FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on May 23, 2012, 11:01:44 AM
-
"மியாவ்" பூனைகளின் தாய் மொழி
இதனையே தலைப்பாய் கொண்டு
பதிப்பொன்று பதிப்போமே என்று
கையில் எழுத்தாணியை கொண்டு
அமர்ந்துவிட்டேன் அதிகாலையே இன்று
"மியாவ்" "மியாவ்" "மியாவ்" என முனுமுனுத்தே
வரிபதிக்க வார்த்தைகள் வந்ததோ இல்லையோ
என் வளர்ப்பு கிளி (மீட்டூ) க்கு புதியதாய்
ஒரு வார்த்தை பழகியது "மியாவ்"என்று .