FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on May 23, 2012, 09:57:39 AM

Title: மெஹந்தி போட ஆசையா?
Post by: kanmani on May 23, 2012, 09:57:39 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2012%2F05%2F22-mehandi.jpg&hash=85ec84c954452a1d908d2b8ab46472c6a27cddfd)
பெண்கள் கையில் மருதாணி இலையை அரைச்சு வட்ட வட்டமா வெச்சு அழகு பார்த்து வந்தவர்கள் இப்போது அந்த மருதாணிய கோன் உள்ளே வெச்சு போடுற மெஹந்தி டிசைனை அதிகமா விரும்புறாங்க. அதுக்காக அவங்க பார்லர் போய் அதிகம் செலவு பண்றாங்க. ரோட்டையே அடைக்குற அளவுக்கு கோலம் போடுற கைகளுக்கு கையை அழகு படுத்த போட சொல்லிக்குடுக்கணுமா என்ன? அப்படி அதிக செலவு செஞ்சு பார்லர் போறதுக்கு, அதை வீட்டிலேயே ஈஸியா ரெடி பண்ணி வைக்கலாம்.

கோன் எப்படி செய்யலாம்


முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் டீத்தூளை போட்டு நல்லா கொதிக்க வைக்கணும். பின்னர் அந்த டிகாஷனில் ஹென்னா பவுடரைக் கலந்து குறைந்தது 2 மணி நேரம் ஊற விடவும்.

பின் ஒரு கவரை கதுரமா வெட்டி அதை கோன் போல செய்து கொண்டு, பின் அதில் கலந்து வைத்திருக்கும் ஹென்னாவை கோனில் போட்டு கொள்ளவும்.

இந்த மெஹந்தி கோன் கடைகளிலும் கிடைக்கும். மெஹந்தி கோன் வாங்கும் போது நேச்சுரல் ஹென்னாவான்னு பார்த்து வாங்க வேண்டும். ஏனென்றால் செயற்கை கலர் சிலசமயம் அலர்ஜியை உண்டாக்கும்.

மெஹந்தி வைத்தால் ஜலதோஷம் பிடிக்கும்-னு சிலர் நினைப்பாங்க. அது தவறு, மருதாணி இழை அரைச்சு வைக்கும் போது தான் நல்லா சூடு குறைந்து உடம்பு குளிர்ச்சியாகும், அதனால சிலருக்கு ஜலதோஷமும் பிடிக்கும். ஆனா பவுடரை வாங்கி கோனில் வைத்து போடுவதில் ஜலதோஷம் வர வாய்ப்பில்லை.

ஆகவே ஈஸியா கோன் செஞ்சு, உங்க கற்பனைக் குதிரையை கையில போடுங்க!