FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on May 27, 2012, 10:21:33 AM

Title: ***எனக்கு பிடித்த கவிதைகள்***
Post by: ஸ்ருதி on May 27, 2012, 10:21:33 AM
ஒவ்வொரு முறையும்
கவிதை எழுதிய
கையோடு உன்னுடன்
பகிர்ந்து கொள்கிறேன்,
நீ படித்த பிறகு தான்
என் கவிதைகள்
முழுமையடைகின்றன.

*****************************

உன் இதயச் சிறையில்
என்னை ஆயுள் கைதியாக்கு
உணவாய்
உனது காதலை மட்டும் கொடு

உன்னை நினைத்துக் கொண்டிருக்கும்
வேலையையும் சேர்த்தே கொடு.
அதை இரட்டை
ஆயுள் தண்டனையாக்க
நானே கடவுளிடம் மனுக் கொடுக்கிறேன்.

*******************************

உன்னை அவ்வளவு எளிதாக
மனைவியாய் ஆக்கி விட மாட்டேன்
இன்னும் கொஞ்ச நாள் எனது
காதல் கொடுமையை அனுபவிக்கும்
அன்பானக் காதலியாய் இரு.

*********************************

நீ செய்யும் எல்லாச் செயல்களிலும்
எனக்குள் ஒரு கவிதை
பிறக்கும்
உனக்கும் கவிதைக்கும்
அப்படி என்ன பந்தம்?

*********************************

உன் விரல்களால்
வண்ணம் தீட்டுவதாக இருந்தால்,
நிலாக் கூட வண்ணமாய் மாறக் கூடும்.


*********************************

எத்தனையோ
பெண்களுக்கு அழகி என்கின்ற திமிர்
உனக்கு மட்டும் அழகே உனது திமிர் தான்.

*********************************

எனது கனவுகளையும்,
கவிதைகளையும் முழுவதுமாய்
ஆக்கிரமித்துக் கொண்டாய்
எனக்குள் காதல் பிறந்து விட்டதா இல்லை
நீயே காதலாய் பிறந்து விட்டாயா?

********************************

உனது கன்னத்தில்
முத்தமிடுவதை விட
உன்னை என்
கவிதையில் முத்தமிடுவதையே
நான் அதிகம் நேசிக்கின்றேன்.


********************************

பட்டும் படாமலும்
என்னைக் கட்டி அணைத்தாய்!
என்னிடம் இதுவரை யாருமே
நுகர்ந்திடாத வாசனைத்
திரவியம் என்று ஊரே மெச்சியது.

********************************

உன் குடும்பத்தினர் மீது
எனக்கு கொள்ளைப் பொறாமை,
எப்படி முடிகிறது
அவர்களால் மட்டும்
கண் கூசாமல் உன்னைப் பார்க்க?

********************************

என்னை எவ்வளவு பிடிக்கும்
என்று அடிக்கடி கேட்கிறாய்
சொல்லத் தெரியவில்லை,
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்
உன்னைப் பிடித்த அளவுக்கு
வேறு எதையும் எனக்குப் பிடிப்பதில்லை..

********************************


Title: Re: ***எனக்கு பிடித்த கவிதைகள்***
Post by: RemO on May 27, 2012, 04:38:40 PM
Quote
உன்னை அவ்வளவு எளிதாக
மனைவியாய் ஆக்கி விட மாட்டேன்
இன்னும் கொஞ்ச நாள் எனது
காதல் கொடுமையை அனுபவிக்கும்
அன்பானக் காதலியாய் இரு.

Nice one, Thanks for sharing
Title: Re: ***எனக்கு பிடித்த கவிதைகள்***
Post by: ஸ்ருதி on May 28, 2012, 12:54:34 AM
thank u
Title: Re: ***எனக்கு பிடித்த கவிதைகள்***
Post by: vimal on May 28, 2012, 01:23:10 AM
shruthi anaithu kavithaigalum miga nanru...
Title: Re: ***எனக்கு பிடித்த கவிதைகள்***
Post by: ஸ்ருதி on May 28, 2012, 01:25:29 AM
Thanks vimal ...

Ithu enaku piditha kavithaigal...

Nan eluthiyathu kavithaigal illai..

unga singnature words also nice (F)