FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on May 19, 2012, 10:43:23 AM
-
இருந்து இளைப்பாற,.படுத்து உறங்கிட
இடம் கேட்டு இளப்பமாகவா
கருதினேன் உன் இதயத்தை ??
இதயத்துடிப்பாக இருந்திடத்தானே
வரம் கேட்டேன் ,அதுவும் தவம் இன்றி
கேட்கவில்லையே ??
கடும் தவம் இருந்தேனே,
ஏன்? தவம் போதவில்லையா ?
தவத்தின் தரம் போதவில்லை என்றே
வரம் தரவில்லையா ???