FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on May 13, 2012, 07:30:31 PM
-
என்னவளே !என் ஆருயிர் பொன்னவளே !
இருபதுகளின் இழையினில் இருப்பவன் நான்
அறுபதை அடைந்து, ஒன்பது ஆண்டு ஆனாலும் கூட
அன்றும், இன்றும், என்றென்றும் நீ எனக்கு சின்னவளே !
உனக்கு நினைவிருக்கின்றதா ? இல்லையா?
தெரியவில்லை . ஆனால் நினைவின் நிழல்
நிச்சயமாய் நீங்காமல் நிலைத்திருக்கும் ....
உன் மூக்கின், வனப்பின் நினைப்பினிலேயே
நினைப்பாய் திளைத்திருந்ததாலோ ?
அப்பொழுதும், இப்பொழுதும் ,எப்பொழுதும் என
முப்பொழுதும் உன்(மூக்கின்) கற்பனையில் மூழ்கியே
மூக்கின் மேன்மையை மிக மேன்மையாய்
முன் மொழிந்ததனால்தானோ ??
முக்கால் வலுவிழந்த உன் பற்கள் கூட
சிக்கல் செய்கின்றது ??
தவிர , மாதம் ஒரு சில நாட்களே தோன்றும்
உன் தோழி முழு மதி போல வந்து போகும் வயிற்று தொல்லை .....
இளமையில் பெரும்பாலும் வரும் வயசு தொல்லை போல
அடிக்கடி வர துவங்கிவிட்டதாமே ??
ஒரு வேலை வயிற்று தொல்லைக்கும் உன்மேல் தீரா காதலோ ???
கிறுக்கன் (ஆசை அஜீத் ) இவன் போல ??
வலியால் தவிப்பதாய், லேசாய் காற்று வாக்கில்
கேள்விப்பட்டேன் ,சரியோ ? தவறோ ?
கேட்டும்விட்டேன் .
உனக்காக வரி பதிப்பதையும் ,உன்னை பற்றி
வரிபதிப்பதையும் நிருத்திவிடத்தான் சிந்தித்து
சிந்தித்து சில காலமாய் எத்தனிக்கின்றேன்
தவிர்க்க முடியாமல் தத்தளிக்கின்றேன் ....