FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on May 22, 2012, 07:09:23 PM

Title: உன்னால் மட்டும் எப்படி???
Post by: aasaiajiith on May 22, 2012, 07:09:23 PM
உன் உள்ளர்த்த அகராதி வேண்டும் !!!
ஆசை,பாசம்,நேசம்,அன்பு ,கருணை,
இரக்கம்,பரிவு ,மென்மை,பெண்மை,
தாய்மை,என ஒவ்வொரு  உணர்விற்கும்
தேவைக்கேற்ற அளவு தனித்தனியாய்
அர்த்தம் அறிந்தே   வைத்திருக்கின்றேன் .
இருந்தும் "காதல் "எனும் ஓர் உணர்வில்,
உன்னால் மட்டும் எப்படி? அத்தனை
உணர்வுகளையும் உள் அடக்கி  ஒற்றை
உணர்விற்குள் அர்த்தம் கொள்ள முடிகிறது ???