FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on May 26, 2012, 09:54:23 PM
-
அச்சச்சோ !
மலரினும் மெல்லிய வரிகளை
கொண்டுதானே பதில் பதித்தேன்
இருந்தும் இத்தனை கடுகடுப்பு ஏனோ ?
காரணம் கண்டு கொள்ள கனகாலமாய்
கண்பிதுங்க கடுமையாய் யோசித்தேன்
கடைசியில் ஒரு வழியாய் காரணம் கண்டேன்
உருட்டும் விழிகள் ,முரட்டு பார்வை
புரட்டு பேச்சு ,திருட்டு எண்ணம்
இவைகளில் ஒன்று கூட
எனக்கு பழக்கமில்லா காரணமோ ??
ஆசையாய் பதுக்கி வைத்த பாலினை
பூனை குடித்து போனது போல
மனதுக்குள் ஒரு இனம் புரியா சோகம்
வேறு எங்கேயோ என யோசிக்க வேண்டாம்
அமர்க்களம் பட "உன்னோடு வாழாத வாழ்வென்ன "
முதல் சரணத்தின் முதல் வரிகள் ....