FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on May 27, 2012, 01:40:28 PM

Title: கவிதைகளை படைத்திடும் கடவுள்களே !!!!!!
Post by: aasaiajiith on May 27, 2012, 01:40:28 PM
ஒரு கவி மலர்  ,ஒரு கவி மகள்
ஓரிரு கவிதை கிறுக்கர்கள்
இவர்களோடு, ஏதோ ஒரு ஓரமாய்
ஒப்புக்கு சப்பாணியாய் என் வரிகள், மட்டும்
அங்கொன்றும், இங்கொன்றுமாய் லேசாய்
வாசம் வீசி வந்த கவிதை சோலையில் 
இன்று,ஈதென்ன அதிசயம் ????

"எங்கெங்கு காணினும் சக்தியடா "எனும்
மகாகவியின் வரிகளை போல,

மன்றத்தில் ,எங்கெங்கு காணினும் ,
எப்போது காணினும் கவிதையடா "

மண்ணில் மனிதருக்கு கோடை காலம் போல
மன்றத்தில் கவிதைக்கு வசந்த காலமோ ????

பகுத்தறிவு பகலவன் பகன்று சென்ற
அத்தனையும் அல்லாவிட்டாலும் ஒரு சிலவற்றை
பகுத்து வகுத்து பின்பற்றும் சிறு பகுத்தறிவாளன் "நான்".
கண்திருஷ்டி மீது கடுகளவும் உடன்பாடு இல்லை
ஒருவேளை அது உண்மையாக இருக்கும்பட்சத்தில்
என் திருஷ்டியில் இருந்து கவிச்சோலையையும்
கவிதைகளையும், காப்பாற்றுங்கள் கடவுள்களே !
 
கவிதைகளை படைத்திடும் கடவுள்களே !!!!!!

வாழ்க மன்றம் !
வளர்க கவிச்சோலை !!!!!
Title: Re: கவிதைகளை படைத்திடும் கடவுள்களே !!!!!!
Post by: RemO on May 27, 2012, 04:35:37 PM
Quote
மன்றத்தில் ,எங்கெங்கு காணினும் ,
எப்போது காணினும் கவிதையடா "

Nalla visayam than, ithu ipadiye thodarntha nalarukum
thodarum nu nambuvom
Title: Re: கவிதைகளை படைத்திடும் கடவுள்களே !!!!!!
Post by: Anu on May 28, 2012, 08:54:52 AM

இவர்களோடு, ஏதோ ஒரு ஓரமாய்
ஒப்புக்கு சப்பாணியாய் என் வரிகள், மட்டும்
அங்கொன்றும், இங்கொன்றுமாய் லேசாய்
வாசம் வீசி வந்த கவிதை சோலையில் 

பகுத்தறிவு பகலவன் பகன்று சென்ற
அத்தனையும் அல்லாவிட்டாலும் ஒரு சிலவற்றை
பகுத்து வகுத்து பின்பற்றும் சிறு பகுத்தறிவாளன் "நான்".
கண்திருஷ்டி மீது கடுகளவும் உடன்பாடு இல்லை
ஒருவேளை அது உண்மையாக இருக்கும்பட்சத்தில்
என் திருஷ்டியில் இருந்து கவிச்சோலையையும்
கவிதைகளையும், காப்பாற்றுங்கள் கடவுள்களே !
 
கவிதைகளை படைத்திடும் கடவுள்களே !!!!!!

வாழ்க மன்றம் !
வளர்க கவிச்சோலை !!!!!

unga kavithaigalum romba nalla irukum ajith.
thavaraagatum paaraattu aagatum romba azahga naasukka sollvinga.
unga kavithai baaniye thanithuvama irukum..
ninga sonnathu nijam thaan ajith.
ennikkaiyum athigarithu iruku.
kavithaigalum merugu petru iruku..
Nandri kavinjnargale..
Title: Re: கவிதைகளை படைத்திடும் கடவுள்களே !!!!!!
Post by: aasaiajiith on May 28, 2012, 10:02:06 AM
நன்றி சொல்லபோவதும் இல்லை
 நன்றி சொல்ல மனமும்  இல்லை அனு .
அகங்காரம்  என அனுமாநித்திட வேண்டாம்
உன்னை  அன்னியபடுத்திட அணு அளவும் கூட 
எனக்கு எண்ணமில்லை அவ்வளவுதான் !
மற்றபடி, ரஷிய அணுஉலை  கிடங்கில்
கொட்டிகிடக்கும் அளவில்லா அணுக்களின்
எண்ணிக்கை போல் அளவில்லா சந்தோஷம்
உன் பதிலை பார்த்ததும் !

பூமாலைகளே பாமாலைகளை பதிப்போமே !!!
என் இந்த பதிப்பை நீ படிக்கவேண்டும் !
Title: Re: கவிதைகளை படைத்திடும் கடவுள்களே !!!!!!
Post by: vimal on May 28, 2012, 12:20:53 PM
நண்பா நான் மின்னணு துறையில்
படிக்கும்போதும் சரி இப்பொழுது வேலை
செய்து  கொண்டிருக்கும் போதும் சரி
இதுவரை உணர்ந்திடாத  "electricshock"
உன் வரிகளில் உணர்ந்தேனடா !!!

வாசம் வீசி வந்த கவிதை சோலையில்
வசந்தராஜாவாக வளம் வரும் ஆசை நாயகனே
மன்றத்தில் ,எங்கெங்கு காணினும் ,
எப்போது காணினும் கவிதையடா
உன் கவிதை 
மண்ணில் மனிதருக்கு கோடை காலம் போல
மன்றத்தில் கவிதைக்கு வசந்த
  காலம் அது உன்னால்தனோ !!!

நண்பா மிக நன்று உங்கள் வரிகள் அணைத்து தொடருங்கள்

Title: Re: கவிதைகளை படைத்திடும் கடவுள்களே !!!!!!
Post by: aasaiajiith on May 28, 2012, 01:03:18 PM
" பாராட்டுவதற்கு ஒரு செலவும் இல்லை,ஆனால் பலருக்கு அதில் கஞ்சத்தனம் "

 வெறும் வார்த்தை ஜாலம் பொருட்டே
வரிவரியாய் வாசகம்  பதிப்போர்க்கு மத்தியில்
பதித்த வாசகத்தின்படி வாழ்ந்து காட்டும்
வாழும் ( வள்ளல் ) கர்ணன்  நீ விமல் !

பதிப்புகள் படைப்பதனால் உன்னைப்போல
நானும் ஒரு இறைவன் ஆகையால்
நாம் இணைந்தே கவிதையையும்
கவிச்சோலையையும்  காப்பாற்றுவோம் !

உன் வரவிற்கு பிறகாவது பாராட்டும் பண்பின்
வறுமை நீங்கி வெறுமை ஆகிறதா என
ஆசையோடு,ஆவலாய்  எதிர்பார்ப்போம் !
Title: Re: கவிதைகளை படைத்திடும் கடவுள்களே !!!!!!
Post by: supernatural on May 28, 2012, 08:07:25 PM
மண்ணில் மனிதருக்கு கோடை காலம் போல
மன்றத்தில் கவிதைக்கு வசந்த காலமோ ????

சில நாட்களுக்கு பின் ..
மன்றம் வந்த எனக்குள்ளும்...
எழுந்த வினா இதுவே தானே....!!!

பகுத்தறிவு பகலவன் பகன்று சென்ற
அத்தனையும் அல்லாவிட்டாலும் ஒரு சிலவற்றை
பகுத்து வகுத்து பின்பற்றும் சிறு பகுத்தறிவாளன் "நான்".
கண்திருஷ்டி மீது கடுகளவும் உடன்பாடு இல்லை
ஒருவேளை அது உண்மையாக இருக்கும்பட்சத்தில்
என் திருஷ்டியில் இருந்து கவிச்சோலையையும்
கவிதைகளையும், காப்பாற்றுங்கள் கடவுள்களே !

என் திருஷ்டியில் இருந்தும் தான் .... :P

Title: Re: கவிதைகளை படைத்திடும் கடவுள்களே !!!!!!
Post by: suthar on May 28, 2012, 08:45:14 PM
antha kirukan
varaisaila
nanum iruken...       hahahah thanx ajith nice lines.....