FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on May 23, 2012, 01:52:51 PM
-
மண்ணில் விழும் விதை தான்
விருட்சமாக நிமிர்ந்து நிற்கிறது
வீழ்வது வெட்கமில்லை
வீழ்ந்து கிடப்பது தான்.....
எழுந்து நின்று
எம்பிக் குதிப்பவனால்
கீழே விழ முடியும்
காலம் முழுவதும்
காலை நீட்டிப் படுத்திருப்பவன்
கீழே விழுவதில்லை
வாழ முயன்றால் தானே
வீழ்ச்சியும் எழுச்சியும்
தோல்வியை கண்டு
துவண்டு விடாதே
தோல்வி என்பது
வெற்றி எனும் சரித்திரத்தின்
எழுதப்படாத முன்னுரை
ஒன்பது முறை படையெடுத்த
கஜனி முகமது
பத்தாவது முறையும் முயன்றதால் தான்
வெற்றிவாகை சூடினான்
சரித்திரங்கள் வெற்றி பெற்றவர்களின்
பெயர்களை விட
தோல்வியடைந்தவர்களின் பெயர்கள் தான்
நிலைத்து நிற்கிறது
கயத்தாற்றில் கட்டபொம்மன்
தூக்கில் தொங்கினாலும்
சரித்திர புத்தகத்தில் முதல்பக்கம்
கட்டபொம்மனுக்குத் தான்
ஜாக்சன் துரைக்கல்ல
முள்ளிவாய்க்காலில் பிரபாகரன்
தோற்கடிக்கப் பட்டாலும்
தமிழர் மனங்களில்
வீரனாகத் திகழ்வது
பிரபாகரன் தான்
ராஜபக்சே அல்ல
வாட்டலூ யுத்தத்தில்
வாளுடைந்து போனாலும்
வரலாறு பாடுவது
நெப்போலியனை தான்
சரித்திரம் நெல்சனை மறந்து விடும்
நெப்போலியனை அல்ல
எப்படியாவது உயிர் பிழப்பது தான்
வெற்றியென்றால்
உலகில் ஒரு வீரன் கூட
இருந்திருக்க மாட்டான்
வெற்றி என்பது
ஒரு இலக்கை தொடுவதல்ல
பல இடர்களை
முறியடிப்பது தான்
சுட்டெரிக்கும் சூரியன் கூட
மாலையில் வீழ்வது
மீண்டும் எழுவதற்கே
மாண்டு வீழ்வதற்கல்ல
நீ உயரே பறக்கும்
பட்டாம் பூச்சி
உயிரில் உணர்ச்சி இருக்கும் வரை
மேலே மேலே பற
உன் கால்கலில்
உணர்ச்சி இருக்கிம் வரை
எம்பி எம்பிக் குதி
ஒரு நாள்
வானம் உனக்கு வசப்படும்
வாழ்க்கையும் உனக்கு
வாழ்த்துக்கள் கூறும்
-
காலம் முழுவதும்
காலை நீட்டிப் படுத்திருப்பவன்
கீழே விழுவதில்லை
வாழ முயன்றால் தானே
வீழ்ச்சியும் எழுச்சியும்
அருமையான வரிகள் தமிழன்
முயசிகாமல் இருப்பது முட்டாள்தனம் தான்
-
ஒன்பது முறை படையெடுத்த
கஜனி முகமது
பத்தாவது முறையும் முயன்றதால் தான்
வெற்றிவாகை சூடினான்
onbathu thadavai ila tamizh 17 murai nu ninaikren...more than 15 thaan padicha ngabagam....
-
நீ உயரே பறக்கும்
பட்டாம் பூச்சி
உயிரில் உணர்ச்சி இருக்கும் வரை
மேலே மேலே பற
உன் கால்கலில்
உணர்ச்சி இருக்கிம் வரை
எம்பி எம்பிக் குதி
நல்ல ஊக்கம் தரும் கவிதை தமிழன் மச்சி!
நல்ல வரிகள்!
தொடரட்டும் மீண்டும் உங்கள் கவிப்பயணம்!
-
தோல்வியை கண்டு
துவண்டு விடாதே
தோல்வி என்பது
வெற்றி எனும் சரித்திரத்தின்
எழுதப்படாத முன்னுரை
தமிழன் வீழ்ச்சியின் எழுச்சியை அருமையாய் சொல்லி இருக்கீங்க ... தொடரட்டும் உங்கள் பதிவுகள்
-
படித்தோர் பாராட்டும், பொன்னான வரிகள் !
-
ஒரு நாள்
வானம் உனக்கு வசப்படும்
வாழ்க்கையும் உனக்கு
வாழ்த்துக்கள் கூறும்
Nice lines thamilan.
eppadi irukinga. long time no see u
-
நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றிகள். உங்கள் பாராட்டுகளுக்கு நன்றிகள்