FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on May 25, 2012, 10:57:32 AM

Title: தூயவளே உனக்காக !
Post by: aasaiajiith on May 25, 2012, 10:57:32 AM
தூயவளே  !
தொடர்ந்து உன் தொடர்பில் இருந்திட
தகவல் தந்திடவே திக்கி திக்கி தவிக்கின்றேன்
இருந்தும்,துள்ளல் சந்தோஷ நதிக்கு மடையாய்
தளர்வில்லா குதூகலத்திற்கு தடையாய்
ஒட்டுமொத்தத்தில் உனக்கு தொந்தரவாய்
இருந்திட கூடாதெனகருதி தவிர்த்தும்
துடித்து தவித்தும்  வருகிறேன் !
உனக்காக !