FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: RemO on May 20, 2012, 01:10:08 PM

Title: உணவுக்கட்டுப்பாடுதான் மஞ்சள் காமாலைக்கு முதல் மருந்து!
Post by: RemO on May 20, 2012, 01:10:08 PM
வைரஸ் கிருமியின் தாக்குதலால் ஏற்படுவது தான் மஞ்சள் காமாலை. இரத்தத்தில் பிலிரூபின் என்ற வேதிப்பொருள் அதிகரிப்பதால் ஏற்படும் நிலை தான் மஞ்சள் காமாலை. மஞ்சள் காமாலை வந்தால் கல்லீரல், மண்ணீரலோடு மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும். ஈரல் பாதிப்பினால் வரும் மஞ்சள் காமாலை நோய்கள் பெரும்பாலும் ஹெபடைட்டிஸ் A வைரஸ் கிருமியினாலேயே வருகின்றன.இது பிறந்த குழந்தைக்கும்கூட வர வாய்ப்பு உள்ளது. இது சில தினங்களில், சில வகையான மருந்துகள் சாப்பிட்டாலே சரியாகிவிடும்.

அறிகுறிகள்

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் மற்றும் உடல் மஞ்சளாக இருக்கும். சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சினை மற்றும் சிறுநீர் மஞ்சளாக வெளியேறும்.

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் கடுமையாக இருக்கும், அவர்களுக்குப் பசி எடுக்காது. இதனை ஆரம்பத்திலே மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

தவிர்க்க வேண்டியவை

மஞ்சள் காமாலை வந்தால் மசாலா வகைகள், கார உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதிக புரதம் உள்ள பருப்பு, சோயா வகைகளையும் விலக்கி வைக்க வேண்டும்.

சமையலில் அதிக எண்ணெய் பயன்படுத்தக்கூடாது. கொழுப்புத் சத்து நிறைந்த உணவுகளை ஒதுக்க வேண்டும். மஞ்சள் காமாலை வந்தால் 5 மாதங்கள் வரை அசைவ உணவுகளை தொடவேக் கூடாது. முட்டையில் மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டும்.

உடலுக்கு ஏற்றது

மஞ்சள் காமாலை வந்தவர்கள் மாவுச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் உண்ண வேண்டும். முட்டையின் வெள்ளைக்கரு, மோர் ஆகியவற்றை உண்டால் உடலுக்கு சிறந்தது. மேலும் அவர்கள் தினமும் 3 இளநீர் குடிக்க வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகும் பொருட்களை உண்பது நல்லது.

சிலர் சூடு போடுவதால் இது சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். சூடு போட்டால் உடல் தான் புண் ஆகுமே தவிர சரியாகாது. ஆகவே சிந்தித்து செயல்பட்டு, உணவுக்கட்டுப்பாட்டுடன் இருங்கள், மஞ்சள் காமாலை பறந்து போய்விடும்.