FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dhurka on May 27, 2012, 10:44:30 AM
-
காற்றே..
நீ என்னவனை கடந்து வருவதால் தான்
உன்னை நான் சுவாசிக்கிறேன்..!
கண்கள் பார்வையை திருடின...
உதடுகள் புன்னகையை திருடின..
எண்ணம் வார்த்தைகளை திருடின...
கவிதைகள் மொழியை திருடின....
அன்பே...
என்னை நீயும்
உன்னை நானும்
திருடிக்கொண்டோம்....
நம் இதயங்களை திருடியது காதல்...
-
நீ
அதிகம்
பேசினாலும்
அதிகம்
சிரித்தாலும்
எனக்கு பிடிப்பதேயில்லை....
தீர்ந்துவிடுமோ என்று....!
காதல் செய்வதாயினும்
கலவரம் செய்வதாயினும்
உன் கண்களே ஜெயிக்கின்றன....
-
துன்பமும்
இன்பமும்
வாழ்வின் இரு அங்கங்கள்...
ஆனால் நீ என் அருகில் இருக்கும் போது
இன்பம் ஒன்றை தவிர
வேறு எதுவும் நான் உணரவில்லையே....
-
உனை நெருங்கவும் முடியவில்லை
உனை விலகவும் முடியவில்லை
உன் முகம் மட்டும் போதும் என்றதால்
இவ்வுலகில் எதுவும் தேவையில்லை...
என் மீது முத்தமாக மாறியபோது தான்
உன் மெளனத்திற்கான காரணம் உணர்ந்தேன்...
நான் உலகை மறந்த அந்த நிமிடம்....
நீ முத்தமிட்ட அந்த முதல் ஸ்பரிசத்தில் தான்....
-
பலரிடம் பலவருடம்
பேசிய மகிழ்வை
உன் உதட்டுப் புன்னகை
ஒரெ முறையில் தந்தது...!
பார்க்கும்போது குறைவாக
பேசினாலும்,
பார்க்காத போது
நிறைய பேசுகிறோமே...
என்ன வேடிக்கை...!
-
மேகம் இருந்தும்
மழை இல்லை...
பூ இருந்தும்
புன்னகை இல்லை....
காவேரி இருந்தும்
தண்ணீர் இல்லை....
என் மனதில்
உன் நினைவுகள் இருந்தும்
நீ என் அருகில் இல்லை...
-
நான் உண்ணாமலேயே
உறங்கியிருக்கிறேன்...
உறங்காமலேயே
விழித்திருக்கிறேன்...!
ஆனால்,
உன்னை எண்ணாமல்
இருந்ததில்லை...!
அன்பே!
எனக்கு கவலையெல்லாம்
உடலுக்கு உணவில்லை
என்பதல்ல....
உறவுக்கு நீயில்லை
என்பதுதான்...!
-
உன்னை
வெல்வதற்கு யாரும் இல்லை
என் அன்பினை தவிர....
என்னை
கொல்வதற்கு யாரும் இல்லை,
உன் பிரிவை தவிர...!