FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on July 30, 2011, 03:08:51 PM

Title: என் இமை பொழுதில்...
Post by: JS on July 30, 2011, 03:08:51 PM
என் இமை பொழுதில் வந்து
  ஒளி வீசிய பேரழகே !
என் நொடி பொழுதை
  உன் வசம் ஆக்கினாய் !...

நீ இடும் 'மை'யில்
  என்ன வசியம் செய்தாயடி !
உன் நிழலை கூட தொடர
  என்னை தூண்டுதடி !...

மயக்கத்திற்கு விலை போனேன்
  உன் அழகை காண முடியாமல் !
மீண்டு வர முயற்சிக்கிறேன்
  உன்னை பிரிய முடியாமல் !...

வெட்கத்திற்கு தாழ்ப்பாள் போட்டு
  கொஞ்சம் என்னை பாரடி !
சேதி சொல்ல வந்த என்னை
  சேர்த்து கொண்டு செல்லடி !...

சீவி விட்ட கொம்பை போல்
  உன் இமைகள் காட்சி தர
சாகாவரம் கேட்டேன்
  உன் கண்களில் நிலைத்து வாழ !!...
Title: Re: என் இமை பொழுதில்...
Post by: Global Angel on July 30, 2011, 04:23:53 PM
சீவி விட்ட கொம்பை போல்
  உன் இமைகள் காட்சி தர
சாகாவரம் கேட்டேன்
  உன் கண்களில் நிலைத்து வாழ !!...

nicekavithai.. ;)