்த்தாலும் சரி
இல்லையேல் சுத்தமாய் சித்தம் இன்றி
மொத்தமாய் மன்றம் வந்து பார்த்தாலும் சரி
மத்தவரின் முத்து பதிப்புகளை படித்திடும்
நேரம் போக நிச்சயமாய் நிதர்சனமாய்
பித்தனிவன் பித்து பதிப்பையும் எதிர்பார்ப்பாய் ???
நாளுக்கு இரண்டென பதிக்கபட்டிருக்கும் பதிப்பையும் படிப்பாய்???
ஒப்பில்லா கவிஞன் என பெயர் பெற்றவன் தானே இவன் ??
உப்பில்லா பதிப்புக்களை பதித்திருப்பது ஏன்???
ஒப்பிற்கு பதிப்பாக பதிக்கின்றானோ ??
முன்னமே வில்லாக வளைந்திருக்கும் உன் புருவம் அது
நாண் ஏற்றிய வில்லாய் சுருங்கி வளைய விழிப்பாய் ???
ஆச்சர்யத்திற்கெல்லாம் உயர் ஆச்சரியமாய்
உன்னை பற்றிய பதிப்பொன்றும் பதியாததை கண்டு
அதிர்ச்சியில் பனி சிலையென உறைந்தே போயிருப்பாயே ??
சிலநாட்களாய், கொள்ளை கொள்ளை அழகும்
எல்லையில்லா அர்த்தமும் நிறைந்த எண்ணற்ற பதிப்புகள்
காணும்பொழுது கண்களுக்கும் , படிக்கும்பொழுது மனதிற்கும்
அத்தனை குளிர்ச்சி. என்னதான் குளிர்ச்சி ஆனாலும்
தப்புதப்பாய் எழுத்துக்களை கொண்டு,அர்த்தமே இல்லாமல்
கிள்ளை மொழியில், பிள்ளை கவிதையாய் உன் பதிப்புகள்
அனைவராலும் அனுபவிக்க முடியா ஒரு அழகிய சுகம் !
என்னசெய்வதடி ஏந்திழையே, என்னசெய்வது ??
சேர்த்து பேசி,சேர்த்து பேசியே பிரித்துவைத்து பார்பதில்
பட்டம், பட்டயம் என பல பெற்றவர் இங்கு உண்டு .
என் எச்சரிக்கை நடவடிக்கை. முன் எச்சரிக்கை நடவடிக்கை என
அறிந்திருப்பாய் , புரிந்திருப்பாய் என நம்பி உரைக்கு திரை இடுகிறேன்.
-
கூடிய விரைவில் அந்த தோழியின் பதிப்பினை எதிர்பார்ப்போம்
-
மத்தவரின் முத்து பதிப்புகளை படித்திடும்
நேரம் போக நிச்சயமாய் நிதர்சனமாய்
பித்தனிவன் பித்து பதிப்பையும் எதிர்பார்ப்பாய்
பித்து பதிப்புக்களா??
உங்கள் பதிப்புகள் அத்தனையும் ...
முத்தான பொன் பதிப்புகள் அல்லva...
சிலநாட்களாய், கொள்ளை கொள்ளை அழகும்
எல்லையில்லா அர்த்தமும் நிறைந்த எண்ணற்ற பதிப்புகள்
காணும்பொழுது கண்களுக்கும் , படிக்கும்பொழுது மனதிற்கும்
அத்தனை குளிர்ச்சி. என்னதான் குளிர்ச்சி ஆனாலும்
தப்புதப்பாய் எழுத்துக்களை கொண்டு,அர்த்தமே இல்லாமல்
கிள்ளை மொழியில், பிள்ளை கவிதையாய் உன் பதிப்புகள்
அனைவராலும் அனுபவிக்க முடியா ஒரு அழகிய சுகம் !
கிள்ளை மொழியில் அழகு பதிப்பிக்களை ..
ரொம்பவும் மிஸ் பண்ணுறீங்க போல இருக்கு....!!! :P ;) ;)