FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: RemO on May 20, 2012, 01:34:13 AM

Title: செல்பேசி பிரியர்கள் கவனத்திற்கு....
Post by: RemO on May 20, 2012, 01:34:13 AM
உலகத்திலேயே மிகப்பெரிய பயம் என்று நீங்கள் எதை நினைக்கிறீர்கள்..?
 
ரொம்ப மூளையை கசக்காம தொடர்ந்து படிங்க...
 
உங்க ஃபோன் உங்க கிட்ட இல்லைனா உங்க ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்?
 
ஒரு நிமிடம் யோசித்து பாருங்க...
 
ஒரு பதற்றம், பயம், மன உளைச்சல் ...
 
இன்னும் சொல்லனும்னா...
 
அய்யயோ முக்கியமான கால் வருமே, நிறைய விஐபி காண்டாக்ட்ஸ் எல்லாம் இருக்கேன்னு நீங்கள் புலம்பூவீங்களா... கவலைப்படுவீங்களா...
 
இதுதாங்க உலகிலேயே மிகப்பெரிய பயம். இந்த பயத்தோடு நிறைய பேர் இருக்கிறார்களாம்.
 
இங்கிலாந்தில் நடத்திய ஆய்வு ஒன்று இப்படி ஒரு தகவலை நமக்கு தருகிறது.
 
இந்த மாதிரி ஃபோன் காணாமல் போனால் பயப்படறதுக்கு பெயர் நோமோபோபியா.
அதாவது நோ மொபைல் ஃபோன் போபியா.
 
இந்த வியாதி உங்களுக்கு இருக்கிறதா என்று சந்தேகமிருந்தால் கீழ்காணும் சில அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா என்று சோதித்து பார்த்துக்கொள்ளுங்கள்.
 
* எப்பவுமே ஃபோன் சுவிட்ச் ஆப் செய்ய முடியாமை.
* மிஸ்டு கால், ஈமெயில், எஸ்.எம்.எஸ்சை அடிக்கடி பார்த்தல்
* ஃபோன் பேட்டரியை எப்பவும் முழுமையாக வைத்திருத்தல்
* பாத்ரூம் போகும் போது கூட கூடவே ஃபோனை கொண்டு செல்லுதல்

இந்த நோமோபோபியா நிறைய பேருக்கு உள்ளதாக ஆய்வு கூறுகிறது.
 
தற்போது இங்கிலாந்தில் 1000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 66 விழுக்காட்டினரிடம் இந்த நோமோபோபியா இருப்பதாக அறிய முடிகிறது.
 
நான்கு ஆண்டுகளுக்கு முன் இதேபோன்ற ஆய்வை நடத்தியபோது, 53 விழுக்காட்டினர் ஃபோன் தொலைந்துபோனால் அச்சமடைய கூடிய வியாதி இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்று ஆண்கள் அதிகமாக நோமோபோபியாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று பெண்கள் அதிகமாக உள்ளனர்.

அதுவும் 18-லிருந்து 24 வயது வரை உள்ளவர்கள் தான் மொபைல் ஃபோனுக்கு அதிகம் அடிமையானவர்களாக உள்ளனர். இவர்களில் 77 விழுக்காட்டினரால்  சில நிமிடம் கூட ஃபோனை பிரிந்து இருக்க முடியவில்லையாம்.
 
இதேபோன்று, 25-இருந்து 34 வயது வரை உள்ளவர்களில் 68 விழுக்காட்டினர் உள்ளதாக ஆய்வு கூறுகிறது.

இன்னொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், 75 விழுக்காட்டினர் பாத்ரூமில் செல்போன் பயன்படுத்துகிறார்களாம். கேட்டால், மாடர்ன் செய்தித்தாள் என்று சொல்கிறார்களாம்.
 
இதேபோன்று, சராசரியாக ஒரு நாளைக்கு 34 முறை தங்கள் போனை எடுத்து சும்மாவே பார்த்து வைக்கின்றனராம்.
 
இதுகுறித்து ஆய்வு நடத்திய செகியூர் என்வாய் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான அன்டி கெம்ஷல் தெரிவிக்கும் போது, நாங்கள் 2008 ஆய்வு செய்தபோது கிடைத்த தகவல்கள் தற்போது அப்படி தலைகீழாக உள்ளதாக கூறியுள்ளார். அதாவது, அன்று ஆண்கள் அதிகமாக நோமோபோபியாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று பெண்கள் அதிகமாக உள்ளனர் என்றார்.

தனது மெசேஜ்களை, பார்ட்னர் பார்த்துவிட்டால் அப்செட் ஆவோர் எண்ணிக்கை 49 விழுக்காடு உள்ளது. அதேசமயம், தனது ஃபோன் பாதுகாப்பு பற்றி பெரும்பாலானோர் கவலை படுவது இல்லையாம். வெறும் 46 விழுக்காட்டினர் மட்டுமே ரகசிய லாக் கோட் பாயன்படுத்துவதாகவும், 10 விழுக்காட்டினர் தனது தகவல்களை குறியீட்டு சொற்கள் மூலம் மறைத்து அனுப்புவதாக ஆய்வு கூறுகிறது.
 
இது இங்கிலாந்து நிலவரம்ங்க...
நம்ம ஊரில் இதுப்போன்ற வியாதி உள்ளவர்கள் எத்தனை பேரோ....?
Title: Re: செல்பேசி பிரியர்கள் கவனத்திற்கு....
Post by: Yousuf on May 20, 2012, 07:27:52 PM
நல்ல பயனுள்ள தகவல் ரெமோ!

பதிவிற்கு நன்றி!