FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on May 16, 2012, 11:49:00 PM
-
திருமதியாய் ஆவதற்கு
வாழ்த்து வந்தது
பிறை மதியாய் நான்
நிற்கிறேன்
அதை நீ அறிய
வாய்ப்பு இல்லை தான்
இருந்தும் நீ அறிய
நான் உரைத்தேன்
சூசகமாய் ....
-
சூசகமாய் உரைத்ததை
உணர்ந்திருப்பான்
உன் மன்னவன்
பிறைமதிக்கு ஆயுள்காலம்
அதிகம் என்பதால்
காலம் கடத்துகிறாரோ?
அரைமதியாய், பிறைமதியாய் இருக்கும் உன்னை
நிறைமதியாக்க,
முழுமதியாக்க,
திருமதியாக்கிணால்
குடும்பம், குழந்தையென
தேய்ந்து போய்
குறைமதியாகி விடுவாய் என
அச்சபடுகிறாரோ?
அப்படி குறைமதியாணாலும்
அழகான பிறைமதிதான்
என்பதை தெளிவுபடுத்து
பெண்ணே.....!
-
suthar azhaga eluthi irukiga but na sola vantha artham ungaluku puriyala villai ithan arthame veru